நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 10 டிசம்பர், 2017

அணு ஆயுதப்போரை கொரியத் தீபகற்பத்தில் தவிர்க்க முடியாதது’ பெரும் பரபரப்பு!!

வடகொரியா சமீபத்தில், அமெரிக்காவின் பிரதான பகுதிகளை தாக்குகிற வல்லமை கொண்ட ஏவுகணையை ஏவி சோதித்தது. மேலும், தன்னைத்தானே அணு ஆயுத நாடாகவும், ஏவுகணை நாடாகவும் அறிவித்துக்கொண்டது.அதைத் தொடர்ந்து 230 போர் விமானங்களுடன் கூடிய கூட்டு போர் பயிற்சியை அமெரிக்காவும்,
 தென்கொரியாவும் மேற்கொள்ள, அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உயர் 
அதிகாரி ஜெப்ரி பெல்ட்மேன், சிறப்பு தூதராக வடகொரியாவுக்கு சென்றார். அவர் பியாங்யாங் நகரில்
 அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி ரி யோங் ஹோவை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இருவரும் என்ன பேசிக்கொண்டனர் என்பது குறித்து தெரியவில்லை.இந்தநிலையில், கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதப்போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது 
என வடகொரியா கூறி உள்ளது. இதுபற்றி அந்த நாட்டின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ‘மக்களின் இதயங்களில்
 வீற்றிருக்கிற தலைவர் கிம் ஜாங் அன் மீது அமெரிக்க உளவுத்துறையின் தலைவர் மைக் போம்பியோ ஆத்திரம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.பெரிய 
அளவில் அணு ஆயுத போர் பயிற்சியை அமெரிக்கா நடத்தி உள்ளது. நாங்கள் போர் நடக்க வேண்டும் என்று விரும்பவில்லை. அதே நேரத்தில் நாங்கள் அணு ஆயுதப்போரில் இருந்து எங்களை 
ஒளித்துக்கொள்ள மாட்டோம். எங்கள் வல்லமையை கொண்டு அமெரிக்காவுக்கு சரியான  பதிலடி கொடுப்போம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார் .இதனால், கொரிய தீபகற்பப் பகுதியில் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக