நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 31 ஜனவரி, 2018

கனடாவில் 10 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி

ந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் அகமது ஹுசேன் இந்த தகவலை தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் முக்கியமான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஈரான், நைஜீரியா, சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2018ஆம் ஆண்டு 3,10,000 பேர் குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. 2019ஆம் ஆண்டு 3,30,000 பேரும், 2020ஆம் ஆண்டில் 3,40,000 பேரும் குடியேற்றப்படவுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சு கூறியுள்ளது.
இதேவேளை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரிதானியா போன்ற நாடுகள் வெளிநாட்டவர்கள் குடியேறுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், கனடா அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

இளவரசர் எட்வர்ட் இன்று மாலை இலங்கை வந்தார்

எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிநிதியான இளவரசர் எட்வர்ட்
 இன்று மாலை இலங்கை வந்தார்
இளவசர் எட்வர்ட் பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் எடிம்பரே கோமகன் பிலிப்ஸ் ஆகியோரின் இளைய புதல்வர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வரும் இளவரசர் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதுடன் சில இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.இதற்கு அமைய இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது துணைவியார் இளவரசி சோபி ஆகியோர் நாளைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில்
 ஈடுபட உள்ளனர்.
அன்றைய தினம் அவர்கள் பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்ய உள்ளனர்.அத்துடன், இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் எதிர்வரும் 3 ஆம் திகதி இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் நடைபெறும் மாணவர்களின் கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் கலந்து 
கொள்ள உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 29 ஜனவரி, 2018

யாழில் இங்கிலாந்திலிருந்து சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்$

இங்கிலாந்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகைத்தந்த ஒருவரை தாக்கி தள்ளிவிட்டு அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்து சென்ற மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரட்டைப்பிரஜாவுரிமை கொண்ட குறித்த நபர் கடந்த மாதம் இலங்கைக்கு வந்துள்ளார். பின்னர் யாழ். ஊர்காவற்துறையில் தங்கியிருந்து வியாபாரம் செய்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதனிடையே கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகர் சின்னாலடி பகுதியில் குறித்த நபர் சென்றுகொண்டிருந்த போது அவரை துரத்தி வந்த மூவர் குறித்த நபரை தாக்கி, மோட்டார் சைக்களில் இருந்து தள்ளி விட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடியதுன், வெளிநாட்டு நாணயங்களையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இவர்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையின் பெறுமதி 412,460 ரூபாய் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் 27, 31, 32 வயதுகளை உடையவர்களாகும்.
இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஊர்காவற்துறை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>¨



சனி, 27 ஜனவரி, 2018

பிரான்ஸ் தலைநகரில் பெருக்கெடுக்கும் வெள்ள அனர்த்தம்

சென் நதி பெருக்கெடுத்துள்ளதால், பிரான்ஸ் தலைநகர் பெரிஸ்ஸில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால், பெருமளவான வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் என்பன நீரில் மூல்கும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிக மழைவீழ்ச்சியின் காரணமாக சென் நதியின் நீர்மட்டம் அதிகரித்ததைமையே இந்த வெள்ள
 நிலைமைக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பல வீதிகள் நீர்ல் மூழ்கியுள்ளன. க்ரைமியன் இராணுவச் சிப்பாய் ஒருவரின் உருவச் சிலையே, பெரிஸ் நகரின் வெள்ள நிலைமையை மதிப்படும் அளவுகோளாக கருதப்படுகிறது.
இந்த நிலையில், நேற்றைய தினம் வெள்ள நீர்மட்டம் அந்தச் சிலையின் கழுத்தளவுக்கு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1910 ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த வெள்ளப் பெருக்கில்
, நீர்மட்டமானது,
 குறித்த சிலையின் கழுத்தளவில் காணப்பட்டதாகவும், அந்த வெள்ள நிலைமை இரண்டு மாதங்களுக்கு நீடித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 26 ஜனவரி, 2018

சீனா!! ஒரே இரவில் 09 மணித்தியால ஒரு ரெயில் நிலையத்தை நிர்மாணித்து

அசாத்திய வேகம், தெளிவான திட்டம் ஆகியவற்றால் சீனா எந்த சவால்களையும் இலகுவாக முறியடித்து விடுகின்றது. அவர்களின் கடின உழைப்புக்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ திட்டங்களை கூறினாலும், சமீபத்தில் ஒரே இரவில் ஒரு ரெயில் நிலையத்தையே 
முழுவதுமாக 
கட்டமைத்துள்ளனர்.ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள லோங்யான் நகரில் தான் இந்த ரெயில் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் வழித்தடத்தில் புதிதாக ரெயில்
 நிலையம் அமைக்க தேவைப்பட்டதால், கடந்த 19-ம் திகதி   இரவில் பணிகள் தொடங்கப்பட்டு மறுநாள் காலை முடிக்கப்பட்டுள்ளன. 9 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பணிகள் முடிக்கப்பட்டன.
1500 தொழிலாளர்கள் 7 குழுக்களாக பிரிந்து தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளதாக சீனா
 டைஸிஜு கட்டுமான நிறுவனத்தில் துணை மேலாளர் ஷான் தாவ்சாங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள்
, இந்த வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படும் என அந்நாட்டு ரெயில்வேத் துறை தெரிவித்துள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 24 ஜனவரி, 2018

துருக்கியப்படைகள் கிராமங்களைக் கைப்பற்றியது

துருக்கிய படைகள் வடமேற்கு சிரியாவில் பல கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள குர்திஷ் படைகளை
 வெளியேற்றுவதற்கான முக்கிய தாக்குதல்களில் ஒரு பகுதியாக, துருக்கியின் தரைப்படை வடக்கு சிரியாவிற்குள் நுழைந்து தாக்குதல் 
மேற்கொண்டுள்ளது.
எனினும், தனது பகுதியில் இருந்து துருக்கி படைகளை பின்வாங்கச் செய்துள்ளதாக குர்திஷ் படைகள் தெரிவித்துள்ளன. துருக்கிக்கு பதிலடியாக துருக்கி எல்லை பகுதியில் ஏவுகணை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குர்திஷ் சார்பில் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 20 ஜனவரி, 2018

பிரான்ஸ் பிரஜை தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்டார்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இந்தச் சம்பவம்
 இடம்பெற்றுள்ளது.
மணமகனும் மணமகளும் தமிழர்கள்போல் உடையணிந்து திருமணத்திற்குச் செய்யவேண்டிய கலாசாரச் சடங்குகள் யாவற்றையும் கடைப்பிடித்து இந்த திருமணத்தினச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் கரோலின் ஆகிய காதலர்களே புதுச்சேரியில் இவ்வாறு திருமணம் செய்துகொண்டனர். 
இந்த திருமணம் புதுச்சேரி மாநிலம் முதலியாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோவிலில் இடம்பெற்றுள்ளது.
மணமகள், மணமகன் ஆகியோரின் உறவுகள் தமிழர் கலாசார உடையணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். 
அத்துடன் மணமகன் மணமகளின் நெற்றியிலே திலகமிட்டு கழுத்திலே தாலியையும் கட்டிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சிக்குரியதாக ஆக்கியுள்ளது.
ஆங்கிலேயரின் காலணித்துவ காலத்தில் புதுச்சேரி மாநிலம் பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்தின்கீழ்  இருந்தது. இந்தியா சுதந்திரமடைந்தபின்பும் பிரான்ஸ் நாட்டு மக்களின் கலாசாரத்தொடர்புகள் புதுச்சேரியுடன் இருந்துவந்துள்ளன என்பது 
குறிப்பிடத்தக்கதாகும்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> >>


திங்கள், 8 ஜனவரி, 2018

பிரான்ஸ அரசு வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை மக்களுக்கு

பிரான்ஸின் செயின் நதியின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாரிஸில் செயின் நதியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 1.6 மீட்டரிலிருந்து 3.2 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது 
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது அடுத்த 72 மணி நேரத்தில் மேலும் உயரும் என்பதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர். எனவே பாரிஸ் நகர மக்களுக்கு பிரான்ஸ் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் செயின் நதியின் ஊடாக படகு பயணம் செய்யக்கூடாது எனவும், நதியின் அருகில் குடியிருப்பவர்கள் எச்சரிக்கையாக இருப்பதுடன் உடைமைகளை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் நதியின் அருகில் உள்ள நெடுஞ்சாலை பகுதிகள் மற்றும் பாதசாரிகளுக்கான நடைபாதைகள் ஆகியவை எதிர்வரும் நாட்களில் மூடப்பட வாய்ப்பு உள்ளதாகவும் காவல் தலைமையகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>