நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 26 நவம்பர், 2015

அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி!!!


ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகொப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகொப்டர் மேற்கு சைபீரியாவின் 
ஐகர்கா
 நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள். 
10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 2800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் பறக்கத் தொடங்கிய 15 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதனால் ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் 
உறைந்துபோயுள்ளனர்.      
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக