இந்தோனேசிய- ஆஸ்திரேலிய கடல் எல்லையில் ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையை ஆஸ்திரேலிய எல்லைப்படை, இந்தோனேசிய கடலோர காவல்படை, கடல்சார் மற்றும் மீன்வளக் கண்காணிப்புக்கான இயக்குநரக ஜெனரல், ஆஸ்திரேலிய மீன்வள மேலாண்மை ஆணைக்குழு இணைந்து மேற்கொண்டிருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டு முதல், இந்தோனேசியா- ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான கடல் பகுதியில் நிகழக்கூடிய சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் விதமாக OPERATION GANNET எனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
“கொரோனா பெருந்தொற்று சூழல் எங்களிடையேயான ஒன்றிணைவைப் பாதிக்கவில்லை. ஆஸ்திரேலியா மற்றும் இந்தோனேசியாவின் கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகளின் வலிமையைத் திறனை ஐந்தாவது ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கையில் காண முடிந்தது,” எனத் தெரிவித்திருக்கிறார் இந்தோனேசிய கடலோர காவல்படையின் தலைமை
அதிகாரி A’an Kurnia.
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியாவால் முன்னெடுக்கப்படும் GANNET நடவடிக்கை அந்நாடுகளுக்கு இடையிலான பாதுகாக்கும் விதமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் என்பது சட்டவிரோத, கட்டுப்பாடற்ற மீன்பிடி செயல்களை
தடுப்பது, ஆட்கடத்தல், மனிதக் கடத்தல் முயற்சிகளைத் தடுப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது, நாடுகடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்துவதாகும்.
ஆஸ்திரேலியாவுடன் எல்லையைப் பகிரக்கூடிய இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி இந்நடவடிக்கையின் கீழ் வரும்
பகுதியாக உள்ளது.
“ஆஸ்திரேலியாவுக்கு உட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் அச்சுறுத்தல்களைக் கண்காணிப்பதில் ஆஸ்திரேலியா விழிப்புடன் உள்ளது. அதே சமயம், இந்த அச்சுறுத்தல்கள் ஆஸ்திரேலியாவை மட்டுமல்ல சுற்றியுள்ள பிரதேசத்தையும் பாதிக்கக்கூடியது,” என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பை உறுதிச்செய்யும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கடல்சார் எல்லைக் கட்டளையின்
தளபதி Mark Hill.
இந்தோனேசியா- ஆஸ்திரேலியா இடையிலான கடல் பகுதி வழியே கடந்த காலங்களில் ஈழத்தமிழர்கள் உள்படப் பல நாடுகளின் அகதிகள் ஆஸ்திரேலியாவில் படகு வழியாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்
. இவ்வாறான தஞ்ச முயற்சிகளை ஆட்கடத்தல்
நிகழ்வுகளாகக் கருதும் ஆஸ்திரேலிய அரசு அவ்வாறு தஞ்சமடைய முயல்பவர்களை நாடுகடத்தி வருகின்றமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக