நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 2 பிப்ரவரி, 2017

இலங்கையருக்கு அமெரிக்காவில் பாதிப்பில்லை அமைச்சு தகவல்?

அமெரிக்க விமான நிலையங்களில் எந்த இலங்கையரும் சிக்கிக் கொள்ளவில்லை என வெளிவிவகார அமைச்சு 
உறுதியளித்துள்ளது.
அமரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை உத்தரவிட்டதை அடுத்து இலங்கை உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டிருந்தன.
இந்த நிலையில்,அமெரிக்காவுடன் தொடர்பை ஏற்படுத்திய இலங்கை வெளிவிவகார அமைச்சு,பாதிக்கப்பட்டவர்களில் இலங்கையர் உள்ளடங்கப்படவில்லை என்ற இந்த செய்தியை 
வெளியிட்டுள்ளது.
ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் போன்ற 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் திட்டத்தை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
எனவே,இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த 71 பேரில் இலங்கை, பாக்கிஸ்தான், பிரான்ஸ், அல்ஜீரியா, ஜோர்டான், கட்டார், செனகல், சுவிட்ஸர்லாந்து மற்றும் துருக்கி நாடுகளைச் சேர்ந்தவர்கள் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும்,அமெரிக்க விமான நிலையங்களில் எந்த இலங்கையரும் தடுத்து வைக்கப்படவில்லை என அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக