நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 25 ஏப்ரல், 2021

அடிமையாக அவுஸ்திரேலியாவில் வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்

தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை வீட்டு பணிப்பெண் என சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டில்,அவுஸ்திரேலிய தம்பதியினரின் மீது அவுஸ்திரேலியாவின் விக்டோரிய உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.  
கடந்த 2 மாதங்களாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது அத்தம்பதியினர் குற்றவாளிகள் என தீர்ப்பில் 
வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றம் அவர்களை குற்றவாளிகளாக தீர்பளித்ததை அடுத்து அத்தம்பதியினர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.
குமுதினி கண்ணன், கந்தசாமி கண்ணன் என அறியப்படும் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியைச் சேர்ந்த அத்தம்பதியினருக்கு தண்டனை தொடர்பான விசாரணை வரும் ஜுன் மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் பிணையில் வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும் வீட்டுக்கான பொருட்களை வாங்கவும்- மருத்துவ தேவைகளுக்காக வெளியில் செல்லவும் மட்டுமே அவர்களுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் இந்த காலத்திலேயே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது 3 குழந்தைகளுக்கான ஏற்பாட்டினை செய்திடவும் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 16 ஏப்ரல், 2021

தனக்குத் தானே தீ மூட்டி பாரிஸ் பிஹால் தொடருந்து நிலையத்தில் எரிந்த நபர்

பாரிஸ் பிஹால் (Pigalle) மெற்றோ ரயில் நிலையத்தின் பயணிகள் மேடையில்  சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டன. §5.04-2021.அன்று  வியாழக்கிழமை மாலை ஆறு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
சுமார் எண்பது வீதமான உடற்பகுதிகள் எரியுண்ட நிலையில் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்ட அவர்,ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார்.அதிர்ச்சி அடைந்த பயணிகளில் ஐந்து பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
அந்த நபர் பயணிகள் மேடையின் தரையில் எரிந்து புரண்டுகொண்டு கிடந்த வேளை ரயில் ஒன்று அங்கு வந்து தரித்தது. அதில் வந்த பயணிகள் தீயில்ஒருவர் எரியும் காட்சியை அருகே நேரில் கண்டு அலறத் தொடங்கினர். இதனால்அனைத்துப் பயணிகளும் வெளியேற்றப்பட நேர்ந்தது.அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உளவியல் சிகிச்சை 
வழங்கப் பட்டது.
“நான் ரயிலில் இருந்தேன். திடீரென பலரும் அலறும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தேன். மேடையில் பெரும் தீப்பிளம் பைக் கண்டேன். ரயில் கிளம்பவில்லை. சிலர் அழுது கொண்டு
 இறங்கி ஓடினர்.
மிகவும் அதிர்ச்சியாக இருந்தது” – இவ் வாறு பயணி ஒருவர் பரிஷியன் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் பெற்றோல் ஊற்றி நனைத்துக் கொண்டு ரயில் நிலையத்துக்கு வந்து அங்கு வைத்து அவர் தனக்குத் தீ மூட்டியுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு தற்கொலைக்கு
 முயன்றவர் யார் என்ற விவரங்கள் உடனடியாகத்தெரியவரவில்லை.
இந்தச் சம்பவம் காரணமாக மெற்றோ வழித்தடங்கள் 2, 12 ஆகியவற்றில் சேவைகள் சில மணிநேரம் தடைப்பட்டன என்று போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>