நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 16 ஏப்ரல், 2019

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான தேவாலயம் தீ விபத்து

பாரிஸ் நகரில் 850 ஆண்டு பழமையான  உள்ள நோட்ரே டேம் கேதட்ரல் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 
15,04,2019, மாலை 5.30 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் நகரம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
தீயணைப்புப்படையினர் தீயை அணைக்க தொடர்ந்து போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 
உலகிலேயே ஐரோப்பிய கட்டிட கலையை பறைசாற்றும் வகையில் உதாரணமாகத் திகழ்ந்த இந்த பழமையான தேவாலயத்தில் தீவிபத்து ஏற்பட்டது பாரிஸ் மக்களை 
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 15 ஏப்ரல், 2019

மீண்டும் இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்
 தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்திலிருந்து வெகு தூரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை,இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை கடந்த டிசம்பரில் வெடித்துச் சிதறியது.இதனையடுத்துக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளை
 சுனாமி தாக்கியது.
இதில் சிக்கி 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்
இந்நிலையில், இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செல்பி விமான நிலையம் முன்பு '' எடுத்தால் மரண தண்டனை

தாய்லாந்தில் விமான நிலையம் முன்பு 'செல்பி' எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.
இதனால் விமான நிலையத்துக்கு வரக்கூடிய மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறப்பது வழக்கம்.
இதன் காரணமாக கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி விதவிதமாக 'செல்பி' படங்களை 
எடுக்கின்றனர்.
இது அவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதோடு, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி பெரும் விபத்துகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருப்பதால் விமான நிலையம் முன்பு 'செல்பி' படம் எடுக்க மாகாண 
அரசு தடைவிதித்தது.
எனினும் சுற்றுலா பயணிகள் அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து விமானங்களுடன் 'செல்பி' எடுப்பதை வழக்கமாக 
கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், தடையை மீறி விமான நிலையம் முன்பு 'செல்பி' படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது.
அரசின் இந்த முடிவு சுற்றுலாவை வெகுவாக பாதித்து, கடற்கரையை மூட வழிவகுக்கும் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
உலகச்செய்திகள் 11.04.2019
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


லூட்டன் வானூர்தி நிலையத்தில் 4 இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் லூட்டன் அனைதுலக வானூர்த்தி நிலையத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 4 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 ஆண்களும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகம் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நான்கு பேரும் பெட்போர்ட்செரீப் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 4 பேரும் கடந்த புதன்கிழமை லூட்டன் அனைத்துலக வானூர்தி நிலையத்தில் வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் மேலும் தகவல் 
வெளியிட்டுள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 11 ஏப்ரல், 2019

இலங்கை கனடா இடையே முடிவான புதிய ஒப்பந்தம்

மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தில் 100 மெகாவோட்ஸ் வலுவுடைய மிதக்கும் சூரிய மின்சக்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சுக்கும் 
கனடியன் கொமர்ஷியல் கோப்ரேஷன் (Canadian Commercial Corporation) நிறுவனத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (09) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றது.
மின்சக்தி பிரச்சினைக்கு தீர்வளிக்கும் முகமாக குறைந்த செலவிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி முறைகளை கையாளும் முகமாக மகாவலி பொருளாதார வலயங்களுக்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்களை நிர்மாணிக்கும்
 வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஞ்ஞான தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு,
 மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு ஆகியன முன்வைத்த பிரேரணைக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய பல பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படும் இவ்வகையான மிதக்கும் சூரிய சக்தி மின் நிலையங்களினால் 2030 ஆம் ஆண்டளவில் இந்நாட்டு மின்சார தேவையின் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சக்தியினால் பூர்த்திசெய்து கொள்வதற்கு
 எதிர்பார்க்கப்படுகின்றது.
அதன் முதலாவது வேலைத்திட்டம் மகாவலி வலயத்திற்குட்பட்ட மாதுறு ஓயா நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், சூரிய படல்கள் மற்றும் மின்சாரத்தை சேமிக்கக்கூடிய மின்கலங்களைக் கொண்டு சூரிய சக்தியை சேமிக்கும் செயற்திட்டம் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்திற்கு நீர்த்தேக்கத்தில் 500 ஏக்கர் அளவிலான இடத்தை பயன்படுத்த எண்ணியுள்ளதுடன், அந்த பரப்பளவு நீர்த்தேக்கத்தின் நூற்றுக்கு 4 சதவீதத்தைவிட
 குறைந்ததாகும்.
இந்த செயற்திட்டத்தை துரிதமாக நிறைவுசெய்ய திட்டமிட்டுள்ளதுடன், முதலாவதாக 10 மெகாவோட்ஸ் மின்சாரத்தை இந்த ஆண்டு நம்பர் மாத இறுதியில் பூர்த்தி செய்வதற்கும் 2020 செப்டெம்பர் இறுதியில் 100 மெகாவோட்ஸ் மின் உற்பத்தியை அடைவதற்கும்
 திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்
 கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் ஆசிய வலயத்திற்கான பணிப்பாளர் Yvonne Chin அவர்களும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, மின்வலு, சக்திவலு மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர 
திசாநாயக்க ஆகியோரும் மின்வலு, சக்திவலு அமைச்சின் அதிகாரிகளும் இலங்கைக்கான கனேடிய தூதுவர் David McKinnon மற்றும் Canadian Commercial Corporation நிறுவனத்தின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வாழைப்பழப் பெட்டிகளுக்குள் ஜெர்மனியில் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 28 மில்லியன் டொலர்.
வாழைப் பழங்களிடையே பதுக்கப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, எங்கு செல்ல வேண்டியது என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த ஆண்டு இதே போல அன்னாசிப் பழங்களுக்கு இடையே 109 கிலோகிராம் போதைப்பொருள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


>

இலங்கை தமிழர் அவுஸ்திரேலியாவில் தீ விபத்து! காயம்

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் இலங்கை தமிழ் அகதி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மெல்பேர்னிலுள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலேயே குறித்த இலங்கையர் 
காயமடைந்துள்ளார்.
இலங்கையை சேர்ந்த விக்னேஷ் வரதராஜா என்ற அகதியே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள விக்னேஷ், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும்
 தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட விக்னேஷின் மருத்துவ செலவிற்காக 13,000 டொலருக்கும் அதிக பணம் புலம்பெயர் தொழிலாளர்களால் திரட்டப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை இடம்பெற்ற இந்த தீவிபத்தில் தொழிற்சாலையின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதுடன், தீயை கட்டுப்படுத்துவதற்கு 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தீயணைப்பு வாகனங்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உள்நாட்டு யுத்தம் காரணமாக அவுஸ்திரேலியா சென்ற விக்னேஷ், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளார் 
என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 5 ஏப்ரல், 2019

யாழ் இளைஞன் லண்டனில் கார் விபத்தில் சிக்கி பலி

பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.லண்டனில் 04,04,2019, இடம்பெற்ற
 கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.வடமராட்சி கரவெட்டி துன்னாலை தெற்கு தில்லையப்புலத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

ஆருயிர் நண்பனை 6 ஆண்டுகளாக தன் தூக்கிச் செல்லும் சிறுவன்

சீனாவில் சிறுவன் ஒருவன் தமது மாற்றுத்திறனாளி நண்பனை கடந்த 6 ஆண்டுகளாக தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்வது அங்குள்ள ஊடகங்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் மீஷன்
 நகரத்தில் ஸூ பிங்யாங் என்ற 12 வயதுச் சிறுவன் பெற்றோருடன் வசித்து வருகிறான்.அதே பகுதியில் ஸாங் ஸீ என்னும்
 மாற்றுத் திறனாளி சிறுவனும் வசித்து வருகிறான். இருவரும் சிறிய வயது முதலே நண்பர்கள்.
மட்டுமின்றி மாற்றுத் திறனாளி சிறுவனான 
ஸாங் ஸீயை கடந்த ஆறு வருடங்களாக ஸீ பிங்யாங் தன் தோளில் சுமந்து பாடசாலைக்கு அழைத்துச் செல்கிறான்.பாடசாலையில் வகுப்பறை, சாப்பிடும் இடம், கழிவறை என எங்கு செல்ல வேண்டும் என்றாலும் மற்றவரின் உதவியில்லாமல் ஸாங் ஸீயால்
 செல்ல முடியாது¨
கடந்த ஆறு வருடங்களாக பிங்யாங் தான் ஸாங் ஸீயை பாடசாலை வளாகம் முழுவதும் சுமந்து செல்கிறான்.இந்த அற்புதமான நட்பைக் குறித்து சீன ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.அதில் நண்பர்கள் இருவரும் பிரமாதமாக பதிலளித்துள்ளனர். அவனைச் தூக்கிக் கொண்டு நடப்பதில் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. மகிழ்ச்சியாகத்தான்
 இருக்கிறேன்.
நான் 40 கிலோ, என் நண்பன் 25 கிலோ இருக்கிறான், என் நண்பனின் ஊன்று கோலாக இருப்பதில் எனக்குப் பெரு மகிழ்ச்சி என்று கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளான் ஸூ பிங்யாங்
ஸாங் ஸீ கூறுகையில், எனக்கு அரிய வகை தசை நோய் வந்ததால் 4 வயதிலிருந்தே நடக்க முடியாது. இந்தப் பாடசாலையில் சேர்ந்ததிலிருந்தே என் நண்பன்தான் எனக்கு எல்லா விதத்திலும் உதவியாக இருக்கிறான்.சாப்பிடுவதற்குச் செல்வது, வகுப்பறைக்குச் செல்வது, கழிவறைக்குச் செல்வது, தண்ணீர் நிரப்பச் செல்வது என எங்குப் போனாலும் என் நண்பன்தான் கூட்டிச் செல்வான்.
என் கூடவே இருந்து பேசிக் கொண்டே இருப்பான். அவன் இல்லையென்றால் நான் இல்லை என்று, நன்றியுணர்வோடு
 பேசியிருக்கிறான்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வியாழன், 4 ஏப்ரல், 2019

பங்குபெறும் இலங்கை பெண் உலக பெண்கள் வழிகாட்டல் பங்கான்மையில்

ஐக்கிய அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ச்சூன்-அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உலக பெண்களின் வழிகாட்டல் பங்கான்மையில் ஹேலிஸ் பில்சி நிறுவனத்தின் மூலோபாய வர்த்தக அபிவிருத்தியின் தலைவர் மனோஹரி அபயசேகர பங்கேற்றுள்ளார்.(sri Lankan female business leader participates fortune mentorship pogram)

குறிப்பாக 15 நாடுகளிலிருந்து கலந்துகோண்ட பெண் தலைவர்களில் மனோஹரி அபயசேகரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை
 விசேட அம்சமாகும்
மனோஹரி அபயசேகரவும் ஏனைய 18 பேரும் ஃபோர்ச்சூன் பலமான பெண்கள் சமூகத்தைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரிகளுடன் இணைந்து வர்த்தக மற்றும் தலைமைத்துவத் திறன்களை அதிகரிப்பது தொடர்பில் பாணியாற்றவுள்ளதாகவும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா.பி.டெப்லிட்ஸ் கருத்து தெரிவிக்கையில், பெண்கள் வர்த்தக முயற்சியொன்றுக்கு தலைமைதாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிறுவனம், சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நாம் அனைவரும் நன்மையடைவோம் என குறிப்பிட்டார்.

மேலும் மதிப்புக்குரிய இத்திட்டத்தில் பங்குபெற்றுவதற்கு அபயசேகர தெரிவுசெய்யப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சிறந்த பெறுபேறுகளை வழங்குவதன் மூலமாகஅவருடைய திறமையை வெளிக்காட்டுவதுடன், வளர்ந்துவரும் திறமையாளர்களுக்கு சேவையாற்றக்கூடிய வழிகாட்டியாகவும் அவரை வலுப்படுத்தும்’ என்றார்.

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மறுசீரமைப்பதில் அபேசேகர ஈடுபட்டதன் ஊடாக ஹேலிஸில் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளார்.

ஃபோர்ச்சூன்-அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உலகப் பெண்கள் வழிகாட்டல் பங்கான்மையானது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஃபோர்ச்சூனின் மிகவும் பலமான பெண்கள் 
மற்றும் முக்கியமான உலகக் குரல்களின் பங்கான்மை ஆகியவற்றை இணைத்த அரச தனியார் பங்கான்மைத் திட்டமாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அமெரிக்கத் தலைவர்கள் பெண்களின் பொருளாதார வலுப்படுத்தல்களுக்கு நிபுனத்துவம் வழங்கு
வதாக இந்தப் பங்கான்மை அமைகிறது. இந்தத் திட்டத்தின் பூர்த்தியில் வழிகாட்டலில் தமது நாடுகுளுக்குத் திரும்பும்போது வர்த்தகம் மற்றும் தலைமைத்துவ திறங்களை அதிகரித்தவராகவும் சமூகத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துபவராகவும்
 விளங்குவர்.
இந்த வருடம் பொஸ்னியா, ஹெர்சிகோவினா, கொலம்பியா, எகிப்து, பிஜி, கானா, இந்தியா, கென்யா, வடக்கு மக்கடோனியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, போலந்து, ரஷ்யா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வளர்ந்துவரும் தலைமைத்துவ வழிகாட்டல்களில் பங்கேற்கின்றனர்.
இத்திட்டத்தில் பங்குபற்றிய 320ற்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் மதிப்புக்குரிய கம்பனிகளான கோல்ட்மான் சாக்ஸ், ஜொன்சன் அன்ட் ஜொன்சன், கார்டியன் லைப் மற்றும் அக்சென்சர் ஆகியவற்றின் வழிகாட்டிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றமை
 குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 3 ஏப்ரல், 2019

உலகளவில் 200 கோடி அடிப்படை குடிநீர் வசதி இல்லா மக்கள்

தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக,  உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள 
யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால் சர்வதேச அளவில் 
மருத்துவமனைக்கு செல்லும் 15 சதவீதம் பேருக்கு  தொற்றுநோய் ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 17 மில்லியன் பெண்களுக்கு
 மேல்  தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு போதுமான வசதிகள் இல்லாத மையங்களில் அல்லது மருத்துவமனைகளில் குழந்தை 
பிறக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற நிலை அதிகம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் செயல்படும் சுகாதார
 வசதி மையங்களில் நான்கில் ஒரு பங்கு மையத்தில் அடிப்படை நீர் வசதி இல்லை என தெரிவித்துள்ளது. அதேபோல, 5ல் ஒரு பங்கு மையங்களில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில்
 உள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் நிதியமான யூனிசெப் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் 200 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
. அதேபோல
 சுகாதாரம் மற்றும் அடிப்படை குடிநீர் இல்லாததால் ஒரு வருடத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நோய் தொற்று 
காரணமாக 26% குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து
 விடுவதாகவும், 11% குழந்தைகள் தாய்வழி தோற்று நோய் காரணமாக
 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
. இந்த வருடம் 
மே மாதம் நடக்கவுள்ள உலக சுகாதார சபையில் மருத்துவமனையில் உள்ள 
அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க 
திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 1 ஏப்ரல், 2019

சர்வ தேசத்தில் முட்டாள்கள் தினம் எவ்வாறு உருவானது

ஏப்ரல் 1 .இந்நாள் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் தெரிகிறது.
16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின்பல நாடுகளில் ஏப்ரல் 1 இலேயே புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13வது கிரகரி அவர்கள் பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக்கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்றுதான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது.
எனினும் இந்தப் „புதிய“ புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852ம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வேபோன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோகபூர்வமாக
 ஏற்றுக் கொண்டன.
புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள் இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்பிரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்பிரல் முட்டாள்கள் என்று இவர்கள் அழைத்தார்கள். இதலிருந்து ஏப்பிரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
எனினும் 1582ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதேபோல் டச்சு மொழியிலும் 1539ம்ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருப்பதை 
அறியக் கூடியதாக உள்ளது.
1466ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்பிரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>