நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 23 டிசம்பர், 2017

வாழ்நாளில் விளையாட்டுத்துறையில் அதிகமாக சம்பாதித்த வீரர்கள்

விளையாட்டுத்துறையில் வாழ்நாளில் அதிகமாக சம்பாதித்த வீரர்களின் பட்டியலை அமெரிக்காவை தலைமையிடமாக 
கொண்டு இயங்கும் பிரபல சஞ்சீகையொன்று வெளியிட்டுள்ளது.இதில் கூடைப்பந்தாட்டம், கோல்ப் விளையாட்டு
, கார் பந்தயம், கால்பந்தாட்டம், குத்துச்சண்டை, டென்னிஸ், அடிப்பந்தாட்டம் (பேஸ் போல்) ஆகிய விளையாட்டில் அதிகம் சம்பாதித்த 20 வீரர்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.இதில், 1.85 பில்லியன்
 டொலர்களுடன் முன்னாள் அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர் மைக்கல் ஜோர்டன் முதலிடத்திலுள்ளார். இவருக்கு அடுத்த படியாக உலகின் பணக்கார விளையாட்டான கோல்ப் விளையாட்டில் 
பிரபலமான டைகர் வுட்ஸ் 1.7 பில்லியன் டொலர்களுடன் இரண்டாவது இடத்திலும், மற்றொரு கோல்ப் வீரரான ஆர்னெல்ட் பால்மர் 1.4 பில்லியன் டொலர்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.இப்பட்டியலில், இருபதாவது இடத்தில் பிலிப்பைன்ஸின்
 குத்துச் சண்டை வீரர் மேனி பேக்குயோ உள்ளார். ஆனால் இதில் கிரிக்கெட் வீரர்கள் எவருமே இடம்பெறவில்லை என்பது சற்று 
கவலைக்குரிய விடயமே. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



திங்கள், 18 டிசம்பர், 2017

புதிய முயற்சியில் சாரதியற்ற மின்சார கார்களை நிறுவும் பி.எம்.டபிள்யூ!

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய 
தொழில்முயற்சியானது 
ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என 
எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில் இத்தொழில்முயற்சியை முன்னெடுப்பதற்கு, அங்கு செலவுகள் குறைவு என்பதே பிரதான காரணமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த திட்டமானது அடுத்த தசாப்தத்தின் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 13 டிசம்பர், 2017

துவைக்காத தலையணையை பயன்படுத்திய பெண்ணுக்கு நேர்ந்த கதி!

    ஐந்து  வருடங்கள்  துவைக்காத தலையணையை பயன்படுத்திய சீனாவை சேர்ந்த பெண்மணி ஒருவரின் கண் இமையில் 100 ஒட்டுண்ணிகள் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.Ms Xu  என்பவர் கடந்த இரண்டு வருடங்களாக கண் அரிப்பு பிரச்சனையால்
 பாதிக்கப்பட்டுள்ளார். இவரது கண்களும் சிவப்பு நிறமாக மாறியுள்ளது.இதனைத்தொடர்ந்து 
மருத்துவரிடம் சென்றுள்ளார். இவரது கண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் கண் இமையில் 100 ஓட்டுண்ணிகள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். கண்களில் ஒட்டுண்ணி
 பாதிப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரிக்காது என 
மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இப்பெண்மணி கடந்த 5 வருடங்களாக தான் பயன்படுத்தும் தலையணையை துவைக்காமல் வைத்திருந்துள்ளார். துவைக்காமல் தலையணையை பயன்படுத்தியதால் கண்களில் அலர்ஜி மற்றும் வெண்படல பாதிப்பால் ஒட்டுண்ணிகளின்
 எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.இதற்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமாகுமென மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அணு ஆயுதப்போரை கொரியத் தீபகற்பத்தில் தவிர்க்க முடியாதது’ பெரும் பரபரப்பு!!

வடகொரியா சமீபத்தில், அமெரிக்காவின் பிரதான பகுதிகளை தாக்குகிற வல்லமை கொண்ட ஏவுகணையை ஏவி சோதித்தது. மேலும், தன்னைத்தானே அணு ஆயுத நாடாகவும், ஏவுகணை நாடாகவும் அறிவித்துக்கொண்டது.அதைத் தொடர்ந்து 230 போர் விமானங்களுடன் கூடிய கூட்டு போர் பயிற்சியை அமெரிக்காவும்,
 தென்கொரியாவும் மேற்கொள்ள, அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் 
அதிகாரி ஜெப்ரி பெல்ட்மேன், சிறப்பு தூதராக வடகொரியாவுக்கு சென்றார். அவர் பியாங்யாங் நகரில்
 அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை.இந்தநிலையில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதப்போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது 
என வடகொரியா கூறி உள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘மக்களின் இதயங்களில்
 வீற்றிருக்கிற தலைவர் கிம் ஜாங் அன் மீது அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் மைக் போம்பியோ ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.பெரிய 
அளவில் அணு ஆயுத போர் பயிற்சியை அமெரிக்கா நடத்தி உள்ளது. நாங்கள் போர் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அதே நேரத்தில் நாங்கள் அணு ஆயுதப்போரில் இருந்து எங்களை 
ஒளித்துக்கொள்ள மாட்டோம். எங்கள் வல்லமையை கொண்டு அமெரிக்காவுக்கு சரியான  பதிலடி கொடுப்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார் .இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>