நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 14 ஜூன், 2019

தடுப்பு முகாமிலிருக்கும் ஈழ அகதியின் பரிதாபமான வேண்டுகோள்

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாகதடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் ஒருவர் தன்னை விடுதலை செய்து பிரிட்டனில் உள்ள சகோதரியிடம் செல்வதற்கு அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்
.2013 முதல் மனஸ் தீவு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திரவியராஜா சுப்பிரமணியம் என்ற 37 வயது இலங்கை தமிழரே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள தனது குடும்பத்தினருடன்
 இணைவதற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சு அனுமதி மறுக்கின்றது
 என பிரிட்டனின் குடிவரவு தீர்ப்பாயத்திற்கு அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பிட்ட நபர் இலங்கையில் அனுபவித்த சித்திரவதைகள் காரணமாக உளநல பாதிப்பிற்கு 
உட்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தனது சகோதரர் அவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளார் என லண்டனில் வசிக்கும் சுப்பிரமணியத்தின் சகோதரி
 சுசீலா நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் ஒரு அகதியென அவர் தெரிவித்துள்ளார்.எனது சகோதரர் மோசமடைந்து வரும் மனோநிலையால் பாதிக்கப்பட்டுள்ளார்,அவரது எதிர்காலம் குறித்து நான் அச்சமடைந்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 11 ஜூன், 2019

உலகில் அதிக திருமணம் செய்து சாதனை படைத்த கல்யாண மன்னன்

உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் என்ற பெயருக்கு கலிபோர்னியாவில் வசித்த கிளையன் உல்ப் என்பவர்
 சொந்தக்காரராக உள்ளார்.1908ம் ஆண்டு பிறந்த கிளையன் 1997ம் 
ஆண்டு உயிரிழந்தார். கின்னஸ் சாதனை புத்தகத்தின் தகவல்படி கிளையன் 29 பெண்களை தனித்தனியாக திருமணம்
 செய்து உள்ளார்
. கிளையனுக்கு 40க்கும் அதிகமான குழந்தைகள் உள்ளனர்.இவரின் முதல் மனைவி பெயர் மார்கி மெக்டொனால்ட். இவரை 
கிளையன் 1926ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்
. இவரது கடைசி மனைவி பெயர் லிண்டா. இவரை 
கிளையன் 1996ம் 
ஆண்டு மணந்தார்.இதில், பல பெண்களை கிளையன் விவாகரத்து செய்தார். சிலர் அவருடன் வாழும் போதே இறந்து 
விட்டனர். கிளையன் குறைந்தபட்சமாக ஒரு பெண்ணுடன் 19 நாட்களே கணவராக வாழ்ந்துள்ளார். அதிகபட்சமாக ஒரு பெண்ணுடன் 11 ஆண்டுகள் வாழ்ந்துள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 5 ஜூன், 2019

தாய், மகள் பிரான்ஸ் அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு வழக்கு

பிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும்
 நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,
 அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் 1.24 கோடி) வழங்க வேண்டும் எனவும் கூறியிருந்தனர். மாசுபாட்டை தடுக்க அரசு எந்தவித பாதுகாப்
பு நடவடிக்கையும் 
எடுக்கவில்லை, முக்கியமாக கடந்த டிசம்பர் 2016 ல் பாரிஸ் மிகவும் அதிகமான மாசுபாட்டை சந்தித்த போதும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும்
 அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, தங்கள் கட்சிக்காரர்கள் இருவருமே சுவாசக் கோளாறுகளால் பாதிக்கபட்டுள்ளதாகவும், மேலும் அப்பகுதியிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் பகுதிக்கு
 இடம்பெயர்ந்ததிலிருந்து உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பிரான்ஸ் அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை
 எனவும் வாதிட்டார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


அவுஸ்திரேலியா 20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ளது

அவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த   20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த   படகை கடந்தவாரம் தடுத்துநிறுத்தி அதிலிருந்தவர்களை நாடு கடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்து சமுத்திர பகுதியில் குறிப்பிட்ட படகு கண்டுபிடிக்கப்பட்டது அதில் குழந்தையொன்று உட்பட 20 பேர் காணப்பட்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன
குறிப்பிட்ட படகுடன் அதிலிருந்தவர்களை கிறிஸ்மஸ்தீவுகளில்  தடுத்துவைத்திருந்த அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களின் புகலிடக்கோரிக்கையை நிராகரித்த பின்னர் அவர்களை வாடகை விமானமொன்றின் மூலம்  இலங்கைக்கு 
அனுப்பிவைத்துள்ளனர்
இலங்கையில் குண்டுவெடிப்புகள் இடம்பெற்ற பின்னரே இந்த படகு அங்கிருந்து புறப்பட்டுள்ளது என தகவல்கள் 
வெளியாகியுள்ளன
அவுஸ்திரேலியாவிற்குள் நுழைய முயன்றவர்கள் கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டமை ஐந்து வருடங்களில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு காரணங்களிற்காக படகு தொடர்பான மேலதிக தகவல்களை வெளியிடப்போவதில்லை என  பிரதி பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகச்செய்திகள் 02.0

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


இனி பேஸ்புக் பயன்படுத்தினாலே அமெரிக்கா செல்ல முடியும்

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை விண்ணப்பதார்கள் சமர்பிக்க வேண்டுமெ
ன தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த நடவடிக்கையினூடாக 14.7 மில்லயன் மக்கள் பாதிப்படைவார்கள் என அந்த நாட்டு அதிகாரிகள்
 கூறுகின்றனர்.
எனினும் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளுக்காக அமெரிக்க வீசாவை பெறுபவர்கள் இவ்வாறு தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மற்றும் கல்விசார் வீசாவை பெறுபவர்கள் தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க வேண்டுமென அமெரிக்க தரப்புக்கள்
 குறிப்பிடுகின்றன.
இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் 
செய்தி வெளியிட்டுள்ளன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>