இந்தோனேஷியாவில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் சுலவேசி தீவின் கிழக்குப் பகுதியில் 17 கிலோ மீற்றர்(10.5 மைல்) ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.8 எனப் பதிவாகியிருப்பதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்புள்ளி பாலு நகரத்திலிருந்து வெகு தூரத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புக் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதேவேளை,இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவில் குமுறிக் கொண்டிருந்த கிரகடாவ் என்ற எரிமலை கடந்த டிசம்பரில் வெடித்துச் சிதறியது.இதனையடுத்துக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுந்தா ஜலசந்தியை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளை
சுனாமி தாக்கியது.
இதில் சிக்கி 300 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 800 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்
இந்நிலையில், இந்தோனேஷியாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக