அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 6,112 கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது அண்மையில் வானொலி நிகழ்வொன்றில்
அமெரிக்க ஜனாதிபதி
ஒபாமா கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது 22 லட்சம் மக்கள் எமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் செலவிடுகிறோம்.
அதேபோன்று சாதாரண குற்றங்களை செய்தவர்கள்
அதிக அளவில்
தண்டனை பெறும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால், சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.அவர் இவ்வாறு குறிப்பிட்டதைத் தொடர்ந்தே அங்கு இந்த புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அமெரிக்க
பொருளாதாரத்திலும் சிறைச்சாலைக்கான செலவுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதி கைதிகள் வெளிநாட்டவர்களாக உள்ளனர். விடுதலையின் பின்னர் அவர்களை தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக