நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 20 பிப்ரவரி, 2017

நீங்கள் அமெரிக்காவுக்குப் போறீங்களா மொபைல், லேப்டாப் எடுத்து செல்லாதீங்க!

அமெரிக்காவுல இருக்கிற அண்ணனோ, அக்காவோ நம்மள லீவுக்கு வரச்சொன்னா எவ்ளோ சந்தோஷமா கிளம்புவோம்? அப்படி ஒரு வாய்ப்பு வந்தா கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்-ல இருந்து கிருஷ்ணாயில் வரை அவங்க கேட்கிற எல்லாத்தையும் எடுத்துட்டுப் போங்க. ஆனா, உங்க மொபைலை மட்டும் இங்கயே வச்சிட்டுப் போங்க.
ஆமாம் பாஸ். ஷாருக்கான் போனாலே “யார் மேன் நீ”ன்னு கேட்டு டவுசுர கழட்டுற நாடு அமெரிக்கா. இப்ப அவங்க 
நாட்டுக்குள்ள வர்ற எல்லோருடைய மொபைல் போனையும் செக் பண்ண ஆரம்பிச்சாச்சு. அயன் பட சூர்யா மாதிரி, மொபைல்ல வைரத்த கடத்தினாதானே பிரச்னை… நமக்கு என்னன்னு யோசிக்கிறீங்களா? உங்க போன் வாங்குறப்ப அதோட பாஸ்கோடையும்
 கேட்டு வாங்கிப்பாங்க மைக்ரேஷன் மச்சான்ஸ். உங்க போன்ல இருக்கிற மிஸ்டு கால்ல இருந்து ரெக்கார்ட் பண்ண கால் வரைக்கும் அலசி ஆராஞ்சுதான் திருப்பி தருவாங்க. கிரெடிட் கார்டு பில்ல கட்டலைன்னு ஒருத்தன் திட்டினது, கேர்ள் ஃப்ரெண்டு
கிட்ட வாட்ஸப்ல ஹாய் ஹாய், ப்ளீஸ் ப்ளீஸ்ன்னு நாம கெஞ்சியதோட ப்ளூ டிக் வரைக்குமே மேயுறாங்களாம். இதுக்கு அந்த நாட்டோட பாதுகாப்பு பாயிண்ட்ஸ்லயே குறிப்பு இருக்குன்றது ஹைலைட்.
இணையத்துல வைரல் ஆகிட்டு இருக்கிற இந்த டாபிக்குக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பெயர் சித். நாசால வேலை செய்ற நண்பர் சித், வெளிநாட்டுக்கு ஒரு ஜாலி ட்ரிப் போயிட்டு அமெரிக்காவுக்கு திரும்பியிருக்காரு. ஹவுஸ்டன் நகர ஏர்போர்ட்ல அவரை மடக்கின ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸர் ஒருத்தர் அவரோட போனைக் கேட்டிருக்காரு. அவரும் கொடுத்திருக்காரு.
 பாஸ்கோடு கேட்டதும் சித் ஜெர்க் ஆகியிருக்காரு. இதுல ஸ்பெஷல் மேட்டர் என்னன்னா, அந்த போனை சித்துக்கு நாசாதான் கொடுத்திருக்கு. அதையே சந்தேகப்படுவாங்களான்னு
 சித் யோசிக்க, “அதெல்லாம் படுவோம். பாஸ்கோட கொடுங்க ப்ரோ”ன்னு கேட்டிருக்காரு ஆஃபீஸர். அரை மணி நேரம் அவர் போனை செக் பண்ணிட்டு “உங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்டே இல்லையா”ன்ற மாதிரி லுக்கோட போனை திருப்பிக் கொடுத்திருக்காரு.
இந்த சம்பவத்தை லார்ஸன் என்பவர் தன்னோட பிளாக்குல எழுதியதும் வைரல் ஆயிடுச்சு. ஒருத்தரோட தனிப்பட்ட டிஜிட்டல் டேட்டாவைப் பாதுகாக்குறத பத்தி லார்ஸன் அதிகம் எழுதுவாரு. அவருக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு. ”இனிமேல நம்மளோட டிஜிட்டல் லைஃபுல ப்ரைவசியே இருக்காது. ம்ஹூம். இது ஆகுறதில்லை”ன்னு வருத்தப்பட்டிருக்காரு லார்ஸன்.
அதனால, அமெரிக்காவுக்குப் போறப்ப நம்ம மொபைலை வீட்டுலயே வச்சுட்டுப் போறது நல்லது. அங்க போனதும் சீப்பா ஒரு மொபைலை வாங்கிக்கலாம். அல்லது காஸ்ட்லியான மொபைலை வாடகைக்கு எடுத்துக்கலாம். இல்லைன்னா, அங்கிருக்கிற நம்ம அண்ணன் அல்லது அக்காக்கிட்ட புது மொபைலை அட்வான்ஸா புக் பண்ணி வைக்கலாம்.
அமெரிக்காவின் ஆசான் ட்ரம்ப் இப்பதான் 
கொஞ்ச நாள் முன்ன “இனிமே விசா அப்ளை பண்றவங்க சோஷியல் மீடியாவையும் நாங்க செக் பண்ணுவோம்”ன்னு சொன்னாரு. அமெரிக்காவுலதான் இது ஆரம்பிச்சிருக்குன்னாலும், சீக்கிரமே உலகம் முழுக்க இந்த நடவடிக்கைகள் வரலாம்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக