நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 27 மே, 2021

கொரோனாவால் கத்தாரில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

  கத்தார் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் சற்று குறைவடைந்துள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 881 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளதோடு 1,556 பேர் நோயிலிருந்து மீட்கப்பட்டுள்ளார் என பொது சுகாதார அமைச்சகம்27-05-2021., இன்று
 அறிவித்துள்ளது, இது கத்தார் மாநிலத்தில் 
மீட்கப்பட்ட மொத்த 
நோயாளிகளின் எண்ணிக்கை 68,319 ஆக
 அதிகரித்துள்ளது. மேலும் வைரஸ் தொற்றுக்கு இலக்கான  4 மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில், வைரஸ் தொற்றுக்கு இலக்கனா 8 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 221 பேர்  தீவிர சிகிச்சையில் பிரிவில் சிகிச்சை 
பெற்றுவருகின்றனர்.
இன்று உயிரிழந்தவர்கள்  37, 55, 61 மற்றும் 69 வயதுடையவை என்றும் அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

புதன், 26 மே, 2021

இந்தோனேசியா- ஆஸ்திரேலியா கடல்பகுதியில் ரோந்து நடவடிக்கை

இந்தோனேசிய- ஆஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், ஆஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து மேற்கொண்டிருக்கிறது. 
கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்தோனேசியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் விதமாக OPERATION GANNET எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 
“கொரோனா பெருந்தொற்று சூழல் எங்களிடையேயான ஒன்றிணைவைப் பாதிக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகளின் வலிமையைத் திறனை ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையில் காண முடிந்தது,” எனத் தெரிவித்திருக்கிறார் இந்தோனேசிய கடலோர காவல்படையின் தலைமை
 அதிகாரி A’an Kurnia. 
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் GANNET நடவடிக்கை அந்நாடுகளுக்கு இடையிலான பாதுகாக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என்பது சட்டவிரோத, கட்டுப்பாடற்ற மீன்பிடி செயல்களை 
தடுப்பது, ஆட்கடத்தல், மனிதக் கடத்தல் முயற்சிகளைத் தடுப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நாடுகடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்துவதாகும். 
ஆஸ்திரேலியாவுடன் எல்லையைப் பகிரக்கூடிய இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி இந்நடவடிக்கையின் கீழ் வரும் 
பகுதியாக உள்ளது. 
“ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதில் ஆஸ்திரேலியா விழிப்புடன் உள்ளது. அதே சமயம், இந்த அச்சுறுத்தல்கள் ஆஸ்திரேலியாவை மட்டுமல்ல சுற்றியுள்ள பிரதேசத்தையும் பாதிக்கக்கூடியது,” என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதிச்செய்யும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கடல்சார் எல்லைக் கட்டளையின்
 தளபதி Mark Hill. 
இந்தோனேசியா- ஆஸ்திரேலியா இடையிலான கடல் பகுதி வழியே கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் உள்படப் பல நாடுகளின் அகதிகள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்
. இவ்வாறான தஞ்ச முயற்சிகளை ஆட்கடத்தல் 
நிகழ்வுகளாகக் கருதும் ஆஸ்திரேலிய அரசு அவ்வாறு தஞ்சமடைய முயல்பவர்களை நாடுகடத்தி வருகின்றமை இங்கு 
குறிப்பிடத்தக்கது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 18 மே, 2021

அமெரிக்க நீதிமன்றம் இலங்கையில் பிறந்த கனேடிய பிரஜைக்கு சிறைத்தண்டனை

சர்வதேச மனித கடத்தல் வளையத்தில் பங்கு வகித்ததற்காக இலங்கையில் பிறந்த  கனேடிய நபருக்கு புளோரிடாவில் 32 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை 
திங்களன்று அறிவித்தது.
இலங்கையில் பிறந்த கனேடிய குடிமகனான (மோகன் அல்லது ரிச்சி என்றழைக்கப்படும்) ஸ்ரீகஜமுகம் செல்லையா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
இவர் பிப்ரவரி 24 அன்று குற்றத்தை ஒப்புக்கொண்டார். 
இலங்கையிலிருந்து ஆவணப்படுத்தப்படாத குடியேறியவர்களை கரீபியன் வழியாக அமெரிக்காவிற்கு பணத்திற்காக கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட கடத்தல் வளையத்துடன் இவர் 
தொடர்பிலிருந்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்காக துர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகளில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் 2020 ஆகஸ்டில் ஒப்படைப்பு கோரிக்கையின் பேரில் அவர் அமெரிக்காவிடம்
 ஒப்படைக்கப்பட்டார்.
அமெரிக்கா வழியாக கனடா செல்லும் வழியில் ஆவணமற்ற குடியேறியவர்களுக்கு வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஏற்பாடு செய்ய செல்லையா மற்ற மனித கடத்தல்காரர்களுடன் இணைந்து
 பணியாற்றினார்.
ராயல் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் பொலிஸ் படைகளின் (ஆர்டி & சிஐபிஎஃப்) தகவலின் படி, பல இலங்கையர்கள் மற்றும் ஒரு இந்தியர் உட்பட 158 பயணிகளுடன் துருக்கியர்கள் மற்றும் கைகோஸ் அதிகாரிகள் 158 பயணிகளுடன் ஒரு படகில் அவரைக் கண்டபோது செல்லையா  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 11 மே, 2021

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் மே 12-ந்திகதி

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்திகதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.
மருத்துவ பணிகளில் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள். செவிலியர்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. உலக செவிலியர் அமைப்பு, 1965-ம் ஆண்டில் இருந்து
 பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகரிய உணர்த்தும் விதமாக சர்வதேச 
செவிலியர் தினத்தை 
கொண்டாடி வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, 
கொண்டாடிவருகிறது.
உலகத்தையே தனது கோர பிடிக்குள் வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் ரத்த சொந்தங்களே
 அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இந்த காலக்கட்டத்தில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடி வருபவர்களில் செவிலியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதை நாம் யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து 
விடவும் கூடாது. 
முன்களத்தில் நின்று போராடும் செவிலியர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி தங்களது இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும், செவிலியர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நமது 
மருத்துவத்தின் உயிர் நாடி என்கிறோம். கொரோனா சிறப்பு பணிகளை சுழற்சி முறைகளில் செவிலியர் முடித்து கொண்டு வீட்டுக்கு போனாலும், தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க
 முடியாமல் இருக்கக் கூடிய கடினமான சூழ்நிலையை தான் இன்றைய காலக்கட்டதில் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கொரோனா சிறப்பு பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செவிலியர்கள் பலர் தங்களது குழந்தையை கூட கொஞ்ச முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு
 இருக்கிறார்கள்.
மருத்துவத்தின் இதய துடிப்பாக இருக்கும், இவர்களது தூய சேவையில், நம்பிக்கையில் இயங்குகிறது உலகம். ஆகையால் இந்த உலக செவிலியர் தின நன்னாளில் நாம் அனைவரும் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>