நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 3 நவம்பர், 2015

மாணவன் 20 பேரை சுட்டுக்கொல்ல திட்டமிட்டர் அதிரடியாக கைது

கனடா நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் 20 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டது தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக 
கைது செய்துள்ளனர். 
கனடாவில் Halifax நகரை சேர்ந்த 30 வயதான Stephen Gregory Tynes என்ற நபர் அங்குள்ள Dalhousie பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார். ஆனால், வெளியிடப்படாத சில காரணங்களால் அந்த மாணவரை பல்கலைகழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்
. இதனிடையில்,
 அந்த மாணவர் உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு உளவியல் மருத்துவரிடமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆனால், மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தகவல்களை கூறியது மருத்துவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தான் பயின்று வந்த பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை மருத்துவர் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி தோன்றுவதாக கூறியுள்ளார். 20 பேரையும் சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள 
திட்டமிட்டுள்ளதாக
 கூறியது பொலிசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதன் பிறகு, நபரிடம் தடைசெய்யப்பட்ட ஆயுதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், பிறரை கொலை செய்ய திட்டமிட்டது மற்றும் 
தற்கொலை
 முயற்சிக்கு முயன்றது என இரண்டு குற்றவழக்குகளை பொலிசார் பதிவு செய்துள்ள நிலையில், அந்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக