நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 30 ஏப்ரல், 2020

இல்பேட்டில் இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த ஈழத்தமிழரானதந்தை கைது

லண்டனில் கடந்த-26-04-20. ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து விட்டதாக வைத்தியசாலை.

 வட்டாரங்கள்அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அங்கே சென்ற புலனாய்வு பொலிஸ் அதிகாரியான, (Vicky Tunstall) விக்கி டன்ஸ்டால் ,

அவரை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார்.அவர் நித்தின் குமாரை விசாரணை செய்து வருகிறார். இன் நிலையில் யாருக்காவது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்தால் உடனே இல்பேட் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏன் எனில், உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அறிய, தாம் முழு விசாரணையில் ஈடுபட உள்ளதாக விக்கி டன்ஸ்டால் தெரிவித்துள்ளார். இறந்து போன நிகிஷி மற்றும் பாபினையா ஆகிய 2 குழந்தைகள் மிகவும்

பரிதாபமானவர்கள் என்றும், இச்சம்பவம் அயலவர்களை பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, உண்மை நிலை தெரிந்தவர்கள் இல்பேட் பொலிசாரை தொடர்பு கொண்டு, தகவல்களை வழங்கலாம் என்றும் விக்கி டன்ஸ்டால்  கேட்டுக் கொண்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>



புதன், 22 ஏப்ரல், 2020

இப்படித் தான்..கொரோனா வைரஸ் பரவியதாம் உண்மையை உடைத்த உலக சுகாதார அமைப்பு.


உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வகையில், நாள்தோறும் இந்த வைரஸ் எதனால் பரவியது என உலக நாடுகளே ஆராய்ச்சி செய்து சீனாவை குற்றம் சாட்டியும் வருகிறது.இதையடுத்து, வுஹான் ஆய்வகத்தை சோதனை செய்ய வேண்டும் என 
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். மேலும், சில ஆராய்ச்சி முடிவுகள் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து 
தான் பரவியது எனவும் தெரிவித்தது.இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து 
நடைபெற்று வரும் நிலையில், உலக
 சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில், எங்களிடம் உள்ள ஆதாரங்கள் 
அனைத்தும் கொரோனா வைரஸ் வௌவால்கள் அல்லது வேறுமிருகங்களிடம் இருந்து 
தான் பரவியுள்ளன என்பதை தெரிவிக்கின்றது
.அதே நேரத்தில் வுஹான் ஆய்வகத்தில் இருந்து 
வைரஸ் உருவாக்கப்பட்டு பரவவில்லை’எனத் தெரிவித்துள்ளனர்.சீனா அரசு 
வேண்டுமென்றே தான் வைரஸை பரப்பியது 
என உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




செவ்வாய், 21 ஏப்ரல், 2020

கனடாவில் பொலிஸ் வேடத்தில் வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு

கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான் -19-04.20-ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த 
துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும்
 ஆழ்த்தியுள்ளது.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கனடாவில் பொலிஸ் வேடத்தில் நபர் ஒருவர் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ள நிலையில், பலரின் உயிரை காப்பாற்றிவிட்டு தனது உயிரை விட்ட பெண் காவலர் குறித்து உருக வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.கனடாவின் நோவா ஸ்கோடியாவின் Portapique-வில் தான், 
ஞாயிறு அன்று இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய கேப்ரியல் வோர்ட்மேன் என்பவரை பொலிசார் சுட்டு கொன்றனர். தற்போது வரை இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆகவுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு கொரோனா லொக்டவுனில் உள்ள மக்களை 
பெரும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் 
ஆழ்த்தியுள்ளது
.இதில், பெண் காவலர் Heidi Stevenson-னும் ஒருவர் ஆவார்.பின்னர் மக்களின் உயிரை காப்பாற்ற தாக்குதல்தாரியை எதிர்த்து அவர் போராடியிருக்கிறார். அப்போது தான் Heidi Stevenson சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 20 ஏப்ரல், 2020

லட்சக்கணக்கான அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால்

கொரோனாவினால் அடித்து வீழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள் உணவுக்காக உணவு வங்கிகள் முன்னால் லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க தொடங்கியுள்ளார்கள்.கண்கள் எட்டும் தொலைவு வரை பென்சில்வேனியாவி கிரேட்டர் பிட்ஸ்பர்க் சமூகத்தினரின் உணவு வங்கியின் முன்னால் சுமார் 1000 கார்கள் வரை உணவுப்பொட்டலங்களுக்காக வரிசை 
கட்டி நின்ற காட்சி பலரையும் வேதனையடையச் செய்துள்ளன.தங்களுக்குக் கிடைக்கும் சிறிய உணவு பங்குக்காக அங்கு சில வேளைகளில் தள்ளுமுள்ளும் ஏற்பட்டுள்ளதாக உணவு 
வங்கி நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.சுமார் 2 கோடியே 20 இலட்சம் பேருக்கு வேலை பறிபோயுள்ளது. இதனையடுத்து உணவு அளிக்கும் அறக்கட்டளைகள் பசியாற உணவு அளித்து வருகின்றன. ஆனால் ஒருநாள் கொரோனா கோரத்தாண்டவத்தினால், இந்த 
உணவு வங்கி முன்னால் சுனாமி போல் மக்கள் படையெடுக்கும் நிலை வரலாம் என்று அனைவரும் அஞ்சுகின்றனர். மார்ச்சில் மட்டும் பிட்ஸ்பர்க் கம்யூனிட்டி உணவு வங்கியில் உணவுப் பக்கெட்டுகளுக்கான தேவை 40% அதிகரித்துள்ளது.இது போன்ற 8 மையங்களில் நாளுக்கு நாள் தேவை அதிகரிப்பினால் உணவுப்பற்றாக்குறை
 தோன்றிவிடும் நிலை உள்ளது. அதிகம் பேர் எங்கள் சேவையை முதல் முறையாகப் பயன்படுத்துகின்றனர். இவர்களெல்லாம் உணவு வங்கிக்கு முன்பின் வந்தவர்களல்ல” என்று உணவு 
வங்கி நிர்வாகி குலிஷ் என்பவர் தெரிவித்தார்.எங்களிடம் 350 மையங்கள் இதே பென்சில்வேனியாவில் உள்ளன, இது பலருக்கும் தெரியாததால் ஒரே மையத்தில் மக்கள் குவிவதாக 
அவர் தெரிவித்தார்.  அமெரிக்கா முழுதும் நியூ ஆர்லியன்ஸ் முதல் டெட்ராய்ட் வரை சம்பளம் இல்லாத மக்கள் உணவு வங்கிகள் முன்னால் குவிந்து வருகின்றனர். சிறிய 
பங்குக்காக கிட்டத்தட்ட அடித்துக் கொள்ளும் சோகமயமான காட்சிகள் அங்கு தோன்றியுள்ளன.ஏப்ரல் 9ம் திகதி டெக்ஸாசில் சான் ஆண்டனியோவில் மிகவும் சோகமயமான காட்சி நடந்தேறியது. 
ஒரு உணவு வங்கி முன்பாக 10,000 பேர் கார்களில் காத்திருக்க நேரிட்டது. சில குடும்பங்கள் இரவு முதலே அங்கு காத்திருக்கவும் செய்கின்றனர். பொஸ்டன் புறநகர்ப் பகுதி செல்ஸீயில் உள்ள ஒரு 
மையத்தில் அலனா என்ற பெயருடைய ஒரு பெண் கூறும்போது, “வேலையின்றி மாதக்கணக்காக அலைகிறோம்” என்றார்.மேலும் அவர் கூறும்போது, “நேற்று ஒரு 
பெண் தன் 15 நாட்களேயான பிறந்த கைக்குழந்தையுடன் வரிசையில் காத்திருந்தார், கணவருக்கு வேலை போய் விட்டது. அவருக்கு இன்னும் 2 குழந்தைகள் உள்ளன. அவர் வீட்டில் உணவு இல்லை” என்றார். அமெரிக்கா முழுதும் உணவு மையங்களில் தேவை 
உச்சத்தைத் தொட்டு விட்டதாக உணவு வங்கி அதிகாரி தெரிவித்தார்.ஒரே நாளில் 30% தேவை அதிகரித்தால் சமாளிக்க முடியவில்லை என்பதே உணவு வங்கிகளின் வேதனையாக உள்ளது.அமெரிக
 உணவுத் தொழிற்துறையே பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு வங்கிகளும் தீடீர் தேவை அதிகரிப்பு காரணமாக பெரிய சிக்கலில் தவித்து வருகின்றன.ரொக்க நன்கொடைகளும் வந்த 
வண்ணம் உள்ளன, அமேசன் தலைவர் ஜெஃப் பெஸாஸ் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக
 வழங்கியுள்ளார்.இந்த நன்கொடைகள் இல்லையெனில், உணவு வங்கிகளில் தேவையை சமாளிப்பது கடினம் ஆகியிருக்கும். ஆனால், இப்போதைக்கு சமாளிக்க முடிகிறது, எதிர்கால கொள்ளை நோய்களைச் சமாளிக்க முடியாத நிலையே அங்கு கவலைகளை அதிகரித்துள்ளது. 
இப்போதைக்கு சப்ளை இருக்கிறது, இன்னும் ஒரு மாதத்தில் என்ன நடக்கும் என்று தெரியவில்லை என்கிறார் உணவு 
வங்கி நிர்வாகி குலிஷ்.பெரிய இராணுவ சக்தியாக இருந்து என்ன பயன்? உணவுக்காக மக்கள் வீதிக்கு வரும் காட்சிதான் இப்போதைய அமெரிக்க எதார்த்தமாக உள்ளது என்று மனித உரிமை ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை இணையச் செய்தி (நிழல் படங்கள் இணைப்பு) >>>





புதன், 15 ஏப்ரல், 2020

முகநூல் தகவல் கொரோனா வைரஸ் (COVID-19) ஐப் பற்றி மேலும் அறிக

நீங்கள்  வீட்டிலேயே இருந்து கொண்டு மனநலனை மேம்படுத்துவதும்  வழிகள்

உங்களை நீங்களே எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த உதவிக்குறிப்புகளைப் பார்க்கவும்.

களைப்பாறுவதற்கான வழிகளைக் கண்டறிந்து, உங்களுக்கு மகிழ்வைத் தரும் ஆரோக்கியமான செயல்களை மேற்கொள்ளவும். அனைவரும் அழுத்தமாகவும் பதட்டமாகவும் உணரலாம்
.
இலக்குகளை அமைத்துக் கொண்டு தினசரி வழக்கங்களைத் திட்டமிடவும். எப்போது எழுந்தரிக்க வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் மற்றும் எப்போது உறங்க வேண்டும் என்பதைத் திட்டமிடவும்.

கொரோனா வைரஸ் (COVID-19) பற்றிய சமீபத்திய செய்திகளின் உண்மைநிலையைச் சரிபார்ப்பதில் இருந்து சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி, ஆரோக்கியமாக உண்ணுதல் மற்றும் 6-8 மணிநேர உறக்கம் போன்றவற்றை முடிந்தவரை கடைபிடிக்கவும்.

பரிச்சயமான உங்களின் நண்பர்களையும் குடும்பத்தினரையும் மொபைலில் அழையுங்கள். நீங்கள் ஒன்றாக இல்லாத சமயத்தில் ஒன்றாக உணரும் வகையில் முகநூல் வீடியோ அழைப்புகளை
 மேற்கொள்ளவும்.


இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> >>>>>>>

...... ,,,,,,,

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஐரோப்பிய நாடுகள் முழுமையான முடக்கல் நிலையிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன

கடந்த சில மாதங்களாக உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வந்துகொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல உயிரிழப்புக்களை சந்தித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்ட பல நடவடிக்கைகளை தளர்த்தி வருகின்றன.
கொடிய கொரோனா வைரஸால் கடந்த பல வாரங்களாக சில ஐரோப்பிய நாடுகள் தத்தம் நாட்டுக்கான எல்லைகள், பொது இடங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பாடசாலைகள் என பலவற்றை லொக்டவுன் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புக்கள் சற்று குறைந்து வருவதையிட்டு, பல நாட்கள் மக்கள் முடக்கல் நிலையை அனுபவித்து வந்ததாலும் பொருளாதார ரீதியாகவும் பாரிய பின்னடைவு ஏற்படுவதனாலும், சில நாடுகள் தத்தம் நாடுகளில் அமுல்படுத்தி வந்த முடக்கல்களை தளர்த்தி வருகின்றன.அதற்கமைய சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி என சில நாடுகள் லொக்டவுனை தளர்த்தினாலும் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் 1 மாத காலத்திற்கு முடக்கல் நிலை தொடரும் எனவும், பிரித்தானியா 3 வாரங்கள் இதே நிலை தொடரும் என அறிவித்திருக்கின்றது. இருப்பினும் ஏப்ரல் மாதம் 18ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்களும் கடைகளும், மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் மதுபான விடுதிகளும் திறக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. 

ஆனாலும், சுவிட்சர்லாந்த் தனது முடக்கல் நிலை தளர்த்தப்படுமா என அறிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தியா மே மாதம் 3ம் திகதி வரைக்கும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவித்திருப்பினும் இதுவரையில் இலங்கை ஊரடங்கு தளர்த்தல் தொடர்பில் இன்னும் 6 மாவட்டங்களுக்கு அறியத்தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.முடக்கல் நிலை, தளர்த்தப்பட்ட நாடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதோடு முகமூடி அணிந்தவாறே சிலர் நடமாடுவதாகவும், அவ்வாறு முகமூடி இல்லாமல் வெளியில் உலாவுபவர்களுக்கு பொலிஸார் முகமூடிகளையும் வழங்கி வருகின்றனர்.இருப்பினும், உலக சுகாதார அமைப்பினரோ முடக்கலை சிறிது சிறிதாக தளர்த்துமாறும் அவசரப்பட்டு முற்றாக தளர்த்த வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு அதிகமாக தாக்குவதாகவும்தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமுல்படுத்தப்பட்ட முடக்கல்நிலை தளர்த்தினாலும் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்குமாறும், கைகளை நன்கு கழுவுமாறும் மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், அடுத்த 3 வாரங்களுக்கு இக் கொரோனா வைரஸ் பரவல் வேகம் ரஸ்யாவில் அதிகமாக காணப்படும் எனவும், அதற்காக பல மருத்துவ அவசர ஊர்திகள் காத்திருப்பதாகவும், முடக்கல்நிலை ஆரம்பிக்கவும் எனவும் அதற்காக இராணுவத்தினரை களமிறக்கப் போவதாகவும் ரஸ்யா அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதுவரையில் கொரோனா வைரஸ்க்கு பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 793 என்பதோடு தொற்றுப் பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 19 இலட்சத்து 39 ஆயிரத்து 809 எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





வியாழன், 9 ஏப்ரல், 2020

அமெரிக்காவின் புதிய தடுப்பு மருந்து கொரோனாவிற்கு எதிரான பெருவெற்றியளிக்கும்

உலகளாவிய தொற்றாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகள் அமெரிக்காவில் தீவிரமடைந்துள்ளன.மனிதர்கள் மீது கொரோனாவூக்கான தடுப்பு மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பணிகள் அங்கு ஏற்கனவே 
தொடங்கியூள்ளன. அமெரிக்க ஆராய்ச்சி நிலையம் ஒன்றில், முதற்கட்டமாக நான்கு தன்னார்வலர்களுக்கு இந்த தடுப்பு மருந்து 
செலுத்தப்பட்டுள்ளதாக ‘அசோசியேட் ப்ரஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பு மருந்து கொரோனா வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆனால் கொரோனா வைரஸின் மரபணு குறியீட்டைப் பிரதி எடுத்து
 இந்த புதிய தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும் மனிதர்களுக்கு 
எந்த தீங்கும் ஏற்படாது.இந்த தடுப்பு மருந்தும், இதே போல உலகின் பல்வேறு நாடுகளில் உருவாக்கப்பட்டு வரும் மற்ற தடுப்பு மருந்துகளும் கொரோனா வைரஸை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என நிபுணர்கள் 
தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான 43 வயது பெண்ணிடம் இந்த புதிய கொரோனா தடுப்பு மருந்து முதன்முதலாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸைத் தடுக்க என்னால் முடிந்த ஒரு உதவியைச் செய்துள்ளேன்” என அந்தப் பெண்மணி தெரிவித்துள்ளார்.உலகம் 
முழுவதிலும் கொரோனாவூக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியூம் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை இந்தத் தடுப்பு மருந்து, விலங்குகளின் நோய் எதிர்ப்புத்திறனைத் தூண்டுமா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகளும் வழக்கம் போல நடைபெறுகின்றன.இந்த தடுப்பூசி 
அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
“இது வைரஸஷுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதகுலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது” 
என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜோன் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார். பொதுவாக அம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் கொவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் இந்தத் தடுப்பு மருந்து 
உருவாக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கொவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது.உண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவூக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு
 இந்தத் தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என
 ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.இந்த சோதனை தடுப்பு மருந்து தன்னார்லர்கள் மீது பல்வேறு
 அளவூகளில் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்களுக்கு அடுத்த 28 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை என கையின் மேல் தசை பகுதியில் இந்த தடுப்பு மருந்து செலுத்தப்படும்.இந்த முதல்கட்ட பரிசோதனைகள் வெற்றி அடைந்தால், உண்மையான, 
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து செயற்பாட்டுக்கு வருவதற்கு இன்னும் 18 மாதங்கள் ஆகும்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 2 ஏப்ரல், 2020

ஒரே நாளில் பிரிட்டனில் 569 பேர் பலி மொத்தமாக 33718 பேர் பாதிப்பு

பிரித்தானில் மேலும் 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பலியாகி உள்ளனர். -01-01.20-நேற்றய மரணங்களை விட இந்த எண்ணிக்கை அதிகமானது.தற்போதைய கணிப்பீட்டின்படி 
பிரிட்டனில் பலியானோரின் மொத்த
 எண்ணிக்கை 2921 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை ஒரேநாளில் 4224 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33718பேராக 
உயர்ந்துள்ளது.¨

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



யாழ் பெண்னை கனடாவில் படுகொலை செய்த 28 வயதான நபர் கைது

கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.28 வயதாக
 Steadley Kerr என்பர் 31-03-2020-நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.கடந்த 13ஆம் திகதி Scarboroughவில் 38 வயதான தீபா சீவரத்னம், அவரது இல்லத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த வன்முறையின் போது 
தீபாவின் தாயார் பாரிய காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபர்
 ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.படுகொலை செய்யப்பட்ட தீபா சீவரட்னம் யாழ்ப்பாணம் கொற்றாவத்தை பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>