நிலாவரை .கொம்

siruppiddy
ஜேர்மன்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜேர்மன்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 மார்ச், 2021

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக 
கூறப்படுகிறது.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜெர்மனியில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 28 ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18ஆம் திகதி வரை ஊரடங்கு 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 7 ஜனவரி, 2021

கொரோனா தொற்ரால் யேர்மனியில் ஒரு நாளில் 1019 பேர் பலி!!!

யேர்மனியில் கொரோனா தொற்று நோய்க்கு 1019 பேர் 06-01-21அன்று  புதன்கிழமை உயிரிழந்துள்ளனர். அத்துடன் 26,651 பேருக்கு புதிதாக 
தொற்று ஏற்பட்டுள்ளது.என்பது 
குறிப்பிடத்தக்கது 

 இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 1 டிசம்பர், 2020

பாதசாரிகளை ஜேர்மனியில் மோதித்தள்ளியது கார் நால்வர் ஸ்தலத்தில் பலி

ஜேர்மனியில் கார் ஒன்று பாதசாரிகளை மோதித்தள்ளிய சம்பவத்தில் ஒன்பது மாத குழந்தை உட்பட நால்வர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் ஜேர்மனியின் மேற்கு பகுதி நகரமான டிரையரில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் அளவுக்கதிகமாக மது அருந்தியிருந்ததாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அரசியல் ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோஇடம்பெற்றதாக தாம் கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகர மேயர் இந்த சம்பவத்தை "பயங்கரமானது" என்று விவரித்தார்.
இந்த சம்பவத்தில் 25 மற்றும் 73 வயதுடைய இரண்டு பெண்கள், 45 வயது ஆண் மற்றும் ஒன்பது மாத குழந்தை அடங்குவதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 25 ஜூன், 2020

மகிழ்ச்சியான செய்தியைச் சொன்ன ஜேர்மனி..வருகிறது கொரோனாவிற்கு தடுப்பூசி

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ‘க்யூர்வேக்’ (CureVac)என்ற நிறுவனம் கொரோனா சிகிச்சைக்கான தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இது, பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத
 நிறுவனம் ஆகும்.
டியுபிங்கன் பல்கலைக்கழக வைத்தியசாலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் பீட்டர் கிரம்ஸ்னர் தலைமையில் இந்த ஆராய்ச்சி இடம்பெற்று வருகின்றது.இந்த தடுப்பூசியை உருவாக்கும்
 பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.இதை முதலில் பரிசோதித்து பார்ப்பதற்காக, ஜேர்மன் மற்றும் பெல்ஜியத்தில் மொத்தம் 144 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இன்னும் 2 மாதங்களில்
 அவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட்டு, 
முடிவுகள் வெளியிடப்படும்.பீட்டர் கிரம்ஸ்னர் கூறியதாக இந்த தகவலை ஜேர்மன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.பரிசோதனைக்குப் பின்னர் அடுத்த ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று, பீட்டர் கிரம்ஸ்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளமை 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 9 ஏப்ரல், 2019

வாழைப்பழப் பெட்டிகளுக்குள் ஜெர்மனியில் சிக்கிய மர்மம்

ஜெர்மனியில் ஆறு வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட வாழைப் பழப் பெட்டிகளுக்குள் நூற்றுக்கணக்கான கிலோகிராம் கோக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழைப்பழப் பெட்டிகளில் பதுக்கி வைக்கப்படிருந்த போதைப்பொருள் பிரித்து எடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு சுமார் 28 மில்லியன் டொலர்.
வாழைப் பழங்களிடையே பதுக்கப்பட்ட போதைப்பொருள் எங்கிருந்து வந்தது, எங்கு செல்ல வேண்டியது என்பது இதுவரை தெரியவில்லை.
கடந்த ஆண்டு இதே போல அன்னாசிப் பழங்களுக்கு இடையே 109 கிலோகிராம் போதைப்பொருள் பதுக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


>

செவ்வாய், 8 ஜனவரி, 2019

தமிழர் திருவிழா டோட்முண்ட் தமிழர் அரங்கில் 16.01.19

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் அனைத்து மதத்தவருக்கும் முக்கியம் கொடுத்து பொங்கள்விழாவில் மும்மத இணைப்பாக பெங்கல்விழா சிறப்பாக நடைபெறுகின்றது,
அந்த வகையில் எந்தமதமாக இருந்தாலும் தமிழ் ஈழத்து மக்களாகிய எமக்கு பெபங்கள்விழா என்பது இணை
வான விழாவாகும் அந்த வரிசையில் வருகின்ற 16.01.2019 அன்று தமிழர் அரங்கில் பொங்கல்விழாவவை சிறவப்பித்து நிற்போம் என அழைக்கின்றார்கள் தமிழர் அரங்கின் உரிமையாளர்கள் 
திரு திருமதி சபேசன் குழுவினர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 23 டிசம்பர், 2018

உளவுத்துறையினர் எச்சரிக்கை ஜேர்மன் விமான நிலையங்களுக்கு

ஜேர்மனியின் பெரிய விமான நிலையங்கள் சிலவற்றுக்கு அந்த நாட்டு உளவுத்துறையினரால் அபாய எச்சரிக்கை
 விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்டட்காட் விமான நிலையத்தில் நான்கு சந்தேகத்திற்கிடமான தீவிரவாதிகளின் பிரசன்னத்தை அடுத்து இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள்
 தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் மேலும் இரண்டு பேர் விமான நிலையத்தின் முனையம் மற்றும் தரைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் புகைப்படம் எடுத்ததை அடுத்து அவர்களை தேடும் நடவடிக்கை 
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் மொரோக்கோ புலனாய்வு சேவையிடமிருந்து ​ஜேர்மன் பொலிஸாருக்கு 
வழங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் எல்லையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற்று ஒருவார காலத்தின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 10 ஜூலை, 2018

வரலாறு காணாத வெயிலினால் ஜேர்மனியில் ஏற்பட்ட நிலை

வறண்ட நிலங்களும் வனத்தீயும் ஒரு பக்கம், கிடைத்த வெயிலில் சூரியக் குளியல் போடும் செல்வந்தர்கள் மறுபக்கம், அறுவடை குறித்த கவலையில் விவசாயிகள் என பல தரப்பினர் மீதும் வெவ்வேறு வகையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ஜேர்மனியின்
 தட்பவெப்பநிலை.
வடகிழக்கு ஜேர்மனியில் சமீப மாதங்களாக சுத்தமாக மழையே இல்லை. சதுர மீற்றருக்கு வெறும் 50 லிற்றர் மழை மட்டுமே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இது வழக்கமான 
அளவில் பாதிதான்.
Lower Saxonyயில் காட்டுத்தீ எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு ஜேர்மனியில் சில நகரங்களில் பெய்த மழையால் பெரு 
வெள்ளம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் காட்டுத்தீயின் அபாயம் மிக அதிகமாக காணப்படுகிறது. சமீப சில வாரங்களாக 100 இடங்களில் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்துள்ளனர்.
Oder-Spree பகுதியில் பற்றிய தீயை அணைக்க 40 தீயணைப்பு வீரர்களுக்கு 13 மணி நேரம் பிடித்தது.
இதற்கிடையில் Saxony-Anhalt பகுதியில் தீயை அணைக்க தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை நீச்சல் குளங்கள் போன்ற இடங்களிலிருந்தெல்லாம் உறிஞ்சி
 வருகின்றனர்.
வறட்சி தீயை ஏற்படுத்துவதோடு விவசாயிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பல விவசாயிகள் தங்கள் பயிர்களை முன் கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். வரும் மாதங்களில் பயிர்கள் விரைந்து முதிர்ச்சியடைந்து விடும் அதே நேரத்தில் மழை பற்றாக்குறை காரணமாக விளைச்சல் குறைவாகவே இருக்கும். இதற்கிடையில், ஏற்படும் திடீர் வெள்ளமோ பயிர்களை மொத்தமாக 
காலி செய்துவிடும்.
உருளைக்கிழங்கு, கரும்பு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றிற்கு கோதுமையை விட அதிகம் தண்ணீர் தேவை. ஆகவே ஜேர்மனியின் மக்காச்சோளப் பயிர்கள் அசாதாரண வறண்ட தட்பவெப்பநிலை காரணமாக பெரும் பாதிப்பை அடைந்துள்ளன.
அதீத வறட்சி மரங்களுக்கு நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துவதோடு அவற்றிலிருந்து மீள அவற்றிற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஆனால் மரங்களுக்கு நல்ல நினைவாற்றல் உண்டு என்பதால் அவை இதுபோன்று பல ஆண்டுகள் தொடர்ந்து வறட்சி நிலவினால் தட்பவெப்பநிலைக்கு ஏற்றார்ப்போல் தங்களை மாற்றிக் கொள்ளும்.
 மரங்களெல்லாம்
அழிந்து சப்பாத்திக் கள்ளி நிலத்தை ஆக்கிரமித்துக் கொள்வதைத் தவிர்க்க சில ஜேர்மன் நகரங்கள் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுமாறு தங்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

சனி, 2 ஜூன், 2018

அகதிகளுக்கு ஜேர்மனியில் இனி இடமில்லை!

ஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Salzgitter நகரத்தின் இந்த முடிவால் ஏற்கனவே யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் சேர முடியாத சூழ ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பலரை நகருக்குள் அனுமதிப்பதால் அதன் உள்கட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஜேர்மனியின் வடக்கிலிருக்கும் நகரமான Salzgitter, நாட்டில் புதிய வாழ்க்கையை தேடி வரும் அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நகரம் என்னும் வரலாற்றுப் பெருமை கொண்ட நகரமாகும்.



2015 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சனையின்போது ஏஞ்சலா மெர்க்கல் அகதிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்றது முதற்கொண்டு ஜேர்மனி ஐரோப்பாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் ஒன்றரை மில்லியன் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



அந்த நேரத்தில் Salzgitter 6000 அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது. ஆனால் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை.



இந்த செய்தி, தானும் தங்கள் இரட்டைப் பிள்ளைகளும் ஜேர்மனியிலும் தங்கள் கணவரான சமே வாடா நாட்டிற்கு வெளியிலும் வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் காட்யா அப்துல்லா போன்ற பெண்களின் துயரத்தை அதிகரித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திங்கள், 18 டிசம்பர், 2017

புதிய முயற்சியில் சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் பி.எம்.டபிள்யூ!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய 
தொழில்முயற்சியானது 
ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு செலவுகள் குறைவு என்பதே பிரதான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த திட்டமானது அடுத்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 20 நவம்பர், 2017

ஜேர்மனியில் ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு தடை!

நாட்டின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக செயல்படுவதால் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்களின் விற்பனைக்கு ஜேர்மனியில் தடை செய்யப்பட்டுள்ளது.ஜேர்மனியில் குழந்தைகளுக்கான ஸ்மார்ட் வாட்சுகள் அதிகளவில் உபயோகப்படுத்தபடுகின்றன.முக்கியமாக 5-லிருந்து 12 வயதுடைய குழந்தைகளை இவை குறிவைக்கின்றன. இவ்வகை வாட்சுகளில் சிம் கார்டு கூட பொருத்தமுடியும், ஆப்ஸ் மூலம் தங்கள் குழந்தைகள் எங்கிருந்தாலும் அவர்களை கண்காணிக்கவே, உரையாடவோ
 பெற்றோரால் முடியும்.
இது ஜேர்மனியின் கண்காணிப்பு சட்டங்களுக்கு எதிராக இருப்பதையடுத்து விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் பெடரல் நெட்வொர்க் ஏஜென்சி தலைவர் ஜோசென் ஹோமன் கூறுகையில், குழந்தைகளின் பெற்றோர்கள் இவ்வகை வாட்சுகளை உடனடியாக அழித்துவிட அறிவுறுத்தியுள்ளோம்.
எங்கள் விசாரணையில் பள்ளி வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளையும், ஆசிரியர்களையும் பெற்றோர்கள் ஸ்மார்ட் வாட்சுகள் மூலம் கண்காணிப்பது உறுதியாகியுள்ளது.
பள்ளி நிர்வாகமும் இந்த விடயத்தில் மாணவர்கள் மீது ஒரு கண் வைக்க வேண்டும் என கூறியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 4 செப்டம்பர், 2017

