எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 விமானமானது சூடான் நாட்டின் கர்டொம் நகரில் இருந்து எத்தியோப்பியாவின் அட்டிஸ் அபபா நகரத்திற்கு பயணிகளை ஏற்றி
சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகளும் 37,000 அடி உயரத்தில் தானியங்கி விமானம் இயக்கியை செலுத்தி விட்டு தூங்கி இருக்கின்றார்கள். இந்த சூழலில் அட்டிஸ் அபாபா நகருக்குள்
நுழைந்த விமானம் தரையிறங்குவதற்கான எந்த ஒரு முன்னறிவிப்பையும் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்காமல் தொடர்ந்து பறந்து
கொண்டே இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிகளை தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளனர். ஆனால் விமானிகள் கடுமையான உறக்கத்திலிருந்ததால் கட்டுப்பாட்டு அறையின் அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை.
இந்த சூழலில் தரையிறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பயணித்ததால் தானியங்கி விமான இயக்கி பலத்த ஓசை எழுப்பி நின்றிருக்கின்றது. மேலும் இந்த சத்தத்தினால் தூக்கம் கலந்த விமானிகள் விமானத்தை திசை திருப்பி மீண்டும் ஓடு பாதைக்கு கொண்டு சென்று கரை இறக்கி உள்ளனர்.
விமானிகளின் தூக்கத்தால் 2.5 மணி நேரம் பயணிகள் வானில் பறந்தபடியே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக