நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடிய நபர்: தாயாரிடம் உடலை ஒப்படைத்த உருக்கமான சம்பவம் (காணொளி இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடா நாட்டை சேர்ந்த நபரின் உடலை முழு அரசு மரியாதையுடன் தாயாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டை சேர்ந்த John Gallagher என்ற வாலிபர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என தானாக முன்வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிரியாவில் உள்ள கனடா நாட்டு ராணுவத்துடன் இணைந்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பல கட்ட தாக்குதல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
பின்னர், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கனடிய ராணுவத்துடன் இருந்து வெளியேறி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமைப்பான குர்து போராளிகளுடன் இணைந்து தாக்குதல்களை நிகழ்த்தி 
வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் குர்து போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் John Gallagher பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயாரான Valerie Carder என்பவர், மக்களுக்காக போராட சென்று உயிரிழந்துள்ள தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
தாயார் மட்டுமின்றி அவர்கள் வசித்து வந்த ஓண்டோரியோ நகர் முழுவதிலும் அவருக்கு ஆதரவு கூடியுள்ளது.
இதனை தொடர்ந்து, உயிரிழந்த கனடிய குடிமகனின் உடலை சிரியாவிலிருந்து கனடாவிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தகுந்த அரசு மரியாதையுடன் கனடாவிற்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நபரின் சடலம் சாலையில் கொண்டு வரப்பட்டபோது, அப்பகுதி மக்கள் அனைவரும் வழியெங்கும் நின்று கனடிய தேசியக்கொடியை வீசியவாறு வாலிபருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து பேசிய அவரது தாயார், தனது மகனின் உடலை கொண்டு வருவதற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கும் கனடிய அரசிற்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக உருக்கமாக 
கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக