கர்ப்பமாய் இருப்பதை குழந்தை பிறப்பதற்கு வெறும் ஒரு மணிநேரம் முன்பு 47 வயது பெண்மணி தெரிந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜூடி பிரவுன்(47) என்பவர் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மருத்துவரை அணுகினார்.
ஜூடியைப் பரிசோதித்த மருத்துவர், ‘ஒன்றும் பயப்படுவதற்கில்லை, வாழ்த்துக்கள்! நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள், குழந்தை பிறக்கப் போகின்றது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஜூடி பிரவுன் தனது கணவன் ஜேசனுடன் கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். எனினும், இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. தற்போது நாற்பத்தேழு வயதை எட்டியுள்ள ஜூடி, தனது உடலில் சில மாதங்களாக ஏற்பட்ட மாற்றத்தை முதுமையின் அடையாளமாக கருதி வந்துள்ளார்.
திருமணம் முடிந்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், தான் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்ததும், ஜூடியும் அவரது கணவர் ஜேசனும், ஏதோ கனவுபோல இப்படியொரு அற்புதம் நிகழ்ந்துள்ளது என பெருமகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்தத் தம்பதிக்கு ஆரோக்கியமான, மூன்றரைக் கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு கரோலின் ரோஸ் எனப்
பெயரிட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக