நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இலங்கைத் தமிழ் குடும்பத்தின் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்டும்

.அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் 
நிராகரித்திருந்தது.
அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின் நீதிபதி ஜான் மிடில்டோன் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலிய சென்ற நடேசலிங்கமும், 2013ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா சென்ற பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் 
செய்து கொண்டுள்ளனர்.
 குயின்லாந்த்தில் உள்ள பிலோயலா (Biloela) என்ற சிறுநகரில் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வந்த அவர்களுக்கு கோபிகா, தருணிக்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த மார்ச் 2018ஆம் ஆண்டு பிரியாவின் இணைப்பு விசா (Bridging Visa) காலாவதியாகியதாக 'பிரியா- நடேசலிங்கம்' எ
ன்ற இணையரின் வீட்டிற்கு அதிகாலையில் சென்ற அந்நாட்டு எல்லைப்படை, அவர்களை கைது செய்தது.
அதைத் தொடர்ந்து, பிரியா மற்றும் நடேசலிங்கத்துடன் அவுஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரு குழந்தைகளும் இலங்கைக்கே நாடுகடத்தப்படுவார்கள் எனக்
 கூறப்பட்டது.
பிலோயலா நகரில் வசித்து வந்த அவுஸ்திரேலியர்களின் கோரிக்கைகள் மற்றும் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் நாடு கடத்தப்படுவதிலிருந்து தற்காலிகமாக மீட்கப்பட்டனர்.
அதன் பின்னர், நாடுகடத்தலுக்கு எதிராக அகதிகள் தீர்ப்பாயம் மற்றும் கீழ் நீதிமன்றத்தில் எடுத்து முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.
தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை தற்போது அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் நிராகரித்துள்ளது.
இவ்வாறான சூழலில், இவர்களை அவுஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என அந்நாட்டு உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு மனித உரிமை ஆர்வலர்களும் அகதிகள் நல செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>br />


வியாழன், 27 டிசம்பர், 2018

ஆர்ஜென்டீனாவில் 32 வருடங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பெண்மீட்பு

ஆட்கடத்தல்காரர்களால் 1980களில் கடத்தப்பட்ட ஆர்ஜன்டீன பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டு மீண்டும் அவரின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டுள்ளார்.ஆர்ஜன்டீன மற்றும் பொலிவிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணை மூலம் தற்போது 
45 வயதாகும் அந்தப் பெண் எங்கே இருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தெற்கு பொலிவியாவின் பெர்மெஜோ பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த வீடு 
பொலிஸாரால் க
அந்தப் பெண்ணை மார் டெல் பிளாடாவில் இருக்கும் அவரது குடும்பத்தினருடன் இணைக்க முடிந்ததாக ஆர்ஜன்டீன பொலிஸார் கடந்த செவ்வாக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இம்மாத ஆரம்பித்திலேயே அந்த பெண் மற்றும் அவரது மகன்
 விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும்,32 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தகடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் விபரம் பொலிஸ் அறிவிப்பில் 
கூறப்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 23 டிசம்பர், 2018

உளவுத்துறையினர் எச்சரிக்கை ஜேர்மன் விமான நிலையங்களுக்கு

ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்ததை அடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை 
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மொரோக்கோ புலனாய்வு சேவையிடமிருந்து ​ஜேர்மன் பொலிஸாருக்கு 
வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் எல்லையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருவார காலத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திடீர் சுனாமி! இந்தோனேஷியாவில் 168 பேர் பலி- 745 பேர் படுகாயம்

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில் நேற்று இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தம் காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என 
சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க
 முடிந்துள்ளது.
இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக
 குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக
 தெரிய வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது 
குறிப்பிடத்தக்கது.


கடல் பகுதியில் இந்தோனேஷியாவை தாக்கிய சுனாமியால் இலங்கைக்கும்ஆபத்தா

இந்தோனேஷியாவில் Sunda Strait கடல் பகுதியில்.22.12.2018.  இரவு தாக்கிய சுனாமி காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.அனர்த்தம் 
காரணமாக 165 பேர் காயமடைந்ததுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அந்த பகுதியில் முதலில் நில அதிர்வு ஒன்று உணரப்பட்ட நிலையில் சுனாமி தாக்கியதாக அந்நாட்டு அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.இந்தோனேஷியாவின் வளிமண்டலவியல் மற்றும் காலநிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கமைய, சுனாமி பேரலைகள் ஏற்படுவதற்கு நிலஅதிர்வு காரணமல்ல என 
கூறிப்பிடப்படுகின்றது. இதற்கு Anak Krakatoa எரிமலை நடவடிக்கைகளின் விளைவாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.குறித்த சுனாமி தாக்கத்தின் போது கடல் பகுதியில் நின்ற ஒருவர் அதனை காணொளியாக பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் போது கடல் அலை வேகமாக வருவதனை அவதானிக்க முடிந்துள்ளது.
இந்த காணொளி சுனாமி தாக்கத்தை நன்கு வெளிப்படுத்துவதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமான முன்னெடுக்கப்படுவதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலை அனுமதிக்கும் செயற்பாடுகளும் 
முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.நேற்று இரவு 9.30 மணியளவில் சுனாமி தாக்கியுள்ளதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டது. இந்த அனர்த்தம் காரணமாக பெருமளவு மக்கள் காணாமல் போயுள்ளதாக 
குறிப்பிடப்படுகின்றது
.இதேவேளை வட மாகாணத்தில் நேற்று பெய்த அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள குளங்கள் உடைப்பு எடுத்துள்ளன.இந்நிலையில்
 இந்தோனேஷியாவில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டுள்ளமை காரணமாக தாயக மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி ஏற்பட்ட இந்தோனேஷியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்ட பாரிய சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கை உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.இலங்கையில் மாத்திரம் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 20 டிசம்பர், 2018

துருக்கி நீதிமன்றம்2000 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது

துருக்கியில் 2016ஆம் ஆண்டு இராணுவ புரட்சியில் ஈடுபட்ட 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தருக்கி நாட்டின் அதிபர் ரீசெப் தய்யீப் எர்டோகன். இவருக்கு எதிராக கடந்த 2016-ம் ஆண்டு திடீர் இராணுவ புரட்சி ஏற்பட்டது. 
பொதுமக்கள் உதவியுடன் அதை அதிபர் எர்டோகன்
 முறியடித்தார்.
இச் சம்பவத்தில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள், வீரர்கள், நீதிபதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது
 செய்யப்பட்டனர். 
தற்போது அவர்கள் மீதான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 
அதில் 2 ஆயிரம் பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களில் 1934 பேர் தங்கள் ஆயுள் முழுவதும் சிறையில் 
தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 938 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது 
குறிப்பிடத்தக்கது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>