பிராங்க்பேர்ட் நகரின் இருந்து 70 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகரின் பல்கலைக்கழக வாளகமொன்றில் அண்மையில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த குண்டு இன்றைய தினம் செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் அதன் பொருட்டு அங்குள்ள சுமார் 70 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் தற்காலிகத் தங்குமிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டானது 2ம் உலக மகாயுத்தத்தின் போது இங்கிலாந்து விமானப் படையினரால் வீசப்பட்டதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




ஞாயிறு, 2 ஜூலை, 2017

சுவெற்றா நகரில் இணுவையூர் ஒன்றியத்தின் ஆண்டுவிழா 2017

யேர்மனி சுவெற்றா நகரில் இணுவையூர் ஒன்றியத்தின் 2 வது ஆண்டுவிழா (2017)சிறப்பாக பல்சுவைக்கலை நிகழ்வுகளுடன்
 இனிதே நடந்தேறியுள்ளது இளையோர் நெறிப்படுத்தி பல்சுவை குரலிசை ,நடனங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என சிறப்புற்ற நிகழ்வாக சிறந்து நின்றது வாழ்த்துக்கள்
நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 14 மே, 2017

திருடன் படத்தின் முன் அட்டைப்படம் வெளியாகியுள்ளது

யேர்மனியில் இருந்து மிகவிரைவில் வெளிவர இருக்கும் திருடன் குறும் படம்
அதற்கான காட்சிப்படுத்தல் நிறைவாகி படத்தொகுப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றது இளம் நாயகன் சுரேந்தர் உடன் மற்றும் பல கலைஞர்கள் இணைந்த நடிப்பில் இளமைத்துடிப்பின் வேகத்தையும் முதுமையின் ஆற்றலையும் வித்தியாசமான கதை ஓட்டத்தில் வெளிவர உள்ளது திருடன் குறும்படம்

இதற்கான கதை நெறியாழ்கை ஒளிப்பதிவு படத்தொகுப்பு அனைத்தையும் கமல் அவர்கள் சிறப்பாக செயலாற்றியுள்ளார் ,

இவர் இதற்கு முதலும் மூன்று குறுப்படத்தை இயக்கியுள்ளார் அவையாவும் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன,
இவரின் திறமை என்பது கலைஞர்களால் மதிப்பிடவேண்டும் அதை இந்த திருடன் படம் உறுதிப்படுத்தும்,
மிக விரைவில் வெளிவர இருக்கும் இந்தக் குறும்படம் Kstar Production தயாரிப்பில் சுரேந்தர் இன்னும் பலர் நடிப்பிலும் எதிர்பாருங்கள் இதன் சுருக்க படச்சுறுள் மிகவரைவில் வெளிவரும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 12 மே, 2017

ஓர் முக்கிய தகவல் ஜேர்மனியில் வசிக்கும் வெளிநாட்டினர்களுக்கு?

ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது தானாக முன் வந்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவிக்கும் வெளிநாட்டினர்களுக்கு உதவும் வகையில் புதிதாக ஒரு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜேர்மனியில் புகலிடம் மறுக்கப்பட்ட அல்லது புகலிடத்திற்காக காத்திருக்கும் வெளிநாட்டினர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி செல்வது தற்போது மிகவும் குறைந்துள்ளதாக ஜேர்மனியின் குடியமர்வு துறை அலுவகலம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஜேர்மனியை விட்டு வெளியேறிய வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை 54,096 எனவும், நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் இந்த எண்ணிக்கை 11,000 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும், தானாக முன் வந்து தாய்நாடுகளுக்கு திரும்பி செல்ல விரும்பும் வெளிநாட்டினர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி உதவுவதற்காக பிரத்யோகமாக ஒரு தனி இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையத்தளத்தில் வெளிநாடுகளுக்கு திரும்பும் அகதிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் பற்றி தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
www.returningfromgermany.de என்ற அந்த இணையத்தளம் தற்போது ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் கூடுதலான மொழிகளிலும் தகவல்கள் பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கிராம மக்களுக்கு ராணுவ வீரர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரத்தில் ஜேர்மனியை சேர்ந்த Heinrich Steinmeyer(அப்போதைய வயது 19) என்ற ராணுவ வீரர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்கோட்லாந்து நாட்டில் உள்ள Comrie என்ற சிறிய கிராமத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். இக்கிராமத்தில் உள்ள Cultybraggan முகாமில் அடைக்கப்பட்ட வீரர் பல்வேறு இன்னல்களுக்கு
 உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், வீரரின் நிலையைக் கண்ட அக்கிராமத்து மக்கள் அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்ததுடன் அவருடன் அன்பாக பழகி வந்துள்ளனர்.
கிராமத்து மக்களின் அன்பைக் கண்டு புத்துணர்ச்சி பெற்ற வீரர் தனது துன்பத்திலிருந்து படிப்படியாக முன்னேறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வீரர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஜேர்மனிக்கு
 திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய 90வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால், உயிரிழப்பதற்கு முன்னதாக ஒரு பத்திரம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
அதாவது, தனது சொத்துக்களில் பாதியை (சுமார் 8 கோடி இலங்கை ரூபாய்) தன்னுடைய உயிரை காப்பாற்றிய Comrie கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய உடலை எரித்த பின்னர் அதன் ஒரு பாதியை அக்கிராமத்தில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரரின் விருப்பப்படி அத்தொகை கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இத்தொகை ஒவ்வொரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த உதவியை தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நன்றிக்கடனாக முன்னாள் ராணுவ வீரர் செய்துள்ள இச்செயல் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 1 அக்டோபர், 2016

தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது!

யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற் 
செய்தியாகும் ,
புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின் நற்குணத்தைஅவர்தங்களுடன் பளகும் அன்பை கூறி நின்றார்கள்,
யேர்மனிய வானொலி 92.2 கூட இவர் கருத்தை உள்வாங்கியது இவருக்காணபரிசளிப்பை பாராட்டி நின்றது மட்டுமல்ல அங்கு வந்தவர்கள் இவரைப்பாராட்டி நின்றது தமிழனான எனக்கு மகிழ்வைத்தந்தது என்பது தான் உன்மை இவர் இந்த ஆண்டு பெற்ற பாராட்டு பரிசுபோல் அடுத்த அண்டும் பெறவேண்டும் என்று இவரின் கடைக்கு வருபவர்கள் பாராட்டியதும் மகிழ்வானது இவர் தனது கருத்தை கூறும்
 போது இது 
எனக்கு கிடைத்த மதிப்பளிப்பல்ல உங்கள் எல்லோருக்கும் கிடைத்த பரிசளிப்பு என்ற போது அங்கிருந்தவர்கள் கரங்கள் ஓங்கி ஒலித்தது இவர் சிறப்பு இன்னும் வளர்கவென வாழ்த்தி நிற்போம்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 24 ஜூலை, 2016

ஜேர்மன் தாக்குதலில் இலங்கையர்களின் நிலமை?

ஜேர்மன் – முன்சன் நகரத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பேற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் இலங்கையர்கள் தொடர்பில் இராஜதந்திர முறையின் கீழ் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்காக 3 ஆயுததாரிகள் வந்துள்ளதாக முதல் செய்தி வெளியாகிய போதிலும் தாக்குதலை ஒருவரே மேற்கொண்டுள்ளதாக முன்சன்ச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஆயுததாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முனிச் நகர பொலிஸ் தலைமை அதிகாரி 
தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் சந்தேக நபர் 18 வயதுடைய ஜேர்மன் – ஈரானிய இரட்டை குடியுரிமையை கொண்டு முனிச் நகரில் வாழும் ஒருவராகும் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் தாக்குதலுக்கான காரணம் இன்னமும் தெளிவாக இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 31 மே, 2016

ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த மூதாட்டி: ஒரு அதிசய சம்பவம்!

வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் சாக்ஸோனி நகருக்கு அருகில் உள்ள Langwedel என்ற பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் உள்ள ரயில் பாதையை 91 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கடந்து சென்று வீடு திரும்புவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ’வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை ஊன்றிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது.
தண்டவாளத்தின் மத்தியில் நின்றுக்கொண்டுருந்த மூதாட்டி ‘இனி தப்பிக்க முடியாது’ என தீர்மானித்து தனது கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை அருகில் வீசிவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார்.
வேகமாக வந்த ரயில் அவர் உடல் மீது ஏறிச்சென்றுள்ளது. அப்போது, மூதாட்டி வீசிய வாக்கிங் ஸ்டிக் ரயில் சிக்கி இழுத்துக்கொண்டு
 சென்றுள்ளது.
’காட்டு விலங்கு மீது மோதி விட்டோம்’ என கருதிய ரயில் ஓட்டுனர் அடுத்ததாக வந்த Verden என்ற ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்துள்ளார்.
அங்கு, மூதாட்டி பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் சிதைந்து இருந்ததை அண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘முதியவர் மீது ரயிலை ஏற்றிவிட்டோம்’ என அச்சம் அடைந்த ஓட்டுனரால் ரயிலை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.
இந்நிலையில், எதிர்புறமாக சென்ற ரயில் ஓட்டுனர் ஒருவர் தண்டவாளத்தின் மத்தியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது, மூதாட்டி கூலாக எழுந்து நின்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சி
 அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, ‘உண்மையில் மூதாட்டி மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில், தண்டவாளத்தில் படுத்துள்ளபோது ரயில் ஏறிச்சென்றால், உடலில் உள்ள உடுப்புகள் ரயில் சிக்கி நபரை இழுத்துச்சென்று சிதைத்திருக்கும்.
ஆனால், மூதாட்டி தண்டவாளத்தின் மீது நேர்த்தியதாக படுத்திருந்ததால், அவரது உடல் உறுப்புகள் மற்றும் உடுப்புகள் எதுவும் ரயிலில் 
சிக்கவில்லை.
எனினும், மூதாட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளதாக பொலிசார் 
தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 30 மே, 2016

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது???

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக Dresden தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Focus என்ற நாளிதழ் ஜேர்மனியில் உள்ள 77 நகரங்களில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வருவாய், கல்வித்திறமை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், சம உரிமை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இதில் எந்த நகரம் அவர்கள் நட்புறவுடன் வாழ்வதற்கு சிறப்பாக உள்ளது என்பது குறித்து 
கணக்கெடுப்பு நடத்தியது.
இதில் Dresden நகரம் முதலிடத்தில் உள்ளது, இந்நகரில் 92 சதவீத பெண்கள் சம்பாதிக்கின்றனர். மேலும் இங்கு வசிக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவும், இவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மிக குறைந்த அளவிலேயே உள்ளன.
மேலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் இவர்களுக்கும் கிடைக்கின்றன. இரண்டாவது இடத்தில் Heidelberg நகரம் உள்ளது, முனிச் 6வது இடத்திலும், பெர்லின் 10வது இடத்திலும், Hamburg 16வது இடத்திலும், Dusseldorf 23வது இடத்திலும் உள்ளது.
Ludwigshafen நகரில் பணிக்கும் செல்லும் பெண்களின் பணி விகிதம் குறைவு ஆகும், மேலும் பெண்கள் வசிப்பதற்கு மிகவும் மோசமான இடமாக இந்நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இங்கு பெண்களுக்கு எதிரான நடக்கும் வன்முறைகள் அதிகம் ஆகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>