நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

மிரட்டும் டோரிஸ் புயல் பிரித்தானியாவில் பேரழிவு ஏற்படும் அபாயம்!!

பிரித்தானியாவில் டோரிஸ் எனும் புயல்காற்று வீசவுள்ளதால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது, டோரிஸ் புயலால் நாட்டில் அதிவேகக் காற்று, மழை மற்றும் பனிப்பொழிவு ஏற்படக் கூடும்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை காற்று 80மைல் வேகத்தில் வீசக்கூடும். இன்று காலை ஐயர்லாந்தில் 87 மைல் வேகத்தில் காற்று வீசியுள்ளதாக
 பதிவாகியுள்ளது.இந்த புயலால் பிரித்தானியாவில் மத்திய பகுதி கடுமையாக பாதிக்கப்படக் கூடும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்கள் புயலை எதிர்கொள்ள தயராக இருக்க வேண்டும் 
என தெரிவித்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 23 பிப்ரவரி, 2017

சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் வழங்கும் ஆஸ்திரேலிய அரசு !

ஆஸ்திரேலிய அரசு வழங்கும் 2018ம் ஆண்டுக்குரிய Australia Awards சர்வதேச புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த Masters பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிப்பதற்கு நீங்கள் தகுதியானவரா என்று அறிந்து கொள்வதற்கும், இதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்வதற்கும் கீழ்க்காணும் இணைப்புக்குச் செல்லுங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 20 பிப்ரவரி, 2017

நீங்கள் அமெரிக்காவுக்குப் போறீங்களா மொபைல், லேப்டாப் எடுத்து செல்லாதீங்க!

அமெரிக்காவுல இருக்கிற அண்ணனோ, அக்காவோ நம்மள லீவுக்கு வரச்சொன்னா எவ்ளோ சந்தோஷமா கிளம்புவோம்? அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்-ல இருந்து கிருஷ்ணாயில் வரை அவங்க கேட்கிற எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. ஆனா, உங்க மொபைலை மட்டும் இங்கயே வச்சிட்டுப் போங்க.
ஆமாம் பாஸ். ஷாருக்கான் போனாலே “யார் மேன் நீ”ன்னு கேட்டு டவுசுர கழட்டுற நாடு அமெரிக்கா. இப்ப அவங்க 
நாட்டுக்குள்ள வர்ற எல்லோருடைய மொபைல் போனையும் செக் பண்ண ஆரம்பிச்சாச்சு. அயன் பட சூர்யா மாதிரி, மொபைல்ல வைரத்த கடத்தினாதானே பிரச்னை… நமக்கு என்னன்னு யோசிக்கிறீங்களா? உங்க போன் வாங்குறப்ப அதோட பாஸ்கோடையும்
 கேட்டு வாங்கிப்பாங்க மைக்ரேஷன் மச்சான்ஸ். உங்க போன்ல இருக்கிற மிஸ்டு கால்ல இருந்து ரெக்கார்ட் பண்ண கால் வரைக்கும் அலசி ஆராஞ்சுதான் திருப்பி தருவாங்க. கிரெடிட் கார்டு பில்ல கட்டலைன்னு ஒருத்தன் திட்டினது, கேர்ள் ஃப்ரெண்டு
கிட்ட வாட்ஸப்ல ஹாய் ஹாய், ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு நாம கெஞ்சியதோட ப்ளூ டிக் வரைக்குமே மேயுறாங்களாம். இதுக்கு அந்த நாட்டோட பாதுகாப்பு பாயிண்ட்ஸ்லயே குறிப்பு இருக்குன்றது ஹைலைட்.
இணையத்துல வைரல் ஆகிட்டு இருக்கிற இந்த டாபிக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெயர் சித். நாசால வேலை செய்ற நண்பர் சித், வெளிநாட்டுக்கு ஒரு ஜாலி ட்ரிப் போயிட்டு அமெரிக்காவுக்கு திரும்பியிருக்காரு. ஹவுஸ்டன் நகர ஏர்போர்ட்ல அவரை மடக்கின ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் ஒருத்தர் அவரோட போனைக் கேட்டிருக்காரு. அவரும் கொடுத்திருக்காரு.
 பாஸ்கோடு கேட்டதும் சித் ஜெர்க் ஆகியிருக்காரு. இதுல ஸ்பெஷல் மேட்டர் என்னன்னா, அந்த போனை சித்துக்கு நாசாதான் கொடுத்திருக்கு. அதையே சந்தேகப்படுவாங்களான்னு
 சித் யோசிக்க, “அதெல்லாம் படுவோம். பாஸ்கோட கொடுங்க ப்ரோ”ன்னு கேட்டிருக்காரு ஆஃபீஸர். அரை மணி நேரம் அவர் போனை செக் பண்ணிட்டு “உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்டே இல்லையா”ன்ற மாதிரி லுக்கோட போனை திருப்பிக் கொடுத்திருக்காரு.
இந்த சம்பவத்தை லார்ஸன் என்பவர் தன்னோட பிளாக்குல எழுதியதும் வைரல் ஆயிடுச்சு. ஒருத்தரோட தனிப்பட்ட டிஜிட்டல் டேட்டாவைப் பாதுகாக்குறத பத்தி லார்ஸன் அதிகம் எழுதுவாரு. அவருக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. ”இனிமேல நம்மளோட டிஜிட்டல் லைஃபுல ப்ரைவசியே இருக்காது. ம்ஹூம். இது ஆகுறதில்லை”ன்னு வருத்தப்பட்டிருக்காரு லார்ஸன்.
அதனால, அமெரிக்காவுக்குப் போறப்ப நம்ம மொபைலை வீட்டுலயே வச்சுட்டுப் போறது நல்லது. அங்க போனதும் சீப்பா ஒரு மொபைலை வாங்கிக்கலாம். அல்லது காஸ்ட்லியான மொபைலை வாடகைக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா, அங்கிருக்கிற நம்ம அண்ணன் அல்லது அக்காக்கிட்ட புது மொபைலை அட்வான்ஸா புக் பண்ணி வைக்கலாம்.
அமெரிக்காவின் ஆசான் ட்ரம்ப் இப்பதான் 
கொஞ்ச நாள் முன்ன “இனிமே விசா அப்ளை பண்றவங்க சோஷியல் மீடியாவையும் நாங்க செக் பண்ணுவோம்”ன்னு சொன்னாரு. அமெரிக்காவுலதான் இது ஆரம்பிச்சிருக்குன்னாலும், சீக்கிரமே உலகம் முழுக்க இந்த நடவடிக்கைகள் வரலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நூற்றி ஐம்பது கோடி ரூபாய்: தொலைக்காட்சி பெட்டிக்குள் கண்டதும் அதிர்ச்சியில் மூழ்கிய ஊழியர்

கனடா நாட்டில் பழைய தொலைக்காட்சி பெட்டிக்குள் கட்டுக் கட்டாக 1.50 கோடி ரூபாய் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பெண் ஊழியர் ஒருவர் அதனை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Barrie நகரில் பழைய பொருட்களை மறுசுழற்சி செய்யும் மையம் ஒன்று 
இயங்கி வருகிறது.
கடந்த ஜனவரி மாதம் இந்த மையத்திற்கு செயல்படாத பழைய தொலைக்காட்சி பெட்டி ஒன்று மறுசுழற்சிக்காக(recycling) வந்துள்ளது.
தொலைக்காட்சி பெட்டியை வாங்கிய பெண் ஊழியர் ஒருவர் அதனை திறந்து சோதனை செய்துள்ளார்.
அப்போது, தொலைக்காட்சி பெட்டியின் பின்புறத்திற்குள் கட்டுக் கட்டாக பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி 
அடைந்துள்ளார்.
இதனை உடனடியாக மையத்தின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், பணக் கட்டுகளை எண்ணியபோது 1,00,000 டொலர்(1,50,71,000 இலங்கை ரூபாய்) இருந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், பணக் கட்டுகளுடன் சில ஆவணங்களும் இருந்துள்ளது.
இவற்றை பரிசோதனை செய்தபோது Bolsover நகரை சேர்ந்த 68 வயதான நபர் தான் இந்த பணத்திற்கு சொந்தக்காரர் எனத் 
தெரியவந்துள்ளது.
பின்னர், பணத்தின் உரிமையாளரை நேரடியாக சந்தித்து விசாரணை செய்தபோது உண்மைகள் 
வெளியாகியுள்ளன.
‘என்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்காக இப்பணத்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் தொகைக்காட்சி பெட்டிக்குள் பாதுகாப்பாக வைத்தேன்.
ஆனால், சில ஆண்டுகளுக்கு பிறகு பணம் வைத்ததை மறந்துப் போனதால் அந்த தொலைக்காட்சி பெட்டியை நண்பர் ஒருவருக்கு அளித்துவிட்டேன்.
இந்த தொலைக்காட்சி பெட்டி தான் தற்போது மறுசுழற்சிக்கு சென்றுள்ளதாக’ உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
தீவிர விசாரணைக்கு பின்னர் பணம் முழுவதும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், பணத்தை பத்திரமாக வங்கியில் செலுத்துமாறு பொலிசார் அறிவுரை கூறியுள்ளனர்.
மறுசுழற்சி மையத்தில் கிடைத்த பணத்தை நேர்மையாக பொலிசாரிடம் ஒப்படைக்க காரணமாக இருந்த பெண் ஊழியரை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் சய்திகள் >>>

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

கனடிய சனத்தொகை2036இல் அரைவாசி பேர் குடியேற்றவாசிகள்?

 கனடாவின் சனத்தொகையில் 2036ஆம் ஆண்டளவில் மூன்றில் ஒரு பங்கினர் குடியேற்றவாசிகளாகவே காணப்படுவர் என ஆய்வறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சனத்தொகையில் 20 வீதமானோர் குடியேற்றவாசிகளின் குழந்தைகளாகவே காணப்படுவதுடன், நாட்டில் குடியேறும் குடியேற்றவாசிகளின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் ஆசியாவை சேர்ந்தவர்களாகக் காணப்படுவர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் சனத்தொகையில் குடியேற்றவாசிகளின் வீதம் கடந்த 2011ஆம் ஆண்டு 20.7 வீதமாகக் காணப்பட்டது. இந்த எண்ணிக்கையானது எதிர்வரும் 2036ஆம் ஆண்டளவில் 30 வீதத்தை எட்டும் என்றும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 2 பிப்ரவரி, 2017

இலங்கையருக்கு அமெரிக்காவில் பாதிப்பில்லை அமைச்சு தகவல்?

அமெரிக்க விமான நிலையங்களில் எந்த இலங்கையரும் சிக்கிக் கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சு 
உறுதியளித்துள்ளது.
அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை உத்தரவிட்டதை அடுத்து இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில்,அமெரிக்காவுடன் தொடர்பை ஏற்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு,பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர் உள்ளடங்கப்படவில்லை என்ற இந்த செய்தியை 
வெளியிட்டுள்ளது.
ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் போன்ற 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் திட்டத்தை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
எனவே,இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 71 பேரில் இலங்கை, பாக்கிஸ்தான், பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்டான், கட்டார், செனகல், சுவிட்ஸர்லாந்து மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும்,அமெரிக்க விமான நிலையங்களில் எந்த இலங்கையரும் தடுத்து வைக்கப்படவில்லை என அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>