நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 24 ஜூன், 2022

தல்கஸ்பிடியவில் இரண்டரை வயதில் சாதனை படைத்த சிறுவன்

இலங்கை கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய எனும் ஊரைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.
19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனைப் புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்து உலக சாதனை படைத்து தனது பொற்றோர்களுக்கும், நாட்டுக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது உலகச் சிறுவன் எனும் அந்தஸ்தையும் அவர் தனதாக்கிகொண்டார்.
ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசியா சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்ததுடன் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டதுடன் தற்போது இவருக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு
 வந்து சேர்ந்துள்ளன.
முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இச் சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனையை நிகழ்த்திய முதலாவது சிறுவனாக இருப்பது விசேட
 அம்சமாகும்.
மேலும் இந்த குழந்தை சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>புதன், 15 ஜூன், 2022

பிரித்தானிய பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம்

பிரித்தானியாவில் அடுத்த வாரம் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், தேவையின்றி ரயில்களில் பயணிக்க வேண்டாம் என்று பயணிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஐந்தில் ஒரு பகுதி ரயில் சேவைகள் மட்டுமே இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 21, 23 மற்றும் 25 ஆகிய திகதிகளில் பிரித்தானியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ள நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ரயில் பாதைகள் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது
அத்துடன், ரயில் சேவைகள் 07:30 மணி முதல் 18:30 மணி வரை முன்னதாகவே தொடங்கி முடிவடையும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் கிளாஸ்கோ அல்லது எடின்பர்க் மற்றும் கார்ன்வாலில் உள்ள பென்சன்ஸ் வரை பல இடங்களில் ரயில்கள் சேவையில் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
டோர்செட்டில் உள்ள போர்ன்மவுத், சவுத் வேல்ஸில் உள்ள ஸ்வான்சீ, வடக்கு வேல்ஸில் உள்ள ஹோலிஹெட், செஷயரில் உள்ள செஸ்டர் மற்றும் லங்காஷயரில் உள்ள பிளாக்பூல் உள்ளிட்ட இடங்களுக்கு பயணிகள் சேவைகள் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் மற்றும் மான்செஸ்டர் போன்ற இடங்கள் வழியாக லண்டனில் இருந்து ஸ்காட்லாந்திற்கு செல்லும் வெஸ்ட் கோஸ்ட் மெயின் லைன் திறந்திருக்கும் பாதையில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்படும் கால அட்டவணை
இருப்பினும், வேலைநிறுத்த நாட்களில் ரயில்கள் குறைந்த மணிநேரம் இயங்குவதால், இறுதிப் புறப்பாடுகள் வழக்கத்தை விட மிகவும் முன்னதாகவே இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்லும் கடைசி ரயில் 14:47 மணிக்கும், நார்விச்சிலிருந்து லண்டனுக்கு 16:00 மணிக்கும் கடைசி ரயில் 15:00 மணிக்கு லண்டனிலிருந்து எடின்பரோவுக்கும் 
புறப்படும்.
ஜூன் 20 முதல் ஜூன் 26ம் திகதி வரையிலான கால அட்டவணை இறுதி செய்யப்படுகிறது. பொதுவாக 20,000 ரயில் சேவைகளுடன் ஒப்பிடும்போது ரயில் சேவைகளின் எண்ணிக்கை சுமார் 4,500 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 60 வீத சேவைகள் மட்டுமே இயங்கும் என எதிர்பார்க்கப்படும் வாரத்தில் வேலைநிறுத்தம் இல்லாத நாட்களில் இடையூறுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
சனி, 11 ஜூன், 2022

கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானம் ஒன்றை அமெரிக்க எடுத்துள்ளது.இதன்படி, நாளை முதல் கோவிட் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வேறொரு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு, கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதிப்படுத்தப்பட்ட சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், கோவிட்-19 தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றத்தினை கருத்திற்கொண்டு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கோவிட்  தொற்றுக்கு உள்ளாகவில்லை என்ற சான்றிதழை கொண்டிருப்பது அவசியமற்றது என அமெரிக்கா 
அறிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>
சனி, 4 ஜூன், 2022

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல் உணவிலிருந்து சிமென்ட்தயாரிப்பு

வீணாக்கப்படும் உணவுக் கழிவுகளில் இருந்து கட்டுமானத்திற்கு தேவையான சிமென்ட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறினால் நம்ப முடிகிறதா?
‘நீங்க நம்பலனாலும் அதுதான் நெசம்’
ஆம். ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் தொழில்துறை அறிவியல் ஆராய்ச்சியாளர்களான கோட்டா மச்சிடா, யுயா சகாய் ஆகிய இருவரும் இணைந்து வீணாகும் உணவுக்கழிவுகளை கொண்டு கட்டுமானப் பயன்பாட்டிற்கான சிமென்ட்டை தயாரித்திருக்கிறார்கள்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில்
 உணவு பொருட்களில் இருந்து முற்றிலும் சிமென்ட் தயாரித்திருப்பது உலகிலேயே இதுவே முதல் முறையாகும்.
 இந்த வகை
 சிமென்ட் வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்க்ரீட்டை விட நான்கு மடங்கு அதிகம் என மச்சிடாவும், சகாயும் கூறுகிறார்கள்.
உணவுக் கழிவுகள் அழுகி, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் மீத்தேன் போன்ற வாயுக்களாக வெளியேறி, அதனால் ஏற்படும் புவி வெப்பமயமாதல், இந்த கண்டுபிடிப்பின் மூலம் குறையும் என நம்புவதாக ஆராய்ச்சியாளர்கள் மச்சிடா, சகாய் தெரிவித்துள்ளனர்.
உலகின் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தில் 8 சதவிகிதம் சிமென்ட் உற்பத்தியால் ஆனது என இங்கிலாந்தின் சாதம் ஹவுஸ் என்ற சிந்தனைக் குழு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய டோக்கியோ
 பல்கலைக்கழக தொழில்துறை அறிவியலின் இணை பேராசிரியரான சகாய், வழக்கமாக பயன்படுத்தும் சிமென்ட் அடிப்படையிலான 
கான்க்ரீட்டுக்கு மாற்றாக நிலையான திறன் கொண்ட பொருட்களை ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த தொழில்நுட்பத்தை
 உருவாக்கினோம் என்றார்.
முதலில் மரத்துகள்களை பொடியாக்கி அதனை சுருக்கி, பின்னர் உலர்த்துகள், தெளித்தல் போன்ற செயல்முறைகளை சந்தையில் கிடைக்கும் கலவைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்தப் பொருட்கள் ஒட்டிக்கொள்ள பிளாஸ்டிக்குகள் தேவைப்பட்டன.
பல மாத தோல்விகளுக்கு பிறகு உணவுக்கழிவுகளை கொண்டு அதன் வெப்பநிலை மற்றும் அழுத்தத்தை சரி செய்ததன் மூலம் சிமென்ட்டை பிணைக்க முடியும் என்பதை கண்டறிந்தோம்.
ஒவ்வொரு வகை உணவுக் கழிவுகளுக்கும் வெவ்வேறு வெப்பநிலை மற்றும் அழுத்த அளவுகள் தேவைப்பட்டதாகவும், அதனை சீராக்கும் பணி கடினமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள அவர்கள், தேயிலை
 இலைகள், ஆரஞ்சு மற்றும் வெங்காயத் தோல்கள், காபி கொட்டைகள், சீன முட்டைக்கோஸ் போன்றவற்றை பயன்படுத்தி வெற்றிகரமாக உணவு சிமென்ட்டை தயாரித்ததாக தெரிவித்துள்ளனர்.
சிமென்ட்டில் நீர் புகாமல் இருக்கவும், அதனை கொறித்திண்ணிகள் உள்ளிட்ட பிற பூச்சியினங்கள் உண்ணாமல் பாதுகாக்க, அதன் மேல் ஜப்பானிய அரக்கு பூசலாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
கோட்டா மச்சிடா Fabula Inc என்ற நிறுவனத்தை தொடங்கினார். அவரது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மற்ற நிறுவனங்களுடன் இணைந்து உணவுக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்ட சிமென்ட்டை கொண்டு கட்லரிகள், அறைகலன்களை தயாரிக்கும் வேலைகளிலும் ஈடுபட்டு
 வருகிறார்களாம். அவ்வாறு தயாரிக்கப்படும் பொருட்களை அமேசான் மூலமும் வாங்கும் வகையில் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார்களாம்.
முன்னதாக, உலகளவில் உணவு பொருட்களை
 வீணாக்கப்படுவது மிகப்பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குறிப்பாக ஜப்பானில் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு 5.7 மில்லியன் டன் உணவுக் கழிவுகள் உற்பத்தியாகியிருக்கிறது. அதனை 2030ம் ஆண்டுக்குள் 2.7 மில்லியன் டன்களை குறைக்க அந்த நாட்டு அரசாங்கம் இலக்கு வைத்துள்ளதும்
 குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>வெள்ளி, 3 ஜூன், 2022

தாய்லாந்தில் ஒருவரின் தொண்டைக்குள் துள்ளி குதித்த மீன்

தாய்லாந்து நாட்டின் பாட்தலங் மாகாணத்தில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் ஆர்வத்தில் நபர் ஒருவர் சென்றுள்ளார். இதற்காக நீரில் தூண்டிலை போட்டு விட்டு காத்திருந்து உள்ளார். அவரது தூண்டிலில் மீன் சிக்குவதற்கு முன், நீரில் துள்ளி குதித்தபடியே வந்த மீன் ஒன்று, அந்த மனிதரின் 
தொண்டைக்குள் விழுந்துள்ளது.
5 அங்குலம் நீளம் கொண்ட அந்த மீன் அவரது மூக்கு வழியே வெளியேற முயற்சித்து முன்னேறி உள்ளது. ஆனால், குறுகலான பகுதியில் அதனால் வெளியே வர முடியவில்லை. தொண்டைக்கும், சுவாச குழிக்கும் இடையில் அந்த மீன் சிக்கி கொண்டது. இதனால், பிராணவாயு செல்லும் வழி அடைப்பட்டது. இதில் திணறி போன அந்த நபர் தொண்டையை இறுக
 பிடித்து கொண்டார்.
உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்க்கப்பட்டது. மீன் சிக்கி இருந்த சரியான இடம் கண்டறியப்பட்டு, அவசரகால அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இதுபற்றி மருத்துவமனையின் அதிகாரி செர்ம்ஸ்ரீ பாத்தோம்பனிகிராட் கூறும்போது, நீரில் இருந்து துள்ளி குதித்து ஒருவரின் தொண்டையில் மீன் சிக்கிய சம்பவம் நடப்பதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
இதற்கு முன் இதுபோன்ற விசயங்களை நான் கேள்விபட்டதே இல்லை. எங்களது நோயாளியின் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாத வகையில் மருத்துவர்கள் செயல்பட்டனர். அவரை காப்பாற்றி விட்டனர் 
என கூறியுள்ளார். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தாய்லாந்தின் ஆவோ டான் கூ பீச்சில், நீச்சலில் ஈடுபட்டிருந்த சுற்றுலாவாசியான நொப்படோல் ஸ்ரீங்கம் என்பவரின் தொண்டையில் ஊசி மீன் ஒன்று குத்தியது. இதில், அவரது நிலைமை மோசமடைந்தது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>