பாரிஸ் தாக்குதல்களின் எதிரொலியாக, இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பு சிரியாவில் பலமாக இருக்கும் ராக்கா நகர் மீது பிரான்ஸ் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
அந்த அமைப்பினர் இருப்பதாக கருதப்படும் இடங்கள் மீது தொடர்ச்சியாக ஜெட் விமானங்கள் மூலம் பிரான்ஸ் தாக்குதல்களை
நடத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு இருபது குண்டுகள் விண்ணிலிருந்து வீசப்பட்டன என்று பிரெஞ்ச் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ராக்கா நகரில் ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு மையம், ஆயுதக் கிடங்கு, பயிற்சி முகாம் ஆகியவை உட்பட பல இடங்களை இலக்கு வைத்து இந்த வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
பாரிஸ் படுகொலைகள், ஐ எஸ் அமைப்பால் தமது தேசத்தின் மீது தொடுக்கப்பட்ட ஒரு போர் என்றும், அவர்கள் மீது ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதல்கள் இருக்கும் என்றும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ்வா ஒலாந் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
சிரியாவில் செயல்படும் ஜிகாதிகளுக்கு எதிரான சர்வதேச வான் தாக்குதல் நடவடிக்கைகளில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிரான்ஸும் இணைந்து கொண்டபிறகு முன்னெடுக்கப்பட்டுள்ள மிகப் பெரியத் தாக்குதல்கள் இதுவே
பாரிஸ் தாக்குதல்:பல இடங்களில் முற்றுகை
நடவடிக்கை
பாரிஸில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, நாட்டின் பல பகுதிகளை காவல்துறையினர் முற்றுகையிட்டு தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கடந்த வெள்ளிகிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 129 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, விசாரணைகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நகரின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பொபிக்னி புறநகர் பகுதி, வெள்ளிக்கிழமை நடைபெற்றத் துப்பாக்கிச் சூடுகள் மற்றும் குண்டுத் தாக்குதல்களுடன் நேரடியாக தொடர்புபட்டிருந்தது எனக் கூறப்படுகிறது.
டுலூஸ் மற்றும் க்ரெனோபிள் நகரங்களிலும் காவல்துறையினர் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
பெல்ஜியத்திலுள்ள ஒரு குழுவினரால் திட்டமிடப்பட்டு, பிரான்ஸ் நாட்டிலுள்ளவர்களின் உதவிகளுடன் இத்தாக்குதல்கள் நடைபெற்றன என்று பிரெஞ்சு விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டார் என்று சந்தேகிக்கப்படும் தற்கொலை குண்டுதாரி ஒருவரின் சகோதரரான சாலேஹ் அப்தேசலாம் எனும் நபர் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
அந்த நபர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டாலும், இத்தாக்குதல்கள் நடைபெற்ற சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்டார் என ஞாயிற்றுக்கிழமையன்று தகவல்கள்
வெளியாயின்
பாரிஸ் தாக்குதல்! தப்பிச்சென்ற தாக்குதல்தாரியைத் தேடும் பிரான்ஸ் அதிகாரிகள் பரிஸ் தாக்குதல் திட்டமிடல் பிசுபிசுத்ததால் தப்பியது யார்...?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக