கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், கோவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோவிட் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமற்றது என அமெரிக்கா
அறிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக