நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 22 நவம்பர், 2015

மாணவன் ஒரு வனுக்க காக மட்டுமே செயல்படும் பள்ளி???

பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ள Skerries சமுதாய பள்ளியில் தான் Aron Anderson எனும் 10 வயது சிறுவன் படித்து வருகின்றான்.
ஆரோன் எனும் இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது.
பள்ளி நாட்களில் சிறுவன் ஆரோன் விரும்பினாலும் இல்லை என்றாலும் ஆசிரியர்களின் முழு கவனமும் அவன் மீதே இருக்கும்.
பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், ஆரோனுக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்பது, அவனுக்கு பிடித்த விளையாட்டானா உதைப்பந்தை அவனுடன் விளையாட யாரும் இல்லை
 என்பதே.
சிறுவன் ஆரோன் மட்டுமே அந்த பள்ளியின் சென்று படித்து வருவதால், பிரித்தானியாவிலேயே அதிக பணச்செலவில் கல்வி பயின்று வரும் சிறுவனாக ஆரோன் மாறியுள்ளான்.
தன்னோடு விளையாட எவரும் இல்லை என்ற வருத்தம் சிறுவன் ஆரோனுக்கு உண்டு என்றாலும், அந்த தீவினை விட்டு வெளியேற அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளான்.
ஒட்டு மொத்தமாக 70 பேர் மட்டுமே குடியிருந்து வரும் இந்த தீவின் மிக அருகாமையில் இருக்கும் நகரம் என்பது Shetland தீவின் தலைநகரமான Lerwick நகரே.
சிறுவன் ஆரோனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அருகாமையில் இருக்கும் வேறு தீவுகளில் சென்று கல்வி பயின்று வருவதால்,
ஆரோனுக்கு அவர்களை வாரவிடுமுறை நாட்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமையும்.
வீட்டில் இருந்து மிதிவண்டியில் 2 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் ஆரோனின் தினசரி வாழ்க்கை மிதிவண்டி பயணத்துடனே துவங்குகிறது.
இப்பகுதிக்கு மேலும் பல குடும்பங்கள் குடியேறினால் மட்டுமே ஆரோனின் பேச்சு துணைக்கும் கூடவே விளையாடுவதற்கும் மாணவர்கள் கிடைப்பார்கள்
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக