நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 23 நவம்பர், 2015

இன்டர்செப்டர் ஏவுகணை :உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றி கரமாக சோதனை!!!

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இன்டர்செப்டர் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
மேம்பட்ட வான் பாதுகாப்பு (AAD-Advanced Air Defence) வகையைச் சேர்ந்த இன்டர்செப்டர் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திபூர் கடல் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று காலை 9.46 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
மேல்வெளியில் பறந்து ‌எதிரிகளின் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட சூப்பர்சானிக் இன்டர்செப்டர் ஏவுகணை ராணுவத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று 
கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பைச் (DRDO) சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், பிளைட் மோடில் பறக்கும் போது இன்டர்செப்டரின் பல்வேறு காரணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக