ரஷ்யாவில் சக்கரத்திற்கு பதிலாக மரக்கட்டையை வைத்து டூரிஸ்ட் வேனை இழுத்துச் செல்லும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த தகவலை இந்தப் பதிவில் காணலாம்.வாகனங்களை வித்தியாசமாக உருமாற்றி பயன்படுத்தும் பல
காட்சிகளை நாம் இணையத்தில் பார்த்து
ரசித்திருப்போம். அதேபோன்று, அதிர்ச்சியான முறையில் வாகனங்களில் சாகசம் செய்வதையும் நாம் கண்டிருப்போம். ஆனால், இங்கு ஒருவர் மிகவும் வித்தியாசமான முறையில் தனது வாகனத்தை இழுத்துச் செல்கிறார். இதுகுறித்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், கியர் லிவருக்கு பதிலாக மூங்கில் குச்சியை பொருத்தி தனியார் பள்ளி பஸ் இயக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரேதேச மாநிலத்தில் தான் இச்சம்பவம் அரங்கேறியது. பிஎம்டபுள்யூ கார்மீது மோதிய அந்த பள்ளி வேன், நிற்காமலேயே சென்றுள்ளது. இதில், அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர் நீண்ட தூரம் விரட்டிச் சென்று வேனை இடைமறைத்து
நிறுத்தியுள்ளார்.
அப்போது, வேனில் கியர் லிவருக்கு பதிலாக மூங்கிள் கட்டைப் பயன்படுத்தியது தெரிவந்தது.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிஎம்டபிள்யூ காரின் உரிமையாளர், போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், வாகன ஓட்டியைக் கைது செய்தனர். மேலும், அவர் இயக்கி வந்த வேனையும் பறிமுதல் செய்து காவல்நிலையம்
எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவிலும் இதேபோன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால், இங்கு வீலுக்கு மாற்றாக மரக்கட்டைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை
அவ்வழியாகச் சென்ற சக பயணி ஒருவர், அவரது கைப்பேசி மூலம் பதிவு செய்துள்ளார். மேலும், அதனை யுடியூபிலும் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
இந்த வீடியோ காட்சியானது ஒரு பக்கம் வியப்பை ஏற்படுத்தினாலும், மறு பக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.அந்த வகையில், பின் பக்க சக்கரத்தை இழந்த அந்த மினி வேன் மரக்கட்டை மூலம்
சாலையில்
பயணிக்கின்றது. அதனை மிகப்பெரிய டிரக் லாரி டோவ் செய்து இழுத்துச் செல்கிறது. ஆனால், இதில் ஆச்சரியமாக அந்த சுற்றுலா வான் எந்தவொறு அலுங்கல் குலுங்கலும் இல்லாமல், மிகவும் சீரான நிலையில் சாலையில் பயணிக்கிறது.பின் பக்கத்தில் இணைக்கப்பட்ட அந்த மரக்கட்டை
சாலையில் உராய்கின்ற காரணத்தால், அதிலிருந்து சற்று லேசாக புகை வெளியேறுகிறது. ஆபத்தை உணராத வாகன ஓட்டி, மிகவும் பொறுமையாக, அந்த வாகனத்தை இழுத்துச் செல்கிறார். ஆனால், இதற்கு பதிலாக ஏதேனும் மெக்கானிக்கை அழைத்து வந்து பழுதை நீக்கியிருக்கலாம் என்பதே பலரின்
குரலாக இருக்கின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக