நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 நவம்பர், 2015

இருவது செக்கனுக்குள் ஒரு குழந்தை நீரால் ஏற்படும் நோயால் இறப்பு ?

உலகில் தண்ணீரினால் ஏற்படும் நோய் காரணமாக 20 செக்கன்களுக்கு ஒரு குழந்தை இறப்பதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர், வைத்தியர் வைதேகி ஆர்.பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலான 
அறிவூட்டும் நிகழ்வு, மட்டக்களப்பு 
மாநகரசபையின் ஏற்பாட்டில் நடத்தப்படுகின்றது. இதன் கீழ் மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தேசிய மகளிர் பாடசாலையில் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான குடிநீரை உறுதிப்படுத்தல் தொடர்பான 
விழிப்புணர்வு கருத்தரங்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த விசேட செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இங்கு கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர் டாக்டர் வைதேகி ஆர்.பிரான்சிஸ், நீரினை சுத்தமான முறையில் பருகாவிட்டால் பல்வேறு தொற்று நோய்களுக்கு உட்படும் நிலைமையேற்படுகின்றது. உலகில் 3.5 மில்லியன் பேர் நீரினால் ஏற்படும் நோயினால் இறக்கின்றனர். ஆபிரிக்க நாடுகளிலேயே அதிகளவான இறப்புகள் ஏ
ற்படுகின்றன.
நீரினால் ஏற்படும் பிரச்சினையின் முக்கியமாக கருதப்படுவது வயிற்றோட்டமாகும். உலகில் பயங்கரவாத தாக்குதல்களினால் இறப்பவர்களை விட இந்த வயிற்றோட்டத்தினால் இறப்பவர்களே அதிகமாகவுள்ளனர்.
இதேபோன்று கொலறா போன்ற நோய்களும் தண்ணீர் தொற்றினால் ஏற்படுகின்றது. 200ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் கொலறா அறிக்கையிடப்படாத நிலையே இருக்கின்றது. 
எனினும் 
எமது அண்டை நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இதன் தாக்கம் உள்ளது. இங்கிருந்து அங்கு செல்பவர்கள் ஊடாக அது இங்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக