நிலாவரை .கொம்

siruppiddy
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 1 ஜூலை, 2024

மக்ரோனின் கட்சி பிரான்ஸ் தேர்தலில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது

பிரான்ஸ் பொதுத் தேர்தலில் மரைன் லா பென்னின் தீவிர வலதுசாரி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கூட்டணிக் கட்சி அங்கு பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 
இதற்கிடையில், வலதுசாரி கட்சியின் வெற்றிக்கு எதிராக பாரிஸ் தலைநகரில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர்.
 அவர்களுக்கும் கலவர தடுப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 என்பது குறிப்பிடத்தக்கது







 

ஞாயிறு, 14 மே, 2023

ஸ்காட்லாந்தில் விரைவில் அறிமுகமாகும் உலகின் முதல் ஓட்டுநர் இல்லாத பேருந்து

உலகின் முதல் ஓட்டுனர் இல்லாத பேருந்தை இயக்க ஸ்காட்லாந்து அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் இந்த பேருந்து பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும் 
அறிவிக்கப்பட்டுள்ளது.
 உலகிலேயே இதுதான் முதல் முறை
உலகின் ஓட்டுனர் இல்லாத கார்கள் ஏற்கனவே இயக்கப்பட்டுள்ள நிலையில் ஓட்டுநர் இல்லாத பேருந்து முதல் முறையாக ஸ்காட்லாந்து நாட்டில் இயக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பேருந்து நிறுவன நிர்வாகி தெரிவித்துள்ளார்.
தானியங்கி பயணிகள் பேருந்துகள் இயக்கப்படுவது உலகிலேயே இதுதான் முதல் முறை என்றும் கூறப்படுகின்றது
அதோடு சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த பேருந்துகள் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் முழு அளவிலான தானியங்கி பேருந்துகளுக்கு இன்னும் அரசு அனுமதி தராததால் ஒவ்வொரு பேருந்திலும் பாதுகாப்பு ஓட்டுனர் என்று ஒருவர் அந்த பேருந்து இயக்கப்படுவதை கண்காணித்துக் கொண்டிருப்பார் என்றும் பேருந்து நிர்வாகி தெரிவித்துள்ளார்


  


 

வியாழன், 8 டிசம்பர், 2022

பணக்காரர் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தை இழந்த எலான் மஸ்க் - முதலிடத்தில் யார்?

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தை எலான் மஸ்க் இழந்துள்ளார். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு 
விலைக்கு வாங்கினார். 
இதையடுத்து அவர் டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றார். இதற்கிடையே டுவிட்டர் நிறுவனத்தில் ரூ.3½லட்சம் கோடி முதலீடு செய்ததாலும் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததாலும் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு குறைந்தது. 
இதையடுத்து எலான் மஸ்க்கை முந்தி பிரான்ஸ் தொழில் அதிபர் பெர்னார்ட் அர்னால்ட் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற 
இடத்தை பிடித்தார். 
போர்ப்ஸ் பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் ரூ.15.29 லட்சம் கோடி சொத்துடன் முதலிடத்தில் உள்ளார். எலான் மஸ்க் ரூ.15.28 லட்சம் கோடியுடன் 2-வது இடத்துக்கு இறங்கினார். 
இந்த ஆண்டு தொடக்கத்தில் உலகின் நம்பர் ஒன் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எலான் மஸ்க்குக்கும் பெர்னார்ட் அர்னால்ட்டுக்கும் இடையேயான சொத்து மதிப்பு வித்தியாசத்தில் மிக குறைந்த அளவிலேயே உள்ளது. 
இதனால் எலான் மஸ்க்கின் நிறுவனங்களின் பங்கு சற்று உயர்ந்தாலும் அவர் மீண்டும் முதலிடத்தை பிடிக்க அதிக 
வாய்ப்பு உள்ளது. 
டெஸ்லாவின் பங்குதாரர்கள் கூறும் போது, 'டுவிட்டரில் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்தியதே டெஸ்லாவின் பங்கு குறைய காரணமாக
 இருந்தது' என்றார். 
டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். சுமார் 4 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 7 டிசம்பர், 2022

சீனாவின் ஷாங்காய் மாகாணத்த்தில் காரமான உணவை சாப்பிட்ட பெண்ணுக்கு நடந்த சோகம்

காரமான உணவை சாப்பிட்டுவிட்டு இருமிய பெண்ணின் 4 விலா எலும்புகள் உடைந்த சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹுவாங். இவர் காரமான உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென இருமல் ஏற்பட்டுள்ளது. வேகமாக இருமியபோது மார்புப்பகுதியில் ஏதோ நொறுங்குவது
 போன்று சத்தம் கேட்டுள்ளது. 
இருப்பினும் ஹுவாங் அதனை பெரிதாக பொருட்படுத்தவில்லை எனத் தெரிகிறது. ஆனால், அதன்புறகு அவருக்கு மார்பு பகுதியில் எப்போதும் வலி இருந்ததுடன், சாப்பிடவும், மூச்சுவிடவுமே மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரை சென்று சந்தித்துள்ளார்.
அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப்பார்த்த மருத்துவர்கள் ஹுவாங்கின் மார்பு விலா எலும்புகள் உடைந்திருந்ததை கண்டறிந்தனர். ஒன்றல்ல, இரண்டல்ல; நான்கு எலும்புகள் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்துள்ளனர். 
உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது இருமியதையும், அப்போது நொறுங்கும் சத்தம் கேட்டதையும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு மார்புப்பகுதியில் கட்டுப்போட்ட மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு ஓய்வெடுக்கச் சொல்லி அறிவுறுத்தியுள்ளனர்.
ஹுவாங் மிகவும் ஒல்லியாக பலவீனமாக இருப்பதே இந்த எலும்பு முறிவுக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஹுவாங்கின் உயரம் 171 செ.மீ ஆனால் அவருடைய எடை 57 கிலோதான். மேலும், அவருடைய மேற்புற உடல் மிகவும் மெலிந்தே இருக்கிறது எனவும் ஹுவாங் வருத்தம் தெரிவித்துள்ளார். உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்யவிருப்பதாக கூறுகிறார் ஹுவாங்.
ஹுவாங்கிற்கு சிகிச்சையளித்த மருத்துவர் கூறுகையில், 'உங்களுக்கு தோலுக்கு அடியிலிருக்கும் மார்பெலும்புகள் வெளியே தெரிகிறது. எலும்புகளை தாங்கிப்பிடிக்க சதை இல்லை. எனவே, இருமும்போது எலும்பு முறிவு எளிதாக ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்திருக்கிறார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

சனி, 29 அக்டோபர், 2022

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் - சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு

சீனாவின் வர்த்தக தலைநகராக அறியப்படும் ஷாங்காய் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று பரவல் திடீரென 
உச்சம் தொட்டது. 
இதன் காரணமாக அங்கு கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டுப்பாடுகள் 2 மாதங்கள் வரை 
அமலில் இருந்தன. 
இதன் காரணமாக அங்கு பொருளாதார சீர்குலைவு, உணவு தட்டுப்பாடு போன்ற சிக்கல்கள் எழுந்தன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு பிறகு ஷாங்காய் நிர்வாகம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியது. 
இந்த நிலையில் ஷாங்காய் நகரில் சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட யாங்பூ மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
இதையடுத்து அந்த மாவட்டத்தில் .28-10-2022.நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள 13 லட்சம் பேரும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 
மேலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும்
 நபர்கள் முடிவுகள் வெளியாகும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்ட உகான் நகரில் கொரோனா பரவல் அதிகமானதை தொடர்ந்து, அங்கு 5 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 15 செப்டம்பர், 2022

இலங்கையர்கள் நியூசிலாந்திற்கு வருகை தந்து வாழலாம்: விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு

 
இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவுள்ள நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் என்று நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி ப்ரெட் ஷீல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தின் நிதியளிப்பினால் ஸ்தாபிக்கப்பட்ட, காத்தான்குடி உளநல ஆற்றுப்படுத்தல் நிலையமும் சுய கற்றல் மையமும் நேற்று முன்தினம்(13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களுக்கான அழைப்பு
மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையை போன்று இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூசிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம்.

ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம் இலங்கையர்கள் வாழ்கின்றார்கள். அங்கு இலங்கையர்கள் வரவேற்கப்படுகின்றார்கள்.
இதை நான் ஏன் கூறுகின்றேன் என்றால் இலங்கையில் இருக்கும் மக்கள் நியூசிலாந்துக்கு வரமுடியும் அங்கே வாழ முடியும். இன்றைய நிகழ்வில் பங்கு கொண்ட சிறுமிகள், இளம் பெண்கள் நியூசிலாந்துக்கு வருவதை நான் ஊக்குவிக்கின்றேன்.

எதிர்காலத்தில் ஒரு சிலரை நியூலாந்தில் காண முடியும் என நம்புகின்றேன். அது ஒரு நீண்ட பயண வழிமுறையாக இருந்தாலும் அது நடக்கலாம். நடப்பதற்கு சாத்தியமுள்ளது.

நான் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளுக்கு இங்கு இலங்கையிலிருந்து பணியாற்றுவேன். அந்தவேளையில் நான் மீண்டும் கிழக்குக்கு வந்து உங்களை சந்திப்பேன். இந்தத் திட்டம் வெற்றியளித்து உங்கள் வாழ்வு மேம்பட வேண்டும்.”என கூறியள்ளார்.

காத்தான்குடியில் பெண்களுக்கான திட்டம்
இதேவேளை வேறு நூற்றுக்கணக்கான திட்ட முன்மொழிவுகள் நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நிதியுதவி அளிப்பதற்கு நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர், காத்தான்குடியில் பெண்களுக்கான இந்த உள நல ஆற்றுப்படுத்தல் மற்றும் சுய கற்றலுக்கான திட்டத்தைத் தெரிவு செய்துள்ளமை 
குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2022

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் கார் ரூ.6 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

உலக புகழ்பெற்ற இங்கிலாந்து இளவரசி டயானா கடந்த 1997-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த கார் 
விபத்தில் பலியானார். 
அவரது 25-வது நினைவு தினம் விரைவில் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் இளவரசி டயானா 1985 முதல் 1988 வரை பயன்படுத்திய போா்டு எஸ்காா்ட் வகையைச் சேர்ந்த ஒரு கார் இங்கிலாந்தில் 28-08-2022.அன்று  ஏலத்தில் விடப்பட்டது. 
இந்த ஏலத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் பலர் கலந்து 
கொண்டனர். 
1 லட்சம் பவுண்டில் (சுமார் ரூ.93 லட்சம்) ஆரம்பிக்கப்பட்ட ஏலம், பலத்த போட்டிக்கிடையே 6 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டில் (சுமார் ரூ.6 கோடியே 10 லட்சம்) நிறைவடைந்தது. இங்கிலாந்தை சேர்ந்த நபர் காரை 
ஏலத்தில் எடுத்தார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் தூங்கிய எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானிகள்

எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி  
சென்று கொண்டிருந்தது. 
அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை  செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள்
 நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து
 கொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான கட்டுப்பாட்டு  அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்திலிருந்ததால்  கட்டுப்பாட்டு அறையின்  அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை. 
இந்த சூழலில் தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த  ஓசை எழுப்பி நின்றிருக்கின்றது. மேலும் இந்த சத்தத்தினால் தூக்கம் கலந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்று கரை இறக்கி உள்ளனர். 
விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  சம்பவத்தால் அங்கு  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 17 ஆகஸ்ட், 2022

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அழிந்த டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் கொண்டுவர முயற்சி

ஆஸ்திரேலியாவின் 'டாஸ்மேனியன் புலி' உலகில் அழிந்துபோன விலங்கினங்களில் ஒன்றாகும். இவை தைலசின் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த புலிகள் 1930-ல் வரை பூமியில் வாழ்ந்தன. அதன்பின்னர் வேட்டையாடுதல், ஒருவகையான நோய் காரணமாக இந்த வகை புலி இனங்கள் அழித்தன. 
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தில் உள்ள உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த உலகின் கடைசி டாஸ்மேனியன் புலி 1936-ம் ஆண்டில் இறந்தது. 
இந்த நிலையில், ஸ்டெம் செல், ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அழிந்துபோன டாஸ்மேனியன் புலி இனத்தை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். 
டாஸ்மேனியன் புலியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த சமீபத்திய திட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக 
விஞ்ஞானிகள் மற்றும் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் வந்துள்ளது. 
இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரிவ் பாஸ்க் பேசும்போது, "இதற்காக டாஸ்மேனியன் புலியை போன்ற ஜீன் அமைப்புடைய விலங்கின் ஸ்டெம் செல்லை பிரித்து எடுக்க இருக்கிறோம். 
பின்னர் ஜீன் எடிட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இன்னும் 10 ஆண்டுகளில் டாஸ்மேனியன் புலியை மீண்டும் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


 

சனி, 4 ஜூன், 2022

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் உணவிலிருந்து சிமென்ட்தயாரிப்பு

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?
‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’
ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில்
 உணவு பொருட்களில் இருந்து முற்றிலும் சிமென்ட் தயாரித்திருப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
 இந்த வகை
 சிமென்ட் வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்க்ரீட்டை விட நான்கு மடங்கு அதிகம் என மச்சிடாவும், சகாயும் கூறுகிறார்கள்.
உணவுக் கழிவுகள் அழுகி, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற வாயுக்களாக வெளியேறி, அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், இந்த கண்டுபிடிப்பின் மூலம் குறையும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் மச்சிடா, சகாய் தெரிவித்துள்ளனர்.
உலகின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 8 சதவிகிதம் சிமென்ட் உற்பத்தியால் ஆனது என இங்கிலாந்தின் சாதம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய டோக்கியோ
 பல்கலைக்கழக தொழில்துறை அறிவியலின் இணை பேராசிரியரான சகாய், வழக்கமாக பயன்படுத்தும் சிமென்ட் அடிப்படையிலான 
கான்க்ரீட்டுக்கு மாற்றாக நிலையான திறன் கொண்ட பொருட்களை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தொழில்நுட்பத்தை
 உருவாக்கினோம் என்றார்.
முதலில் மரத்துகள்களை பொடியாக்கி அதனை சுருக்கி, பின்னர் உலர்த்துகள், தெளித்தல் போன்ற செயல்முறைகளை சந்தையில் கிடைக்கும் கலவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பொருட்கள் ஒட்டிக்கொள்ள பிளாஸ்டிக்குகள் தேவைப்பட்டன.
பல மாத தோல்விகளுக்கு பிறகு உணவுக்கழிவுகளை கொண்டு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை சரி செய்ததன் மூலம் சிமென்ட்டை பிணைக்க முடியும் என்பதை கண்டறிந்தோம்.
ஒவ்வொரு வகை உணவுக் கழிவுகளுக்கும் வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்த அளவுகள் தேவைப்பட்டதாகவும், அதனை சீராக்கும் பணி கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தேயிலை
 இலைகள், ஆரஞ்சு மற்றும் வெங்காயத் தோல்கள், காபி கொட்டைகள், சீன முட்டைக்கோஸ் போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக உணவு சிமென்ட்டை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.
சிமென்ட்டில் நீர் புகாமல் இருக்கவும், அதனை கொறித்திண்ணிகள் உள்ளிட்ட பிற பூச்சியினங்கள் உண்ணாமல் பாதுகாக்க, அதன் மேல் ஜப்பானிய அரக்கு பூசலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கோட்டா மச்சிடா Fabula Inc என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவுக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட சிமென்ட்டை கொண்டு கட்லரிகள், அறைகலன்களை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு
 வருகிறார்களாம். அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை அமேசான் மூலமும் வாங்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்களாம்.
முன்னதாக, உலகளவில் உணவு பொருட்களை
 வீணாக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு 5.7 மில்லியன் டன் உணவுக் கழிவுகள் உற்பத்தியாகியிருக்கிறது. அதனை 2030ம் ஆண்டுக்குள் 2.7 மில்லியன் டன்களை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதும்
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 3 ஜூன், 2022

தாய்லாந்தில் ஒருவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் 
தொண்டைக்குள் விழுந்துள்ளது.
5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக
 பிடித்து கொண்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் 
என கூறியுள்ளார். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



புதன், 4 மே, 2022

மூன்று கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான பெண்

உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (24). இவர் 215.16 செண்டிமீட்டர் ( 7 அடி 7 அங்குலம்) உயரம் உடையவர்.
1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர். ருமேசா கெல்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றார். இந்த நிலையில் இவர் தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
அதாவது உலகின் மிக நீளமான விரல் (11.2 செ.மீ ) கொண்ட பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அதோடு உலகின் மிகப்பெரிய கைகள் உடைய பெண் என்ற சாதனையும் இவர் 
வசமாகியுள்ளது.
அவரது வலது கை 24.93 செமீ (9.81 அங்குலம்) மற்றும் இடது கை அளவு 24.26 செமீ (9.55 அங்குலம்) கொண்டதாக உள்ளது. மேலும் உலகின் நீண்ட முதுகு 59.90 செமீ (23.58 அங்குலம்) உடைய பெண் என்பதற்காகவும் தற்போது இவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


நாசா சூரியன் தொடர்பில் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

எரிமலைக் குழம்புகளில் பந்து செய்ததுபோல் இருக்கும் சூரியனின் அதிர்ச்சியான புகைப்படத்தை நாசா 
வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களாக சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து சூரியனின் புதிய புகைப்படத்தை 
வெளியிட்டுள்ளது.
அதில் சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்புகளின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும், தற்போது இந்தப் பிளம்புகளால் வெளியாகும் அதிகப்படியான கதிர்களால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் ஒருவேளை நேரடியாக பூமிக்கு அக்கதிர்கள் வந்தால் ரேடியோ தகவல்தொடர்புகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்கலன்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 25 ஏப்ரல், 2022

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை சிறிதளவு குறைந்துள்ளது.அதன்படி இன்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1927 டொலர்கள் மற்றும் 25 
சென்ட்களாக உள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதங்களில் தங்கம் விலை 6.84 சதவீதம்
 உயர்ந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 16 ஏப்ரல், 2022

துனிசியா கரையில் 750 டன் எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பல் மூழ்கியது

எகிப்திலிருந்து (Egypt) மால்டாவுக்கு (Malta) 750 டன் எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பல் ஒன்று துனிசியாவின் (Tunisia) தென்கிழக்குக் கரையில் உள்ள கேப்ஸ் வளைகுடாவில் (Gulf of Gabes)16-04-2022. இன்று மூழ்கியதாக உள்ளூர் நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை துனிசியக் கடற்பகுதியில் கப்பல் மூழ்கியதாகவும் தற்போதைக்கு எந்தக் கசிவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சம்பவத்தின் தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேரிடர் தடுப்புக்குழு ஒன்று முடிவு செய்யும் என்றார் அவர்.
கடும் வானிலை காரணமாக15-04-2022.அன்று  துனிசியக் கடற்பகுதியில் நுழைய கப்பல் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டது.
கேப்ஸ் வளைகுடாவிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் கப்பலில் நீர் நிரம்பத் தொடங்கியதாகவும் இயந்திர அறை நீரில் மூழ்கியதாகவும் துனிசியாவின் சுற்றுப்புற அமைச்சு தெரிவித்தது.
கப்பலில் இருந்த 7 ஊழியர்களைத் துனிசிய அதிகாரிகள் வெளியேற்றியதாக அமைச்சு கூறியது.
மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபிறகு அவர்கள் தற்போது ஹோட்டலில் தங்கியிருப்பதாகத் 
தெரிவிக்கப்பட்டது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 8 மார்ச், 2022

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது சேவையை நிறுத்திய நிறுவனம்

டிக்டொக் செயலி நிறுவனம் ரஷ்யாவில் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தி உள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், “போலி செய்திகளுக்கு” 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.
இந்த சட்டத்தின் மூலம், இராணுவத்தைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதற்கு அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும், அத்துடன் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளுக்குப் பகிரங்கமாக அழைப்பு விடுக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் போலி செய்திகளுக்கு நீதிமன்றங்கள் கடுமையான தண்டனைகளை வழங்கும்.
இந்தநிலையில், ரஷ்யாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையின் நேரடி ஒளிபரப்பை நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டொக் செயலி நிறுவனம் 
தெரிவித்தது.
இதுதொடர்பாக டிக்டொக் செயலி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் பெரும் சோகத்தையும் தனிமைப்படுத்தலையும் எதிர்கொள்ளும் போரின் போது நிவாரணம் மற்றும் மனித தொடர்பை வழங்கக்கூடிய படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு பங்காக இருக்க விரும்புவதாகவும், மேலும் செயலியின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று கூறியுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 1 மார்ச், 2022

மார்ச் மாதத்தில் பிரான்சில் வரும் முக்கிய மாற்றங்கள்

பிரான்சில் மார்ச் மாதத்தில் சில முக்கிய மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவை என்னென்ன என்று பார்க்கலாம்…
புதிய கொரோனா தடுப்பூசி ஒன்று அறிமுகம்
பிரான்சில் மார்ச் மாதம் முதல் வாரத்தில், Novavax நிறுவன கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என அரசு அறிவித்திருந்தது. இந்த தடுப்பூசி, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் இரண்டு டோஸ்களுக்கு மட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பணவீக்க போனஸ்
மாதம் ஒன்றிற்கு 2,000 யூரோக்களுக்கு குறைவாக ஓய்வூதியம் பெறுவோர், இந்த பணவீக்க போனஸை பெறத் தகுதியுடையவர்கள். இந்த போனஸ் மார்ச் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படும் என எத்ரிபார்க்கப்படுகிறது.
சிகரெட்கள் விலை அதிஉணவக வவுச்சர் திட்டம் நீட்டிப்புகரிப்பு
சிகரெட் உற்பத்தியாளர்கள் மீதான வரிகளை அரசு உயர்த்த இருப்பதால் சிகரெட் பாக்கெட்களின் விலை மார்ச் 1, அதாவது, இன்று முதல் கணிசமாக உயர உள்ளது.உணவக வவுச்சர் திட்டம் நீட்டிப்பு
மார்ச் 1, அதாவது இன்றுடன் உணவக வவுச்சர் திட்டம் முடிவுக்கு வர இருந்த நிலையில், அதை ஜூன் வரை நீட்டிக்க பிரான்ஸ் அரசு 
முடிவு செய்துள்ளது.
விவாரத்துக்குப் பின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் பணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கவனிக்க ஒரு புதிய
 அமைப்பு அறிமுகம்
தம்பதியர் விவாகரத்து செய்யும் நிலையில், அவர்களது பிள்ளைகளுக்கான உணவு, உடை, தங்குமிடம் முதலானவற்றை வழங்குவது பெற்றோரின் கடமை. அப்படி யார் பிள்ளைகளுக்கான தேவைகளை சந்திக்கவேண்டும் 
என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதோ, 
அந்த பணம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்காக Agence de recouvrement et d’intermédiation des pensions alimentaires என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ஆம் திகதி முதல், பிள்ளைகளுக்குச் சேரவேண்டிய பணத்தை பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்கவேண்டியது இந்த புதிய அமைப்பின் பணியாகும்.
வாக்களிப்பதற்கு முன்பதிவு செய்வதற்கான நேரம்
பிரெஞ்சுக் குடிமக்கள், ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒன்லைனில் முன்பதிவு செய்ய மார்ச் 2தான் கடைசி நாள். தபால் வாக்குகளுக்கு பதிவு செய்ய மார்ச் 4ஆம் திகதி கடைசி நாள்.
பாரீஸில் பள்ளி விடுமுறைகள் முடிவுக்கு வருகின்றன
C மண்டலத்தில், அதாவது பாரீஸ், Créteil, Versailles, Montpellier மற்றும் Toulouseஇல் வாழும் பள்ளிப்பிள்ளைகள், மார்ச் 7ஆம் திகதி, பள்ளிக்குத் திரும்பவேண்டும்.
கொரோனா விதிகளுக்கு முடிவு
மார்ச் மாதத்தின் நடுப்பகுதி வாக்கில், கொரோனா தடுப்பூசி பாஸ் முதலான கொரோனா விதிகள் முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Daylight saving time துவக்கம்
மார்ச் 27, ஞாயிற்றுக்கிழமை காலை 2.00 மணிக்கு Daylight saving time துவங்க உள்ளது. அப்போதிலிருந்து கடிகார முட்கள் ஒரு மணி நேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். மாலையில் நீண்ட நேரம் வரை வெயில் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பின்பற்றப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரம் துவக்கம்
மார்ச் 28 முதல் பிரான்சில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்குகிறது.
பிரெக்சிட்டுக்குப் பிந்தைய திருமண விதிகள்
பிரித்தானியர்களின் ஐரோப்பிய ஒன்றிய துணைவர்கள் அல்லது துணைவிகள் பிரித்தானியாவுக்கு குடிபெயர விரும்பினால், அவர்கள்
 மொழி, தொழில் திறன் மற்றும் நிதி ஆதாரம் முதலான விசா நடைமுறைக்கான 
முழுமையான தகுதிகளை சந்திக்கக்கூடியவர்களாக இருந்தாகவேண்டும். இந்த தகுதி நிலைகளுக்கு உட்படாதவர்கள், மார்ச் 31 முதல், அவர்கள் பிரித்தானியரை மணந்திருந்தாலும் கூட, பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேக்ரான் போனஸ்
மார்ச் 31தான் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு மேக்ரான் போனஸ் என்னும் போனஸ் வழங்க கடைசி நாள் ஆகும்.
Trêve hivernale முடிவுக்கு வருகிறது
பிரான்சைப் பொருத்தவரை, la trêve hivernale என்பது, ஒரு காலகட்டம். அந்த காலகட்டத்தில், வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களை வெளியேற்ற முடியாது. அந்த காலகட்டம் மார்ச் 31ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. 

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



வியாழன், 24 பிப்ரவரி, 2022

உக்ரைனில் போர் பதற்றத்தால் விமானங்கள் பறக்கத்தடை

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.
இதை தொடர்ந்து உக்ரைனில் பயணிகள் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தனது வான் வெளியை மூடியதால் எந்த நாட்டின் பயணிகள் விமானமும் உக்ரைனில் பறக்க முடியாது. வர்த்தகம் மற்றும் பயணிகள் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 21 பிப்ரவரி, 2022

மீண்டும் உலக சந்தையில் அதிகரித்தது மசகு எண்ணெயின் விலை

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ப்ரண்ட் ரக மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
இதேவேளை அமெரிக்காவின் டபிள்யூடிஐ மசகு எண்ணெயின் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையசெதிகள் >>>



வெள்ளி, 18 பிப்ரவரி, 2022

கடும் அச்சத்தில் உலக மக்கள் எதிர்நோக்கப் போகும் அடுத்த பேரழிவு

உக்ரைனில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. உக்ரைனில் உள்ள கிரிமியா தீபகற்பத்தை கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்தது.இதை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வலுத்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் 1 மில்லியனுக்கும் அதிகமான துருப்புக்களை ரஷ்யா பெற்றுள்ளது. இதனால், ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய படையெடுப்பு நடந்தால்
 உக்ரைனுக்கு ஆதரவு 
அளிப்பதாக அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் தெரிவித்துள்ளன. மேலும், அமெரிக்கா மற்றும் பல நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன. இதனால் ரஷ்யா – உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. போர் பதற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. அதன்பிறகு, பல்வேறு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான
பேச்சுக்கள் மற்றும் பலதரப்பு நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதியின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கிரிமியாவில் இராணுவப் பயிற்சிகளை முடித்துவிட்டு, துருப்புக்கள் முகாமுக்குத் திரும்புவதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால் உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குறைத்து வருகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
தொடர்ந்து எல்லைகள் ரஷ்ய படைகளால் பராமரிக்கப்படுகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அந்தப் படைகள் உக்ரைனை ஆக்கிரமிக்கக்கூடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இந்நிலையில்18-02-2022. அன்று  உக்ரைனில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. டான்பாஸ் உக்ரைனின் எல்லை மாகாணமாகும். மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும் மற்றொன்று ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் மாகாணத்தில் உள்ள ஸ்டெனிஸ்டியா லுகான்ஸ்கா நகரத்தில் உள்ள ஒரு கிராமத்தின் முன் மதியம் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.
கிராமத்தில் உள்ள மழலையர் பள்ளியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தளத்தின் முன் மதியத்திற்கு பிறகு எந்த குண்டுவீச்சும் வெடிக்கவில்லை என்று அமெரிக்கா கூறியது. மேலும் பாதிக்கப்பட்ட பேரங்காடியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தாக்குதல் நடத்தியது யார் என்ற முழு விவரம் வெளியாகவில்லை. ஆனால் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது.
 ரஷ்ய ஆதரவு
கிளர்ச்சியாளர்கள் குண்டுவீச்சை நடத்தியதா? அல்லது ரஷ்யா உண்மையில் குண்டுவீச்சை நடத்தியதா? அல்லது வேறு யாராவது இந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்களா? பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள கிராமத்தில் குண்டுவீச்சு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும்? 
என்ற அச்சம் உள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>