ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்துள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
உறிஞ்சு குழல்கள், முள்கரண்டிகள், காது குடையும் குச்சிகள் போன்றவை தடை செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.
2021ஆம் ஆண்டிலிருந்து தடை உத்தரவு
நடப்புக்கு வரும்.
அந்த முடிவு, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் துணைத் தலைவர் ஃபிரான்ஸ் டிம்மர்மான்ஸ் (Frans Timmermans) நம்பிக்கை தெரிவித்தார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக