கனடா நாட்டில் கார் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் தந்தை அந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனரை மன்னித்து அவரின் உடல்நலம் குறித்து அக்கறையாக விசாரித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள Halifax என்ற நகருக்கு அருகில் உள்ள Beaver Bank என்ற பகுதியில் கடந்த அக்டோபர் 18ம் திகதி பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.
இதே நாளில் ஒரு வாலிபர் உள்ளிட்ட 3 பெண்கள் அதிகாலை நேரத்தில் பயணம் செய்துள்ளனர். கார் ஓட்டுனரான அந்த நபர் மது அருந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சாலையில் சென்றுக்கொண்டுருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் பல முறை உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் Danielle என்ற 22 வயது இளம்பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். கார் ஓட்டிய அந்த வாலிபரும் மற்றொரு பெண்ணையும் பொலிசார் மருத்துவமனையில்
அனுமதித்துள்ளனர்.
விபத்து நிகழ்ந்து சில நாட்களுக்கு பின்னர் மருத்துவமனைக்கு சென்ற Danielle-வின் தந்தையான Mike Hudson என்பவர் சிகிச்சை பெற்று வந்த விபத்திற்கு காரணமான ஓட்டுனரை சந்தித்துள்ளார்.
அப்போது பேசிய அவர் ‘விபத்துக்கள் நடக்க தான் செய்யும். என் மகளின் மரணம் திட்டமிட்டு நிகழ்ந்தது அல்ல.
உன்னுடைய உடல்நலம் குணமான பின்னர், எந்த நேரத்திலும் என் வீட்டிற்கு வந்து என்னை சந்திக்கலாம்.
தற்போது இருவரும் மிக கவலையான தருணத்தில் இருப்பதால், நம்முடைய கவலை விட்டு வெளியேற முயற்சி செய்வோம்’ என ஆறுதல் வார்த்தைகளை கூறிவிட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள நிலையில், மகளின் ஈமக்காரியங்களுக்காக பொதுமக்கள் சுமார் 13 ஆயிரத்து 500 டொலர்கள் வழங்கியது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக