நிலாவரை .கொம்

siruppiddy
இந்தியச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 ஜூலை, 2022

இரத்தினக் கற்களை வயிற்ருக்குள் கடத்திச்சென்ற இலங்கையர் சென்னையில் கைது

சென்னை விமான நிலையத்தில் வயிற்றில் இரத்தின கற்களை கடத்திச்சென்ற இலங்கை இளைஞன் ஒருவர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பில் இருந்து, 19ஆம் திகதி ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சென்னை சென்ற இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தபோது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர்.
அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியிருந்தமை தெரியவந்தது.
அதன் பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்
இதன்போது சுமார் ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கரட் கொண்ட 1,746 இரத்தின கற்களை பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து இரத்தினக் கற்களை கடத்தி வந்த இலங்கை இளைஞனைகைது செய்த அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>

செவ்வாய், 24 நவம்பர், 2020

இந்தியா மேலும் 43 சீன செயலிகளுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது

இந்திய அரசு மேலும் 43 சீன செயலிகளுக்கு முழுமையாகத் தடை விதிப்பதாக 24-11-20.இன்று (செவ்வாய்க்கிழமை)  அறிவித்துள்ளது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தகவல் தொழில்நுட்பம் சட்டப் பிரிவு 69-ஏ பிரிவுக்கு உட்பட்டு இந்த அரசாணை 
வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலிகள், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாரபட்சமான நடவடிக்கைகளில் ஈடுபடும் காரணத்தால் முழுவதுமாக தடை செய்யப்படுகின்றன என்று அரசாணையில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது,
உட்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் விரிவான அறிக்கைகள் பெறப்பட்டே இந்த தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஜூன் 29ஆம் திகதி 59 செயலிகளும் செப்டம்பர் இரண்டாம் திகதி 118 செயலிகளும் இதே சட்டப்பிரிவின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 9 டிசம்பர், 2016

இது மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா ? அச்சத்தில் மக்கள்

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக
 பரவி வருகிறது.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

அமெரிக்கா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்கத் தயார்:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு தேவையான அனைத்து உதவியையும் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்து வெளியிட்டார்.
பல ஆண்டுகளில் இல்லாத, மிகவும் மோசமான வெள்ளத்தில் சிக்கியுள்ள சென்னை மக்களுக்கு உதவி செய்ய அமெரிக்காக அரசு தயார்நிலையில் உள்ளது.
இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் சிக்கித்தவிக்கும் மக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்துவாடும் மக்களைச் சுற்றி எங்களது எண்ணங்கள் சூழ்ந்துள்ளன.
இந்த இக்கட்டான வேளையில் உதவுவதற்காக இந்திய அரசுடன் அமெரிக்க அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எல்லாவித உதவியையும் செய்ய அமெரிக்கா தயார்நிலையில் இருப்பதாக நாங்கள் தெரிவித்துள்ளோம்.
இதுவரை எங்களிடமிருந்து எந்த உதவியையும் இந்திய அரசு கேட்கவில்லை. இதுபோன்ற வேளைகளில் அவசர உதவி மற்றும் பொதுச்சேவை நிலவரங்களை சுயமாக கையாளக்கூடிய அளவுக்கு இந்திய அரசு மிகவும் மேம்பாடு எய்தியுள்ளபோதிலும், குறிப்பாக, இந்தியாவைப்போன்ற வலிமையான நட்பு நாடுகளுக்கு பேரழிவுக்குப் பிந்தைய அனைத்து உதவிகளையும் செய்யவும் அமெரிக்க அரசு தயாராகவே உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நாணயத்தின் வீழ்ச்சி: பிரதமர் இன்று விளக்கம்

பாய் மதிப்பு சரிவடைந்து வருவதைத் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று விளக்கம் அளிக்கவுள்ளார்.

மாநிலங்களவையில் இந்த பிரச்னையை எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை காலையில் எழுப்பியபோது,
அவையில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங், "சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது.
இதுபோன்ற சில சர்வதேச விளைவுகளால் அசாதாரண நிலையை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதிலிருந்து மீள நமக்கு சில காலம் ஆகும். இந்த விவகாரம் குறித்து நாளை விளக்கம் அளிக்க விரும்புகிறேன்' என்றார்