நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 4 நவம்பர், 2015

பிரித்தானிய பிரதமர் கமரூன்அதிர்ச்சியில் உள்ளார்!!!

சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ் படைகளை மீது பிரித்தானிய இராணுவவீரர்கள் தாக்குதல்களை நடத்தி
வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கும், கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக உதவி செய்துவருகின்றன.
இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோரியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய அரசை தோற்கடித்து, சிரியாவில் உள்நாட்டுப் போருக்கு முடிவு காண ''ஒருமித்த சர்வதேச திட்டம்'' இல்லாதவரை பிரித்தானியாவின் இராணுவ நடவடிக்கையை அங்கு விரிவுபடுத்தக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சிரியா மீதான வான்வெளி தாக்குதல் திட்டத்தை கைவிடுமாறும் கூறியுள்ளனர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த முடிவு பிரதமர் கமரூனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக