நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 17 பிப்ரவரி, 2020

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் பாரியளவு திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா எனப்படும் கொவிட் – 19 வைரஸ் தொற்றினால் ஏற்பட்டுள்ள பொருளாதார அழுத்தம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.அதற்கமைய வார
 இறுதியில் தங்கம் ஒரு அவுன்ஸின விலை
 1589 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.வைரஸ் தொற்று மேலும் 
நீடித்தால் தங்கத்தின் விலை 1600 அமெரிக்க
 டொலர் வரை அதிகரிக்கும் என உலக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் மாத்திரமின்றி பெல்லேடியம், 
பிளாட்டினம் மற்றும் வெள்ளி போன்ற பிற விலைமதிப்புள்ள உலோகங்களின் விலையும் பாரியளவு அதிகரித்துள்ளது.வெள்ளை தங்கத்திற்கு மாற்று பொருளான பெல்லேடியம் ஒரு அவுன்ஸின் விலை நூற்றுக்கு 4 வீதம் அதிகரித்துள்ளது. அதன் விலை 2417 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக 
                                                       குறிப்பிடப்படுகின்றது

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

முதியவரின் இடுப்பு எலும்பு முறிந்த எக்ஸ்ரேயை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி

இடுப்பு எலும்பு முறிந்த முதியவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரேயை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.பிரிட்டனின் பக்கிங்காம்ஷையரை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே படத்திலேயே இந்த அதிர்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த முதியவர் தவறி விழுந்த நிலையில், அவரது மகனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், முதியவரின் இடுப்புப் பகுதியின் எண்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என சந்தேகித்த வைத்தியர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கத் தீர்மானித்தனர்.பின்னர், எக்ஸ்ரேயை பார்த்த வைத்தியர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.முதியவரின் எக்ஸ்ரேயில் இடுப்பு என்பு பகுதியில், மண்டையோடு ஒன்று தெரிந்துள்ளது. இதனைக்கண்ட வைத்தியர்களும் திகைத்துள்ளனர். குறித்த மண்டையோடு குறித்து, வைத்தியர்களுக்கும் இதுவரை உண்மை தெரியவில்லை.இந்நிலையில், குறித்த முதியவர் உடல்நிலை சுமுகமாகி வீடு திரும்பியுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>