நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

ஐரோப்பிய நாடுகள் முழுமையான முடக்கல் நிலையிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன

கடந்த சில மாதங்களாக உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி வந்துகொண்டிருக்கின்ற கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல உயிரிழப்புக்களை சந்தித்து வரும் ஐரோப்பிய நாடுகளில் முடக்கப்பட்ட பல நடவடிக்கைகளை தளர்த்தி வருகின்றன.
கொடிய கொரோனா வைரஸால் கடந்த பல வாரங்களாக சில ஐரோப்பிய நாடுகள் தத்தம் நாட்டுக்கான எல்லைகள், பொது இடங்கள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், பாடசாலைகள் என பலவற்றை லொக்டவுன் செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழப்புக்கள் சற்று குறைந்து வருவதையிட்டு, பல நாட்கள் மக்கள் முடக்கல் நிலையை அனுபவித்து வந்ததாலும் பொருளாதார ரீதியாகவும் பாரிய பின்னடைவு ஏற்படுவதனாலும், சில நாடுகள் தத்தம் நாடுகளில் அமுல்படுத்தி வந்த முடக்கல்களை தளர்த்தி வருகின்றன.அதற்கமைய சுவீடன், டென்மார்க், ஜேர்மனி, ஒஸ்ரியா, இத்தாலி என சில நாடுகள் லொக்டவுனை தளர்த்தினாலும் பிரான்ஸ் ஜனாதிபதி மேலும் 1 மாத காலத்திற்கு முடக்கல் நிலை தொடரும் எனவும், பிரித்தானியா 3 வாரங்கள் இதே நிலை தொடரும் என அறிவித்திருக்கின்றது. இருப்பினும் ஏப்ரல் மாதம் 18ம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவில் சூப்பர் மார்க்கெட்டுக்களும் கடைகளும், மே மாதம் 18ம் திகதிக்கு பின்னர் மதுபான விடுதிகளும் திறக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது. 

ஆனாலும், சுவிட்சர்லாந்த் தனது முடக்கல் நிலை தளர்த்தப்படுமா என அறிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும், இந்தியா மே மாதம் 3ம் திகதி வரைக்கும் ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவித்திருப்பினும் இதுவரையில் இலங்கை ஊரடங்கு தளர்த்தல் தொடர்பில் இன்னும் 6 மாவட்டங்களுக்கு அறியத்தரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.முடக்கல் நிலை, தளர்த்தப்பட்ட நாடுகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுவதோடு முகமூடி அணிந்தவாறே சிலர் நடமாடுவதாகவும், அவ்வாறு முகமூடி இல்லாமல் வெளியில் உலாவுபவர்களுக்கு பொலிஸார் முகமூடிகளையும் வழங்கி வருகின்றனர்.இருப்பினும், உலக சுகாதார அமைப்பினரோ முடக்கலை சிறிது சிறிதாக தளர்த்துமாறும் அவசரப்பட்டு முற்றாக தளர்த்த வேண்டாம் எனவும், கொரோனா வைரஸ் பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு அதிகமாக தாக்குவதாகவும்தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமுல்படுத்தப்பட்ட முடக்கல்நிலை தளர்த்தினாலும் சமூக இடைவெளிகளைக் கடைப்பிடிக்குமாறும், கைகளை நன்கு கழுவுமாறும் மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.மேலும், அடுத்த 3 வாரங்களுக்கு இக் கொரோனா வைரஸ் பரவல் வேகம் ரஸ்யாவில் அதிகமாக காணப்படும் எனவும், அதற்காக பல மருத்துவ அவசர ஊர்திகள் காத்திருப்பதாகவும், முடக்கல்நிலை ஆரம்பிக்கவும் எனவும் அதற்காக இராணுவத்தினரை களமிறக்கப் போவதாகவும் ரஸ்யா அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.இதுவரையில் கொரோனா வைரஸ்க்கு பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 21 ஆயிரத்து 793 என்பதோடு தொற்றுப் பாதிப்புக்குள்ளோரின் எண்ணிக்கை 19 இலட்சத்து 39 ஆயிரத்து 809 எனவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக