நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 நவம்பர், 2015

இருவது செக்கனுக்குள் ஒரு குழந்தை நீரால் ஏற்படும் நோயால் இறப்பு ?

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர், வைத்தியர் வைதேகி ஆர்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான 
அறிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு 
மாநகரசபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல் தொடர்பான 
விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர்.பிரான்சிஸ், நீரினை சுத்தமான முறையில் பருகாவிட்டால் பல்வேறு தொற்று நோய்களுக்கு உட்படும் நிலைமையேற்படுகின்றது. உலகில் 3.5 மில்லியன் பேர் நீரினால் ஏற்படும் நோயினால் இறக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகளவான இறப்புகள் ஏ
ற்படுகின்றன.
நீரினால் ஏற்படும் பிரச்சினையின் முக்கியமாக கருதப்படுவது வயிற்றோட்டமாகும். உலகில் பயங்கரவாத தாக்குதல்களினால் இறப்பவர்களை விட இந்த வயிற்றோட்டத்தினால் இறப்பவர்களே அதிகமாகவுள்ளனர்.
இதேபோன்று கொலறா போன்ற நோய்களும் தண்ணீர் தொற்றினால் ஏற்படுகின்றது. 200ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் கொலறா அறிக்கையிடப்படாத நிலையே இருக்கின்றது. 
எனினும் 
எமது அண்டை நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் உள்ளது. இங்கிருந்து அங்கு செல்பவர்கள் ஊடாக அது இங்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 26 நவம்பர், 2015

அதிர்ச்சி சம்பவம்: ஹெலிகொப்டர் விபத்து : 15 பேர் பலி!!!


ரஷ்யாவை சேர்ந்த ஹெலிகொப்டர் சைபீரியாவில் இன்று விழுந்து நொறுங்கியதில் 15 பேர் பலியாகியுள்ளனர். கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் உள்நாட்டு போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் சென்ற எம்.ஐ.-8 ஹெலிகொப்டர் மேற்கு சைபீரியாவின் 
ஐகர்கா
 நகரம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள். 
10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடம் தலைநகர் மொஸ்கோவில் இருந்து 2800 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டர் பறக்கத் தொடங்கிய 15 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாகவும், இதனால் ஹெலிகொப்டரை அவசரமாக தரையிறக்க முயன்றபோது விபத்து நடந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
கடந்த சில வாரங்களில் மட்டும் ஒரு பயணிகள் விமானம் (224 பேர் பலி), ஒரு போர் விமானம், தற்போது ஹெலிகொப்டர் விபத்து என அடுத்தடுத்து நடந்த மூன்று சம்பவங்களால் ரஷ்ய மக்கள் அதிர்ச்சியில் 
உறைந்துபோயுள்ளனர்.      
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 23 நவம்பர், 2015

இன்டர்செப்டர் ஏவுகணை :உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வெற்றி கரமாக சோதனை!!!

ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இன்டர்செப்டர் ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
மேம்பட்ட வான் பாதுகாப்பு (AAD-Advanced Air Defence) வகையைச் சேர்ந்த இன்டர்செப்டர் ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திபூர் கடல் பகுதியில் உள்ள அப்துல்கலாம் தீவிலிருந்து இன்று காலை 9.46 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
மேல்வெளியில் பறந்து ‌எதிரிகளின் ஏவுகணையை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்ட சூப்பர்சானிக் இன்டர்செப்டர் ஏவுகணை ராணுவத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று 
கூறப்படுகிறது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பைச் (DRDO) சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், பிளைட் மோடில் பறக்கும் போது இன்டர்செப்டரின் பல்வேறு காரணிகள் குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 22 நவம்பர், 2015

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடிய நபர்: தாயாரிடம் உடலை ஒப்படைத்த உருக்கமான சம்பவம் (காணொளி இணைப்பு)

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு பலியான கனடா நாட்டை சேர்ந்த நபரின் உடலை முழு அரசு மரியாதையுடன் தாயாரிடம் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டை சேர்ந்த John Gallagher என்ற வாலிபர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போராட வேண்டும் என தானாக முன்வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து, சிரியாவில் உள்ள கனடா நாட்டு ராணுவத்துடன் இணைந்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பல கட்ட தாக்குதல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
பின்னர், இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து கனடிய ராணுவத்துடன் இருந்து வெளியேறி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான அமைப்பான குர்து போராளிகளுடன் இணைந்து தாக்குதல்களை நிகழ்த்தி 
வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் குர்து போராளிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் John Gallagher பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது தாயாரான Valerie Carder என்பவர், மக்களுக்காக போராட சென்று உயிரிழந்துள்ள தனது மகனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனடிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
தாயார் மட்டுமின்றி அவர்கள் வசித்து வந்த ஓண்டோரியோ நகர் முழுவதிலும் அவருக்கு ஆதரவு கூடியுள்ளது.
இதனை தொடர்ந்து, உயிரிழந்த கனடிய குடிமகனின் உடலை சிரியாவிலிருந்து கனடாவிற்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று தகுந்த அரசு மரியாதையுடன் கனடாவிற்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலமாக தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நபரின் சடலம் சாலையில் கொண்டு வரப்பட்டபோது, அப்பகுதி மக்கள் அனைவரும் வழியெங்கும் நின்று கனடிய தேசியக்கொடியை வீசியவாறு வாலிபருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இது குறித்து பேசிய அவரது தாயார், தனது மகனின் உடலை கொண்டு வருவதற்கு ஆதரவளித்த பொதுமக்களுக்கும் கனடிய அரசிற்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக உருக்கமாக 
கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

மாணவன் ஒரு வனுக்க காக மட்டுமே செயல்படும் பள்ளி???

பிரித்தானியாவின் தீவு பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளி அங்குள்ள ஒரே ஒரு மாணவனுக்காக மட்டுமே செயல்பட்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள தீவுகளில் ஒன்றில் அமைந்துள்ள Skerries சமுதாய பள்ளியில் தான் Aron Anderson எனும் 10 வயது சிறுவன் படித்து வருகின்றான்.
ஆரோன் எனும் இந்த சிறுவனுக்காக மட்டுமே அங்கு இந்த பள்ளி செயல்பட்டு வருகின்றது.
பள்ளி நாட்களில் சிறுவன் ஆரோன் விரும்பினாலும் இல்லை என்றாலும் ஆசிரியர்களின் முழு கவனமும் அவன் மீதே இருக்கும்.
பள்ளியில் அனைத்து வசதிகளும் இருந்தாலும், ஆரோனுக்கு இருக்கும் ஒரே வருத்தம் என்பது, அவனுக்கு பிடித்த விளையாட்டானா உதைப்பந்தை அவனுடன் விளையாட யாரும் இல்லை
 என்பதே.
சிறுவன் ஆரோன் மட்டுமே அந்த பள்ளியின் சென்று படித்து வருவதால், பிரித்தானியாவிலேயே அதிக பணச்செலவில் கல்வி பயின்று வரும் சிறுவனாக ஆரோன் மாறியுள்ளான்.
தன்னோடு விளையாட எவரும் இல்லை என்ற வருத்தம் சிறுவன் ஆரோனுக்கு உண்டு என்றாலும், அந்த தீவினை விட்டு வெளியேற அவனுக்கு துளியும் விருப்பம் இல்லை என்றே தெரிவித்துள்ளான்.
ஒட்டு மொத்தமாக 70 பேர் மட்டுமே குடியிருந்து வரும் இந்த தீவின் மிக அருகாமையில் இருக்கும் நகரம் என்பது Shetland தீவின் தலைநகரமான Lerwick நகரே.
சிறுவன் ஆரோனின் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் அருகாமையில் இருக்கும் வேறு தீவுகளில் சென்று கல்வி பயின்று வருவதால்,
ஆரோனுக்கு அவர்களை வாரவிடுமுறை நாட்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அமையும்.
வீட்டில் இருந்து மிதிவண்டியில் 2 நிமிடத்தில் சென்றுவிடும் தூரத்தில் இருப்பதால் ஆரோனின் தினசரி வாழ்க்கை மிதிவண்டி பயணத்துடனே துவங்குகிறது.
இப்பகுதிக்கு மேலும் பல குடும்பங்கள் குடியேறினால் மட்டுமே ஆரோனின் பேச்சு துணைக்கும் கூடவே விளையாடுவதற்கும் மாணவர்கள் கிடைப்பார்கள்
இங்கு அழுத்தவும் 3முக்கிய வழின் நிழல்படங்கள் இணைப்பு >>>

சனி, 21 நவம்பர், 2015

நிலக்கரி சுரங்கத்தில் பாரிய தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள  ஜிக்ஸி நகரத்தில் மாகாண அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் 38 சுரங்க ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு 
இருந்தனர். 
இந்த நிலையில், நேற்று மாலை சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் சிக்கி உயிரிழந்தனர். 16 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவரை காணவில்லை. மாயமானவரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
சுரங்கத்தில் தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து எந்த பிரச்சினையும் அங்கு ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை. சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்களில் விபத்துக்கள் ஏற்படுவது பொதுவான
 நிகழ்வாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 19 நவம்பர், 2015

குண்டுதாரியை பிடித்து தானும் உயிரை விட்ட ஹீரோ நாய் குட்டி இதுதான் !

பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள , தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றிவளைத்தார்கள். அங்கே கடும் துப்பாக்கிச் 
சண்டை மூண்டது.
 பல தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளை கொண்டு பொலிசாரை தாக்கினார்கள். இதேவேளை குறித்த வீட்டுக்குள் செல்ல முன்னர் , அங்கே பொறிவெடி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க டீசல் என்னும் மோப்ப நாய் குட்டியை பொலிசார் அனுப்பியுள்ளார்கள். அதுவும் வெடி குண்டு மணக்கும் திசை நோக்கிச் சென்றுள்ளது.
ஆனால் தன்னை நோக்கி பொலிசாரும் நெருங்கி வந்ததாக நினைத்த தீவிரவாதி(பெண்) உடனே வெளியே வந்து ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டு, பின்னர் வெடிகுண்டு ஜாக்கெட்டை வெடிக்கவைத்துள்ளார். இதனால் டிசல் என்னும் இந்த மோப்ப நாயும் துண்டு துண்டாக சிதறி 
இறந்து போனது.
 இதனால் பொலிசார் பெரும் கவலையில் உள்ளார்கள். குறித்த இந்த மோப்ப நாய் இல்லாவிட்டால் , அப்பென் பொலிசாரிடம் வந்து குண்டை வெடிக்கவைத்து இருப்பார். இதனால் பலர் இறக்க நேரிட்டு இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்சில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் , டிசலுக்கு மரியாதை செய்து வருகிறார்கள். பேஸ் புக்கில் டிசலின் படம் தீ யாக 
பரவி வருகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 16 நவம்பர், 2015

பல இடங்களில் பாரிஸில் முற்றுகை நடவடிக்கை! சிரியா மீது பிரான்ஸ் குண்டுவீச்சு ?

பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா நகர் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அந்த அமைப்பினர் இருப்பதாக கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாக ஜெட் விமானங்கள் மூலம் பிரான்ஸ் தாக்குதல்களை 
நடத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு இருபது குண்டுகள் விண்ணிலிருந்து வீசப்பட்டன என்று பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ராக்கா நகரில் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையம், ஆயுதக் கிடங்கு, பயிற்சி முகாம் ஆகியவை உட்பட பல இடங்களை இலக்கு வைத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பாரிஸ் படுகொலைகள், ஐ எஸ் அமைப்பால் தமது தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றும், அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதல்கள் இருக்கும் என்றும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சிரியாவில் செயல்படும் ஜிகாதிகளுக்கு எதிரான சர்வதேச வான் தாக்குதல் நடவடிக்கைகளில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸும் இணைந்து கொண்டபிறகு முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப் பெரியத் தாக்குதல்கள் இதுவே
பாரிஸ் தாக்குதல்:பல இடங்களில் முற்றுகை 
நடவடிக்கை
பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, நாட்டின் பல பகுதிகளை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, விசாரணைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நகரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பொபிக்னி புறநகர் பகுதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றத் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.
டுலூஸ் மற்றும் க்ரெனோபிள் நகரங்களிலும் காவல்துறையினர் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பெல்ஜியத்திலுள்ள ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்டு, பிரான்ஸ் நாட்டிலுள்ளவர்களின் உதவிகளுடன் இத்தாக்குதல்கள் நடைபெற்றன என்று பிரெஞ்சு விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் சகோதரரான சாலேஹ் அப்தேசலாம் எனும் நபர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
அந்த நபர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டாலும், இத்தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார் என ஞாயிற்றுக்கிழமையன்று தகவல்கள்
 வெளியாயின்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள் பரிஸ் தாக்குதல் திட்டமிடல் பிசுபிசுத்ததால் தப்பியது யார்...?

சனி, 14 நவம்பர், 2015

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பிரான்ஸ் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றது

பாரிஸில் குறைந்தது 127 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் சமப்வங்களின் பின்னால் தாங்களே இருந்ததாக இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக் கொள்ளும் தீவிரவாதக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்
 கூறியுள்ளது.
பாரிஸ் தாக்குதல்களில் ஏராளமானோருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த வன்செயல்கள் ஐ எஸ் அமைப்பால் தொடுக்கப்பட்ட ஒரு போர் என பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் 
வர்ணித்துள்ளார்.
அவர்களுக்கு இத்தக்குதல்களுக்கு பிரான்ஸுக்குள்ளேயிருந்தே உதவிகள் கிடைத்துள்ளன என்றும் அதிபர் ஒலாந் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம்.பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.
இத்தாக்குதல்களை அடுத்து அவர் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
பாரிஸில் ஆறு வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற தாக்குதல்களில், தற்கொலை குண்டுதாரிகள் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த வளாகம் ஒன்றில், குண்டுதாரிகள் மிகவும் அருகிலிருந்து சுட்டதில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு தொடர்ந்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சிரியாவில் பிரான்ஸ் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுக்கான தண்டனையே இத்தாகுதல்கள் என தாக்குதல்களை நடத்தியவர்கள் கத்தினார்கள் என சம்பவத்தை நேரில் கண்ட
 ஒருவர் கூறுகிறார்.
முன்னதாக துப்பாக்கித்தாரிகள் அருகாமையிலுள்ள உணவு விடுதிகளில் கண்மூடித்தனமாக பலரைச் சுட்டுகொன்றனர்.
வேறு சிலர் பிரான்ஸின் தேசிய விளையாட்டு அரங்கத்துக்கு வெளியே குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அப்போது அந்த அரங்கத்தில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியொன்றை அதிபர் ஒலாந் பார்த்துக் கொண்டிருந்தார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


திங்கள், 9 நவம்பர், 2015

ஜெர்மனி விமானங்கள் பலரத்து:பயணிகள் பாதிப்பு!!!

ப்ராங்புருட்:ஜெர்மனியில் 929 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் லட்சக்கணக்கான பயணிகள் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மானிய விமான நிறுவனமான லுப்தான்சாவில் பணிபுரியும் விமான குழுவினரின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக அதன் விமான சேவைகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக, நேற்று மட்டும் 929 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஒரு லட்சத்து 13 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

ஞாயிறு, 8 நவம்பர், 2015

இங்கிலாந்து விமானம்ஏவுகணை வீச்சில் இருந்து தப்பியது!!!

இங்கிலாந்தின் லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இருந்து 189 பயணிகளை ஏற்றி கொண்டு ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி சென்ற தாம்சன் விமானம் ஒன்று ஆயிரம் அடி தொலைவில் தன்னை நோக்கி வந்த ராக்கெட் ஒன்றிடமிருந்து விமானியின் உடனடி நடவடிக்கையால்
 மோதலுக்கு உட்படாமல் தப்பியது. அதன்பின் விமானம் பாதுகாப்புடன் தரையிறங்கியதுடன் மரணத்திற்கு மிக நெருங்கிய இந்த சம்பவம் குறித்து பயணிகளிடம் தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்வில்லை. எகிப்து நாட்டில் இருந்து புறப்பட்ட ரஷ்ய விமானம் ஒன்று கடந்த 
சனிக்கிழமை நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 224 பேரும் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன் இங்கிலாந்து ஜெட் விமானம் குறித்த இந்த சம்பவம் நடந்துள்ளது. அதனை ரேடார் கண்காணிப்பு மையம் கண்டறிந்துள்ளது. கடந்த ஆகஸ்டு 23ந்தேதி நடந்த இந்த சம்பவத்தை போக்குவரத்து துறையும் உறுதி செய்துள்ளது. இது குறித்து வெளியான தகவலில், முதன்மை அதிகாரியே அந்த நேரத்தில் 
பொறுப்புக்குரியவர். ஆனால் விமானி அறையில் விமானி இருந்துள்ளார். ராக்கெட் விமானத்தை நோக்கி வந்ததை பார்த்துள்ளார். ராக்கெட்டிடம் இருந்து தப்புவதற்கு விமானத்தை இடது புறம் திருப்ப அவர் உத்தரவிட்டுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றது.
விமான அறையில் இருந்த 5 ஊழியர்களும் விமானம் தரை இறங்கிய பின்பே இந்த சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளனர். அதன்பின் அன்றிரவு எகிப்திலேயே தங்குவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் இங்கிலாந்திற்கு திரும்ப செல்லும் முடிவையே தேர்ந்தெடுத்தனர். இந்த ராக்கெட்டை ஷார்ம் எல் ஷேக் நகரை நோக்கி மற்றொரு பயணிகள் விமானமும் கண்டுள்ளது.
எகிப்தின் ராணுவ பயிற்சியில் ஒன்றாக இந்த ராக்கெட் வந்துள்ளது என சம்பவத்திற்கு பின் விமானிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என தகவல் தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த சனிக்கிழமை நடந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசாங்க உத்தரவின்படி, ஷார்ம் எல் ஷேக் நகரில் தவித்து நிற்கும் ஆயிரக்கணக்கான இங்கிலாந்து நாட்டினர் சிறப்பு சார்ட்டர்டு விமானத்தில் தங்களது சொந்த
 நாட்டிற்கு சென்றனர
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சனி, 7 நவம்பர், 2015

குழந்தை பிறப்பதற்கு 1 மணிநேரம் முன்பு கர்ப்பமாய் இருப்பதை அறிந்த பெண்!!!

கர்ப்பமாய் இருப்பதை குழந்தை பிறப்பதற்கு வெறும் ஒரு மணிநேரம் முன்பு 47 வயது பெண்மணி தெரிந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஜூடி பிரவுன்(47) என்பவர் அடிவயிற்றில் ஏற்பட்ட கடுமையான வலியைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மருத்துவரை அணுகினார்.
ஜூடியைப் பரிசோதித்த மருத்துவர், ‘ஒன்றும் பயப்படுவதற்கில்லை, வாழ்த்துக்கள்! நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றீர்கள், குழந்தை பிறக்கப் போகின்றது’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஜூடி பிரவுன் தனது கணவன் ஜேசனுடன் கடந்த இருபத்து இரண்டு ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார். எனினும், இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. தற்போது நாற்பத்தேழு வயதை எட்டியுள்ள ஜூடி, தனது உடலில் சில மாதங்களாக ஏற்பட்ட மாற்றத்தை முதுமையின் அடையாளமாக கருதி வந்துள்ளார்.
திருமணம் முடிந்து இருபத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், தான் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிந்ததும், ஜூடியும் அவரது கணவர் ஜேசனும், ஏதோ கனவுபோல இப்படியொரு அற்புதம் நிகழ்ந்துள்ளது என பெருமகிழ்ச்சியுடன் கூறினர்.
இந்தத் தம்பதிக்கு ஆரோக்கியமான, மூன்றரைக் கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. அவளுக்கு கரோலின் ரோஸ் எனப் 
பெயரிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 4 நவம்பர், 2015

உயிரிழந்த மகள்: விபத்திற்கு காரணமான ஓட்டுனருக்கு மன்னிப்பு வழங்கிய தந்தை


கனடா நாட்டில் கார் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் தந்தை அந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனரை மன்னித்து அவரின் உடல்நலம் குறித்து அக்கறையாக விசாரித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கனடாவில் உள்ள Halifax என்ற நகருக்கு அருகில் உள்ள Beaver Bank என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 18ம் திகதி பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதே நாளில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் பயணம் செய்துள்ளனர். கார் ஓட்டுனரான அந்த நபர் மது அருந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையில் சென்றுக்கொண்டுருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பல முறை உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் Danielle என்ற 22 வயது இளம்பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் ஓட்டிய அந்த வாலிபரும் மற்றொரு பெண்ணையும் பொலிசார் மருத்துவமனையில் 
அனுமதித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்து சில நாட்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்ற Danielle-வின் தந்தையான Mike Hudson என்பவர் சிகிச்சை பெற்று வந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனரை சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் ‘விபத்துக்கள் நடக்க தான் செய்யும். என் மகளின் மரணம் திட்டமிட்டு நிகழ்ந்தது அல்ல.
உன்னுடைய உடல்நலம் குணமான பின்னர், எந்த நேரத்திலும் என் வீட்டிற்கு வந்து என்னை சந்திக்கலாம்.
தற்போது இருவரும் மிக கவலையான தருணத்தில் இருப்பதால், நம்முடைய கவலை விட்டு வெளியேற முயற்சி செய்வோம்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நிலையில், மகளின் ஈமக்காரியங்களுக்காக பொதுமக்கள் சுமார் 13 ஆயிரத்து 500 டொலர்கள் வழங்கியது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>பிரித்தானிய பிரதமர் கமரூன்அதிர்ச்சியில் உள்ளார்!!!

சிரியாவில் வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஈராக்கில் இயங்கிவரும் ஐ.எஸ் படைகளை மீது பிரித்தானிய இராணுவவீரர்கள் தாக்குதல்களை நடத்தி
வருகின்றனர்.
அதுமட்டுமின்றி அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகளுக்கும், கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக உதவி செய்துவருகின்றன.
இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது வான்வெளி தாக்குதல் நடத்துவதற்கு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பாராளுமன்றத்தில் ஒப்புதல் கோரியுள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகளின் இஸ்லாமிய அரசை தோற்கடித்து, சிரியாவில் உள்நாட்டுப் போருக்கு முடிவு காண ''ஒருமித்த சர்வதேச திட்டம்'' இல்லாதவரை பிரித்தானியாவின் இராணுவ நடவடிக்கையை அங்கு விரிவுபடுத்தக் கூடாது என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், சிரியா மீதான வான்வெளி தாக்குதல் திட்டத்தை கைவிடுமாறும் கூறியுள்ளனர், நாடாளுமன்ற உறுப்பினர்களின் இந்த முடிவு பிரதமர் கமரூனை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 3 நவம்பர், 2015

மாணவன் 20 பேரை சுட்டுக்கொல்ல திட்டமிட்டர் அதிரடியாக கைது

கனடா நாட்டில் உள்ள மருத்துவ பல்கலைகழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர் ஒருவர் 20 பேரை சுட்டு கொலை செய்துவிட்டு தற்கொலை செய்ய திட்டமிட்டது தொடர்ந்து அவரை பொலிசார் அதிரடியாக 
கைது செய்துள்ளனர். 
கனடாவில் Halifax நகரை சேர்ந்த 30 வயதான Stephen Gregory Tynes என்ற நபர் அங்குள்ள Dalhousie பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார். ஆனால், வெளியிடப்படாத சில காரணங்களால் அந்த மாணவரை பல்கலைகழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்
. இதனிடையில்,
 அந்த மாணவர் உளவியல் ரீதியான பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதற்கு உளவியல் மருத்துவரிடமும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆனால், மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொண்டபோது பல அதிர்ச்சி தகவல்களை கூறியது மருத்துவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தான் பயின்று வந்த பல்கலைகழகத்தை சேர்ந்த தலைமை மருத்துவர் மற்றும் அவரது மகள் உள்ளிட்ட 20 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி தோன்றுவதாக கூறியுள்ளார். 20 பேரையும் சுட்டு கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொள்ள 
திட்டமிட்டுள்ளதாக
 கூறியது பொலிசாரின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதன் பிறகு, நபரிடம் தடைசெய்யப்பட்ட ஆயுதம் இருந்ததை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும், பிறரை கொலை செய்ய திட்டமிட்டது மற்றும் 
தற்கொலை
 முயற்சிக்கு முயன்றது என இரண்டு குற்றவழக்குகளை பொலிசார் பதிவு செய்துள்ள நிலையில், அந்த நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல்கள்
 வெளியாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

6,000க்கும் அதிகமான சிறைக் கைதிகளுக்கு விடுதலை!


அமெரிக்காவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 6,112 கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது அண்மையில் வானொலி நிகழ்வொன்றில் 
அமெரிக்க ஜனாதிபதி
 ஒபாமா கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது 22 லட்சம் மக்கள் எமது நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 80 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் செலவிடுகிறோம்.
அதேபோன்று சாதாரண குற்றங்களை செய்தவர்கள் 
அதிக அளவில் 
தண்டனை பெறும் சூழ்நிலை நிலவுகிறது. இதனால், சிறையில் இருந்து வெளியே வருபவர்களுக்கு வேலை கிடைப்பது சிரமமாக உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.அவர் இவ்வாறு குறிப்பிட்டதைத் தொடர்ந்தே அங்கு இந்த புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 இதனால் அமெரிக்க 
பொருளாதாரத்திலும் சிறைச்சாலைக்கான செலவுகள் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களில் மூன்றில் ஒரு பகுதி கைதிகள் வெளிநாட்டவர்களாக உள்ளனர். விடுதலையின் பின்னர் அவர்களை தமது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 2 நவம்பர், 2015

இந்தியா 103 வது இடம் உலக ஆரோக்கிய நாடுகள் பட்டியலில் சிங்கபூர் முதல் இடம்

ஐக்கிய நாடுகள் சபையின் உலக வங்கி மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள உலக ஆரோக்கிய நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் ஆசிய நாடுகளில் ஒன்றான இந்தியா 103வது இடத்தை பிடித்துள்ளது. பிறப்பு, இறப்பு விகிதம், இறப்புக்கான காரணம், புகைப்பவர்களின் எண்ணிக்கை, கொழுப்பு பாதிப்பு மற்றும் சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதில் சிங்கப்பூர் 89.45% புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இத்தாலி 89.07% புள்ளிகளுடன் 2வது த்தையும், ஆஸ்திரேலியா 88.33% புள்ளிகளுடன் 3வது இடத்தையும் பிடித்துள்ளன.
103வது இடத்தை பிடித்த இந்தியா பெற்றுள்ள புள்ளிகள்
 வெறும் 22.17% தான்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது சீன மக்களுக்கு அரசு அறிவிப்பு !!!

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வரையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற தடை நீடிக்கும் என்று இப்போது 
அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடியை தாண்டி உள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை கொண்டு வந்தது.  அதாவது ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’
 என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் 2-வது 
குழந்தை 
பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரசு வேலைகளில் உள்ளவர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொண்டால், கடுமையான அபராதத்துடன் அரசு வேலையும் பறிக்கப்படும் என அரசு அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>