நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 30 செப்டம்பர், 2013

கழுத்தில் சுருக்கிட்டுபெண் தற்கொலை

கிருஷ்நப்பிள்ளை நிர்மலா என்ற இருபத்தைந்து வயதுடைய ஒருபெண் குழந்தையின் தாய் ,கட்டாரில் தொழில் புரியும் தனது கணவரான சத்தியசீலன் சீவரத்தினம் என்பவரோடு  SKYPEயில் கதைத்துக் கொண்டிருக்கும் போது

ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் வீட்டு வளையில் தூக்கிட்டு மரணிக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு கணவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வளையில் நைலோன் கையிறை இட்டுவிட்டு கணணியை OFF செய்துவிட்டு கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

உடனடியாக இவரின் உறவினர்களுக்கு விடயத்தை கட்டாரிலிருந்து தொலைபேசி மூலம் அறிவித்தவுடன் ,உறவினர்கள் மிகவும் அவசரமாக இவரின் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுவளையில்தூக்கிட்டு மரணித்திருப்பதை அவதானித்துள்ளனர்.

ஏறாவூர் பொலிசார் இன்று மாலை பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் அவர்களோடு சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்து,பிரேதப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

கட்டாரில் இப்பெண்ணின் கணவரோடு மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தொடர்பை ஏற்படுத்திய போது இதனை உறுதிப்படுத்தினார்.

நாளை பிரேதப் பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

சனி, 28 செப்டம்பர், 2013

இரசாயான ஆயுதப் பயன்பாடு தொடர்பாக மறுபடியும்


 சிரியா மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டமைக்குக் காரணமான இரசாயன ஆயுதப் பயன்பாடு தொடர்பாக ஐ.நா சபை அங்கு மறுபடியும் மீளாய்வில் இறங்கியுள்ளது.

 ஐ.நா சபையைச் சேர்ந்த ஆயுதப் பரிசோதகர்கள் சிரியாவில் இடம்பெற்றதாகக் குற்றஞ் சாட்டப் பட்ட 7 இரசாயன ஆயுதத் தாக்குதல்களை தற்போது ஆய்வு செய்ய முனைந்துள்ளனர்.

 இதில் முக்கியமாக ஆகஸ்ட் 21 டமஸ்கஸ்ஸில் இடம்பெற்ற சம்பவத்துக்குப் பின்னரான 3 தாக்குதல்கள் உள்ளடக்கப் பட்டுள்ளன. மேலும் இத்தாக்குதல்களை திருத்தமாக மீளாய்வு செய்யுமாறு சிரிய அரசு ஐ.நா இடம் விண்ணப்பித்து இருந்தது. இவை அனைத்திலும் முக்கியமானதாக ஆகஸ்ட் 21 ஆம் திகதி சிரிய அரசால் பிரயோகிக்கப் பட்டதாகக் கருதப் படும் இரசாயனத் தாக்குதலே கருதப்பட்டது. நூற்றுக் கணக்கான மக்களைப் பலி கொண்ட இத்தாக்குதலினால் தான் தனது இரசயான ஆயுதங்களை சிரியா மேலைத்தேய அரச மத்தியஸ்தத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
 
இந்நிலையில் சிரியாவில் ஐ.நா இன் தலையீடு சர்வதேச சமூகத்துக்கு அதன் மீது கிடைத்த அழுத்தமான வெற்றி என அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் சிரிய அரசு தொடர்ந்து அனுமதி அளிக்கும் சந்தர்ப்பத்தில் புதிய ஆய்வாளர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையும் அங்கு சென்றடைய உள்ளனர்.
 
 இதேவேளை சிரிய வன்முறைகள் முடிவில்லாமல் தொடர்ந்து வருகின்றது. இறுதியாக டமஸ்கஸ்ஸுக்கு வடக்கே ரான்குஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் அருகே வெடித்த கார் குண்டு வெடிப்பில் 20 பொது மக்கள் வெள்ளிக்கிழமை கொல்லப் பட்டுள்ளனர்

கடவை விபத்து! தொடருந்துக்


தொடருந்துக் கடவை ஒன்றில் வாகனம் பழுதாகிய நிலையில் வாகனத்திலிருந்து இறங்க முடியாது பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகி உள்ளார். நேற்று 19 மணியளவில் Saint-Emilion (Gironde)  உள்ள கிராமத்தில்  Sarlat மற்றும் Bordeaux இற்குமிடையில்  போக்குவரத்தை மேற்கொள்ளும் பிராந்தியக் கடுகதித் தொடருந்துடன் (TER), Saint-Emilion தொடருந்து

நியைத்திற்குச் சிறிது முன்னதாக Libourne இற்கும் Saint-Emilion ற்கும் இடையிலுள்ள RUSTE தொடருந்துக் கடவையிலேயே இந்தப் பெண் விபத்திற்கு உள்ளாகி உள்ளளார். இந்தத் தொடருந்து மோதியதில் இப்பெண் படுகாயங்களிற்கு உள்ளாகி உயிராபத்தான நிலையில் உள்ளார்.
  
இவரது வாகனம் பழுதுபட்டுச் சரியாகக் கடவையில் நின்று விட்டது. பல தடவைகள் வாகனத்தை இயக்க முயன்றபோதும் முடியவில்லை. அதற்குள் தொடருந்து வாகனத்துடன் மோதியது. விபத்திற்குள்ளாகி வாகனத்திற்குள் சிக்கி இருந்த இவரை முதலுதவிப்படையினர் வாகனத்தினை வெட்டியே

வெளியே கொண்டு வந்துள்ளனர். 30 வயதுடைய இந்தப் பெண் உடனடியாக உலங்குவானூர்தியில் Bordeaux வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரது உயிர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
 
விபத்திற்குள்ளாகிய தொடருந்தில் 131 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலை மாணவர்கள். பயணிகள் அனைவரும் எந்தக் காயங்களுமின்றித் தப்பி உள்ளனர். விபத்தின் பின்னர் பயணிகள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்நப் பாதையின்

தொடருந்துப் போக்குவரத்து மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலமட்டத் தொடருந்துக் கடவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்து இரண்டு நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீண்டும் தாக்குதல் கென்யாவில் பயங்கரவாதிகள்


 
கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவின் எல்லைப்பகுதியிலுள்ள மந்தெரா நகரத்தில் தீவிரவாதிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக புதன்கிழமை இரவு, அங்குள்ள மற்றொரு நகரமான வாஜிரில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் ஈடுபட்ட அல்-ஷஹாப் தீவிரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கென்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோமாலியாவிலுள்ள கென்ய படையினருக்கு, பயங்கரத் தாக்குதலை சந்திக்க தயாராக இருக்குமாறு அல்-ஷஹாப் தீவிரவாத பிரிவினர் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனிடையே 67 பேரை பலி கொண்ட வெஸ்ட்கேட் வணிகவளாகத்தில் வியாழக்கிழமை முதல் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பன்னாட்டு தடயவியல் நிபுணர்கள் சோதனைகளில்

ஈடுபட்டுள்ளதாகவும் ஒருவாரத்திற்குள் தடயங்கள் சேகரிக்கப்படும் என்றும் கென்ய உள்துறை அமைச்சர் ஜோஸப் ஒலெ லெங்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஷஹாப் தீவிரவாத அமைப்பினர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அல்-காய்தா சார்பு தீவிரவாத இயக்கம் ஒன்று, கென்ய படையினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது
 

வியாழன், 26 செப்டம்பர், 2013

உலக நாடுகளுக்கு மலாலாவின் கோரிக்கை


ஆப்கானிஸ்தானுக்கு ஆயுதங்களுக்கு பதிலாக புத்தகங்களை அனுப்புங்கள் என உலக நாடுகளுக்கு மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த வந்த மலாலா மீது, கடந்தாண்டு அக்டோபர் மாதம் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.

தலையிலும், கழுத்திலும் குண்டுகுள் பாய்ந்த நிலையில் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த மலாலா மீண்டு வந்தார்.
இதனை தொடர்ந்து உலக நாடுகள் ஆதரவளித்து வருகின்றன.
தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 68வது ஐநா பொது
கூட்டம் நடந்து வருகிறது.

இதையொட்டி நேற்று நடந்த சமூக நல மாநாட்டில் மலாலா பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு துப்பாக்கிகளை அனுப்புவதற்கு பதிலாக புத்தகங்களை அனுப்பி வையுங்கள்.

இராணுவ டேங்குகள் அனுப்புவதற்கு பதிலாக பேனாக்களை அனுப்புங்கள்.
இராணுவ வீரர்களுக்கு பதிலாக ஆசிரியர்களை அனுப்புங்கள், எல்லா குழந்தைகளும் கல்வி பெற வேண்டும் என்பதும் நைஜீரியா, சிரியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்பதும் எனது கனவு.

பெண்களுக்கு முழு சுதந்திரமும், ஆண்களுக்கு நிகரான உரிமையும், நீதியும் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்
 

புதன், 25 செப்டம்பர், 2013

சீனாவில் சூறாவளி : 25 பேர் பலி


 நேற்று சீனாவில் ஏற்பட்ட பயங்கர சூறாவளியில் சிக்கி 23 பேர் பலியானார்கள்.
சீனாவின் ஹாங்காங் அருகே உள்ள தெற்கு பகுதி மாகாணமான குவாங்டோங்கில் நேற்று 'யுசாகி' என்ற சூறாவளி தாக்கியது. 180 கி.மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த சூறாவளி தாக்கியதில் அப்பகுதியில் 7100  வீடுகள் இடிந்து விழுந்தன. மரங்கள் அடியோடு சாய்ந்தன. ரோடுகளில் நின்ற கார்கள் உருண்டன.

இந்த இடிபாடுகளில் சிக்கியும், வெள்ள நீரில் மூழ்கியும், காற்றில் தூக்கி வீசப்பட்ட பொருட்கள் தாக்கியதிலும் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த சூறாவளிக்கு 35 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், குவாங்டோங் மாகாணத்தில் உள்ள குவாங்ஜூ , ஷென்சென் மற்றும் ஹாங்காங் பகுதிகளுக்கு செல்லும் 400-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் தரைவழி போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

வாஷிங்மிஷினில் மறைந்திருந்த இரு குழந்தைகள் பலி


சீனாவின், கியோசி நகரிலுள்ள வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு பெண் குழந்தைகள், வாஷிங்மிஷினில் ஒளிந்த கொண்டிருந்தபோது மூச்சு திணறி இறந்தனர்.

வீ்ட்டில் இரண்டு மற்றும் மூன்று வயது கொண்ட இரு ச‌கோதரிகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.
தாய் சமையல் வேலை பார்த்துக் கொண்டிருக்க, தந்தை இசையை ரசித்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், குழந்தைகள் இருவரும் திறந்திருந்த வாஷிங்மிஷினுக்குள் புகுந்து, மூடிக் கொண்டனர். அப்போது ஏற்பட்ட மூச்சு திணறலால் அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
அதிர்ஷ்டவசமாக இக்குழந்தைகளின் ஒரு வயது தம்பி இந்த விபத்தில் இருந்து தப்பினான்.
 

திங்கள், 23 செப்டம்பர், 2013

தீவிரவாதிகள் தாக்குதல் : பலி எண்ணிக்கை 60ஆக


                       

 கென்யாவின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கடந்த 1998-ம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் மிகப்பெரிய தாக்குதல் நடத்தினார்கள். தலைநகர் நைரோபியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது அப்போது அவர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 200-க்கும் அதிகமான பேர் பலி ஆனார்கள்.

அதன்பிறகு இப்போது அங்கு மீண்டும் தீவிரவாதிகள் பெரிய அளவில் தாக்குதல் நடத்தி உள்ளனர். நைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான 'வெஸ்ட் கேட்' என்ற வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் முகமூடி அணிந்த சுமார் 15 தீவிரவாதிகள் புகுந்து கையெறி குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

அப்போது அந்த வணிக வளாகத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான பேர் இருந்தனர். வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் போட்டியும் நடந்து கொண்டு இருந்தது. தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கியதும், கடைகளில் பொருட்கள் வாங்கிக்கொண்டு இருந்தவர்கள் உயிர் தப்புவதற்காக அங்கும், இங்குமாக ஓடினார்கள்.

இதனால் ஒரே களேபரமாக இருந்தது. தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் சுருண்டு விழுந்து செத்தனர். இந்த கொடூர தாக்குதலின் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்று 60 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

வணிக வளாகத்தில் ஆங்காங்கே உடல்கள் சிதறிக்கிடந்தன. வணிக வளாகத்திற்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியது பற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.

ராணுவ ஹெலிகாப்டர்களும் வரவழைக்கப்பட்டன. தீவிரவாதிகளின் பிடியில் பிணைக்கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்றும் சண்டை நீடித்தது. அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிர் இழந்து உள்ளனர்.

கனடா தூதரக அதிகாரி ஒருவர், அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரின் மனைவி ஆகியோரும் பலியானவர்களின் பட்டியலில் உள்ளனர். இந்த தாக்குதலில் பலியானவர்களில் 2 பேர் இந்தியர்கள் என தெரியவந்தது. அவர்களில் ஒருவர் பெயர் ஸ்ரீதர் நடராஜன் (வயது 40).

சென்னையைச் சேர்ந்த என்ஜினீயரான இவர் கென்யாவில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இன்னொருவர் பரம்ஷு ஜெயின் (8) என்ற சிறுவன். இந்த சிறுவனின் தந்தை நைரோபியில் உள்ள ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.

தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் ஸ்ரீதர் நடராஜனின் மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா (36), பரம்ஷு ஜெயினின் தாயார் முக்தா ஜெயின், 12 வயது சிறுமி பூர்வி ஜெயின், நடராஜன் ராமச்சந்திரன் ஆகிய 4 இந்தியர்களும் படுகாயம் அடைந்தார்கள்.

நடராஜன் ராமச்சந்திரன் வர்த்தக நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களில் மஞ்சுளா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கென்யாவில் சுமார் 70 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசியதாக நைரோபியில் உள்ள இந்திய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

இதுதொடர்பாக கென்யா அதிபர் உகுரு கென்யட்டாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங் கடிதம் எழுதி இருக்கிறார். அதில், இதுபோன்ற வன்முறை செயல்களை கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். தீவிரவாதிகளின் இந்த தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிப்பதாகவும் கென்யா அரசுக்கும், அந்த நாட்டின் மக்களுக்கும் இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் சையது அக்பருதின் தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்சு உள்ளிட்ட மேலும் பல நாடுகளும் இந்த தாக்குதலை கண்டித்து உள்ளன. சோமாலியா நாட்டில் செயல்படும், அல்கொய்தா ஆதரவை பெற்ற அல்-ஷபாப் என்ற தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்று உள்ளது.

இது அல்கொய்தா ஆதரவு பெற்ற இயக்கம் ஆகும். அல் ஷபாப் இயக்க தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட அபு மூசா மொம்பாசா என்ற தீவிரவாதி பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள கென்யா அதிபர் உகுரு

கென்யட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தனிப்பட்ட முறையில் தனது குடும்ப உறுப்பினர்கள் சிலரை இழந்து இருப்பதாகவும் அவர் கூறினார்

தற்கொலை படைத் தாக்குதலில் 16 பேர் பலி

 
 ஈராக் நாட்டில் நேற்று தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் 16 பேர் பலியானார்கள்.

இராக் தலைநகர் பாக்தாத்தின் தெற்கு பகுதியில் உள்ள டோராவில், சன்னி அமைப்‌‌‌பினரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அப்போது தற்கொலைப் படைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இந்த தாக்குதலில் 16 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் பலத்த காயமடைந்தனர்.

முன்னதாக நேற்று முன் தினம் இராக்கில் நடைபெற்ற ஷியா பிரிவின் இறுதி ஊர்வலத்தின் போது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 65 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

வியாழன், 19 செப்டம்பர், 2013

கிணற்றில் சிக்கியிருந்த பெண் 15 நாட்களின்பின்பு மீட்பு


கிண­றொன்றில் விழுந்த பெண்­ணொ­ருவர் 15 நாட்­களின் பின் உயி­ருடன் மீட்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது.
ஸு கிஸியு (38 வயது) என்ற மேற்­படி பெண் ஹெனான் மகா­ணத்­தி­லுள்ள ஸொங்பெங் கிரா­மத்­தி­லுள்ள 12 அடி ஆழ­மான கைவி­டப்­பட்ட கிணற்றில் விழுந்­துள்ளார்.

அவர் சோளத்தை உண்டும், மழை நீரை அருந்­தியும் உயிர் பிழைத்­தி­ருந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து கடந்த திங்­கட்­கி­ழமை மாலை அவர் மீட்புப் பணி­யா­ளர்­களால் மீட்­கப்­பட்­டுள்ளார்.
அந்தக் கிணறு உய­ர­மாக வளர்ந்த சோளச் செடி­களால் மூடப்­பட்­டி­ருந்­த­துடன், கிணற்றின் உட்­புறச் சுவர் ஏற முடி­யாது வழு­வ­ழுப்­பாக இருந்­துள்­ளது.
அந்தப் பெண் கிணற்­றுக்குள் விழுந்­த­போது சோளச் செடி­களைப் பற்றி தொங்­கி­யுள்ளார்.

ஆனால், அவ­ரது பாரத்தை தாங்­காத சோள செடிகள் வேருடன் அறுந்து வந்­த­தை­ய­டுத்து, அவர் வரண்ட கிணற்­றுக்குள் விழுந்­துள்ளார்.
இந்­நி­லையில் அவ­ரது கணவர் லி குன்­மிங்கும் உற­வி­னர்­களும் ஸு கிஸி­யுவை தேடும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டனர். எனினும், அவர்­களால் அவரைக் கண்­டு­பி­டிக்க முடி­யாது போனது.

கடந்த 16ஆம் திகதி சோள அறு­வ­டைக்கு சென்ற விவசாயி ஒருவர் கிணற்றிலிருந்து கூச்­ச­லி­டு­வதைக் கேட்டு மீட்புப் பணி­யா­ளர்­க­ளுக்கு அது தொடர்பில் அறி­வித்தார்.

இத­னை­ய­டுத்து மீட்­கப்­பட்ட ஸு கிஸியு தற்­போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது நிறை கடந்த 15 நாட்களில் 16 இறாத்தலால் குறைந்துள்ளது.

திங்கள், 16 செப்டம்பர், 2013

அஸாஞ்சே கட்சி தோல்வி அவுஸ்திரேலியாவில்


 நடைபெற்ற செனட் தேர்தலில் விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்ததுடன், அவர் போட்டியிட்ட விக்டோரியா பகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளார்.

விக்கிலீக்ஸ் அதிபரான ஜூலியன் அஸாஞ்சே, அமெரிக்க வெளியுறவுத்துறையின் ரகசியத் தகவல்களை அம்பலப்படுத்தி உலகையே பரபரப்பில் ஆழ்த்தி பிரபலமடைந்தார்.

இதையடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகளும், மிரட்டல்களும் வந்தன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் அவர் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பின. இதையடுத்து லண்டனில் உள்ள போர்ச்சுகல் நாட்டுத் தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்.

இதனால் அவரை நாடு கடத்த முடியாமல் தவித்து வருகிறது இங்கிலாந்து அரசு. தொடர்ந்து போர்ச்சுகல் தூதரகத்திலேயே தங்கியிருக்கும் அஸாஞ்சே தனது சொந்த நாடான அவுஸ்திரேலியாவில் ஒரு கட்சி ஆரம்பித்தார்.

அங்கு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சியை களம் இறக்கினார். அவரும் விக்டோரியா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அஸாஞ்சே உள்பட அவரது கட்சியை சார்ந்த அத்தனை பேரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டவர்களின் ஆதரவைப் பெற்ற செக்ஸ் கட்சிக்கு கிடைத்த ஆதரவை விட குறைவான வாக்குகளை பெற்று அஸாஞ்சே கட்சி தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

விண்ணில் ஏவியது மிகவும் செலவு குறைந்த ராக்கெட்டை


 
ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா மிகவும் அணுகூலமான புதிய தலைமுறை விண்வெளி ராக்கெட்டை முதலாவதாக ஏவியுள்ளது.
எப்சிலான் என்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை உள்ளடக்கிய

தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த அதி நவீன ராக்கெட்டின் எடையானது முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளின் எடையின் பாதியளவே உள்ளது.
37 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த அதி நவீன ராக்கெட் ஜப்பான் விண்வெளி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உலகின் முதலாவது

தொலைநோக்கியை எடுத்துச்சென்றது. பின்னர் பூமியின் மேலே சுமார் 1000 கிலோமீட்டர் தூரத்தில் அந்த டெலஸ்கோப்பை விட்டு ராக்கெட் பிரிந்தது.
பூமியின் சுற்றுவட்டப்பாதையில் விடப்பட்டுள்ள இந்த ஸ்பிரிண்ட்-ஏ-

தொலைநோக்கியானது வீனஸ், மார்ஸ், ஜூபிடர் கோள்கள் பற்றி ஆராய்ந்து படம் பிடித்து அனுப்பும். இது ஆராய்ச்சியாளர்களுக்கு நிறைய தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விண்வெளி பற்றிய அறிய தகவல்களை தரும் என்று நம்பப்படுகிறது.

முன்பு அனுப்பப்பட்ட ராக்கெட்டுகளை காட்டிலும் பாதியளவு எடையுள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை கொண்டு கட்டப்பட்ட இந்த எப்சிலான் ராக்கெட்டை அனுப்ப 8 விஞ்ஞானிகளே மட்டுமே தேவைப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து பேசும் ரோபோக்களை சர்வதேச விண்வெளிக்கூடத்திற்கு அனுப்பும் முயற்சியை ஜப்பான் விண்வெளி நிறுவனம் ஜாக்ஸா எடுத்து வருகிறது.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பிரதமரிடம் நோர்வே வாழ் பெற்றோர்

 

எமது பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் புதிய பிரதமரிடம் நோர்வே வாழ் வெளிநாட்டுப் பெற்றோர் உருக்கம்

நோர்வே நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் ERNA SOLBERG இற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள நோர்வே வாழ் வெளிநாட்டு வதிவாளர்கள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் தாம்

எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து காப்பகங்களில் சிக்கியுள்ள தமது பிள்ளைகளை தம்மிடம் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

நோர்வேயின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கிய கன்சர் வேட்டிவ் கட்சியின் தலைவியும் எதிர்க்கட்சித் தலையுமாக இருந்த IRON ERNA SOLBERG எட்டு வருடங்களின் பின்னர் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெற்று நோர்வேயின் புதிய பிரதமராக தெரிவாகியுள்ளார்.

இந்நிலையிலேயே புதிதாக தெரிவாகியுள்ள நோர்வே நாட்டு பிரதமரிடம் மேற்படி நோர்வேயில் வதியும் வெளிநாட்டு வதிவாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து குடிபெயர்ந்து நோர்வேயில் தஞ்சமடைந்துள்ள இலங்கை, இந்தியா, கானா, எத்தியோப்பியா, ரஷ்யா, போலந்து, கொங்கோ, லத்வியா, சூடான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெற்றோரின் குழந்தைகள் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களிடம்

 சிக்குண்டுள்ளன.
தமது குழந்தைகளை மீட்டுக்கொள்வதற்காக நோர்வேயின் முன்னைய அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுவந்த கோரிக்கைகள் மற்றும்

வேண்டுதல்கள் அனைத்தும் கவனத்திற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கின்ற பாதிக்கப்பட்ட பெற்றோர் புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் ஓர் தாயார் என்பதால் கருணையும் மனிதாபிமானமும் கொண்டு தமது பிள்ளைகளை மீட்டுத் தருவதற்கு வழிவகை செய்யுமாறு வேண்டுகின்றனர்.

நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் நோர்வேயில் வதியும் வெளிநாட்டுப் பெற்றோர் தமது பிள்ளைகளை வருடக் கணக்கில் பிரிந்து வருவதாகவும் இதனால் தமது பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பலவந்தமாக பிரித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்டோர் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எட்டு வருடங்களின் பின்னர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுள்ள கன்சர் வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் இவ்விடயத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறிப்பு- நோர்வே சிறுவர் விடயம் தொடர்பில் கடந்த பல வருடங்களாக ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இது குறித்து கவனம் செலுத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்



 

திங்கள், 9 செப்டம்பர், 2013

உலகைச் விமானத்தில் சுற்றிவந்து சாதனை படைத்த இளைஞன்!


 
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் விமானத்தில், தனியாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த, ரேயான் கேம்பல், 19 விமானம் மூலம், தனியாக உலகை சுற்றி வர திட்டமிட்டார்.

இலகுரக விமானத்தில், ஜூன், 30ம் திகதி அவுஸ்திரேலியாவின், நியூ வேல்ஸ் பகுதியில் இருந்து தன், சுற்றுப் பயணத்தை துவங்கினார். தொடர்ந்து 70 நாட்கள் விமானத்தில் பயணித்த ரேயான், உலகின் அனைத்து பகுதிகளையும் சுற்றி வந்து, தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.

இதன் மூலம், மிகச் சிறிய வயதில் விமானம் மூலம் உலகை சுற்றி வந்த நபர் என்ற, புதிய சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த ஜேக் வீகன்ட், 21, இந்த சாதனையை படைத்திருந்தார்.

19 வயதிலேயே, உலகை சுற்றி வந்ததால் ஜேக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், அமெரிக்காவை சேர்ந்த, ஜேக் வீகன்ட், 21, இந்த சாதனையை படைத்திருந்தார். 19 வயதிலேயே உலகை சுற்றி வந்ததால், ஜேக்கின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.{புகைப்படங்கள்,}


 

மூன்று நாள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!


திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மூன்று நாள்களுக்கு தாக்குதல் நடத்த ராணுவத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அந்நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சிரியாவில் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட இலக்குகளில் ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கவும், இத்தாக்குதலில் தப்பிய இலக்குகளின்மீது உடனடியாக மறுதாக்குதல் தொடுக்கவும் ராணுவத் தலைமையகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் தேர்வு செய்து வைத்திருந்த 50 இலக்குகளைத் தவிர, மேலும் பல புதிய இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு அதிபர் மாளிகை கேட்டுள்ளது.
தற்போது மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ஏவுகணை அழிப்புக் கப்பல்களின் உதவியுடன், தாக்குதல் விமானங்கள் மூலம், ஏவுகணைகளைக் கொண்டும் சிரியா விமானப்படையை அழிக்க பென்டகன் திட்டமிட்டு வருகிறது.

வேகமாகச் செல்லக்கூடிய ஒரு குரூஸர் வகைப் போர்க்கப்பல், மூன்று தாக்குதல் கப்பல்களுடன் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கிக் கப்பல், சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வசதியாக செங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிரியா மீது பலமுறை சரமாரித் தாக்குதல் நடைபெறும் என்றும், மூன்று நாட்களுக்குள் இலக்குகள் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வருவதாக அமெரிக்காவும், பிரான்ஸýம் கூறியுள்ளன.

இதேவேளை, சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை திரண்ட அவர்கள், போருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வீடியோ ஆதாரங்கள் வெளியீடு: சிரியா அதிபர் அல்-அஸாதின் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதல் காட்சிகள் இடம்பெற்றுள்ள 13 வீடியோக்களை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது. சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரவிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.

தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்ட இந்த வீடியோக்கள், பொதுமக்களின் ஆதரவுக்காக சி.என்.என் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பானது.

ஆகஸ்ட் 21 அன்று சிரியாவில் நடைபெற்ற ரசாயனத் தாக்குதலில், 1,429 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது
 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மகாராணியின் இல்லத்துக்குள் நுழைந்து

 
பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ இல்லத்துக்குள் நுழைந்து திருட முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் காவல் கட்டமைப்புக்களை மீறி, பாதுகாப்பு வேலியை ஏறிக் குதித்து கடந்த திங்கள் கிழமை இரவு ஒரு நபர் உட்புகுந்துள்ளார்.

அரண்மனையில் உள்ளே இருக்கும், அரசத் தலைவர் சமூகமளிக்கும் தர்பார் அரையில் இந்த நபர் பிடிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக பகல் நேரத்தில் இந்த அறை பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும். இந்த நபரோடு வந்த மற்றொருவர் அரண்மனைக்கு வெளியே கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்தபோது, அரச குடும்பத்தினர் யாரும் அரண்மனையில் இல்லை.

கடந்த 1982 ஆம் ஆண்டு மைக்கேல் பாகன் என்ற ஒரு நபர் ராணியின் படுக்கையரை வரை உள்ளே புகுந்து, ராணியுடன் பேச முயன்றார். ராணியார் தனது காவலாளிகளை உஷார் படுத்தியவுடன் அவரும் கைது செய்யப்படார்

சனி, 7 செப்டம்பர், 2013

உலகில் மிகப்பெரிய எரிமலை கண்டுபிடிப்பு


உலகிலேயே மிகப் பெரிய எரிமலை ஜப்பான் நாட்டிற்குக் கிழக்கே 1,609 கி.மீ தூரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமு மசிஃப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எரிமலை சூரிய மண்டலத்தில் இரண்டாவது பெரிய எரிமலையாகும். செவ்வாய்க் கிரகத்தில் இருக்கும் முதல் பெரிய எரிமலையாகக் கருதப்படும் ஒலிம்பஸ் மோன்ஸ் இதைவிட 25 சதவிகிதம் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.

130-145 மில்லியன் வருடங்களுக்கு முன்னால் உலகின் நீர்ப்பரப்புக்கடியில் அமைந்திருந்த ஷட்ஸ்கி ரைஸ் என்ற மலைத்தொடரில் இருந்த பல எரிமலைகள் வெடித்ததன் மூலம் இந்த எரிமலை உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பரப்பளவில் இங்கிலாந்து தீவுகளை அல்லது நியூமெக்சிகோ மாகாணத்தை இது ஒத்துள்ளது. உருவாகிய சில மில்லியன் வருடங்களிலேயே செயலிழந்து போன இந்த எரிமலை 310,798 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக உள்ளது.
உலகில் உள்ள செயல்படும் எரிமலைகளிலேயே பெரியதாகக் கருதப்படுகின்ற ஹவாய் தீவில் இருக்கும் மௌனா லோவா 5,179 சதுர கி.மீ பரப்பளவுதான் கொண்டது. இதனுடைய அளவு தமு மசிஃபைக் கணக்கிடும்போது 2 சதவிகிதம்தான் இருக்கும்.

தமு மசிஃபின் அளவு மட்டுமின்றி, அமைப்பும் சிறப்பு பெறுகின்றது. இதன் முகட்டின் உயரம் கடல் மேற்பரப்பிலிருந்து 6,500 அடிக்குக் கீழும், அடிப்பரப்பு நீண்டு பரந்தும் காணப்படுகின்றது. இதனால் அப்போது எரிமலைகள் வெடித்துச் சிதறியதில் தோன்றிய லாவா உலகின் மற்ற எரிமலைகளைப் போல் உயரமாகப் படியாமல் நீண்ட தூரம் பரவியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகின்றது.

இதுநாள் வரை, ஆராய்ச்சியாளர்கள் இந்த எரிமலையின் அமைப்பு குறித்து உறுதி செய்துகொள்ள முடியாமல் இருந்தார்கள். ஆனால், தற்போது உலகிலேயே பெரியதான ஒற்றை எரிமலை இது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர்.

தாக்குதல்: ஜி-20 நாடுகளிடையே கருத்து முரண்பாடு

 
 
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து ஜி-20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சர்வதேசத் தலைவர்களுக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார்.

இந்த விருந்தின்போது, அவரும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிரியா விவகாரம் குறித்துப் பேசினர்.
அவர்கள், சிரியா மீது அமெரிக்கா தன்னிச்சையான முறையில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஒபாமாவை வலியுறுத்தினர்.
சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது, உலகப் பொருளாதாரத்தை பாதிப்பதோடு, எண்ணெய் விலைகளையும் உயர்த்திவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதை, விருந்தில் பங்கேற்ற இத்தாலி நாட்டின் பிரதமர் என்ரிகோ ரெட்டா உறுதிப்படுத்தியுள்ளார். அவர், டுவிட்டர் இணையதளத்தில் இத்தகவலை வெளியிட்டிருந்தார்.

ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
"சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது சர்வதேச சட்டத்துக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட மற்றொரு ஆணியாக இருக்கும். இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை, சிரியா மீதான நடவடிக்கையை ஆதரிக்கும் நாடுகளை விட, எதிர்க்கும் நாடுகளே அதிகம்'' என்றார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ரஷிய அதிபர் புதின் ஏற்கெனவே கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சீனா, ஐரோப்பிய யூனியன், வாடிகன் உள்ளிட்டவை சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியுடன் உள்ளன. ஐ.நா. ஒப்புதலின்றி சிரியா மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று ரஷியாவும், சீனாவும் வலியுறுத்திக் கூறியுள்ளன.
ஜி20 உச்சிமாநாட்டில், அமெரிக்காவும், பிரான்ஸூம் மட்டுமே சிரியா மீதான நடவடிக்கையை ஆதரிப்பது குறுப்பிடத்தக்கது. சிரியா மீது ராணுவ

 நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசக் கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த உச்சிமாநாட்டில் முயற்சியெடுக்க ஒபாமா முனைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மற்ற நாடுகளிடையே இந்த விவகாரத்தில் கருத்து வேற்றுமை

நிலவியதால் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவின் ஆதரவை நாடும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது

வியாழன், 5 செப்டம்பர், 2013

10 வருடங்களாக பாலியல் மூன்று பெண்களை கடத்தி கொடுமைகள் ?


மூன்று பெண்களைக் கடத்திச் சென்று 10 ஆண்டுகளாக வீட்டுக்குள்சிறை வைத்து பாலியல் கொடுமை செய்த குற்றத்துக்காக ஆயிரம் ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஏரியல் காஸ்ட்ரோ என்ற நபர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணச் சிறையில் தீவிர கண்காணிப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஏரியல் காஸ்ட்ரோ, செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

2002 முதல் 2004 வரை 3 பெண்களைக் கடத்திச் சென்று வீட்டுக்குள் சிறை வைத்து, ஏரியல் காஸ்ட்ரோ மிகக் கொடுமையாக பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டிலிருந்து தப்பி வெளியே வந்த ஒரு பெண் அக்கம்பத்தினரின் உதவியோடு காவல்துறைக்குச் சென்ற பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கடத்தப்பட்ட 3 பெண்களையும், அதில் ஒருவருக்குப் பிறந்த பெண் குழந்தையையும் காவல்துறையினர் மீட்டு ஏரியல் காஸ்ட்ரோவை கைது செய்தனர்.

இதையடுத்து, அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்திருந்தது

புதன், 4 செப்டம்பர், 2013

முடக்கப்பட்ட அமெரிக்க கடற்படையின் இணையத்தளம்


சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் புரட்சியாளர்கள் போரிட்டு வருகின்றனர்.
போர் நிறுத்தத்திற்காக உலக நாடுகள் பலவும் குரல் கொடுத்து வருகின்றன. இலட்சக்கணக்கான மக்களைப் பலி வாங்கியுள்ள இந்த சண்டையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியன்று அரசு துருப்பு ரசாயன வெடிகுண்டுகளைப் பயன்படுத்தியதில் 426 குழந்தைகள் உட்பட 1429 பேர் பலியானதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கு தக்க பாடம் புகட்டும்விதமாக சிரியா மீது போர் தொடுக்க அமெரிக்க அரசு முடிவெடுத்தது. ஆயினும், இவர்களின் நட்பு நாடான இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போருக்கு எதிராக வாக்களித்ததால் அமெரிக்கா தனியாக இதனை எதிர்கொள்ளும் நிலைமை தோன்றியுள்ளது.

இதனிடையில் அமெரிக்க கடற்படையினரின் வர்த்தக வேலைவாய்ப்புத் தளம் ஒன்று சிரியாவின் எலெக்ட்ரானிக் படை என்ற ஒரு அமைப்பால் நேற்று பல மணி நேரம் முடக்கப்பட்டது. அவர்களால் வெளியிடப்பட்ட ஏழு வாக்கியங்கள் கொண்ட செய்தி மட்டுமே அந்த இணையதளத்தில் தொடர்ந்து வெளியானது.

இந்த அமைப்பு ஆறு புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. அந்தப் படங்களில் உள்ள வாசகங்கள் சிரியாவில் இருக்கும் அல்கொய்தா தீவிரவாதிகளுக்காக நான் போராடமாட்டேன் என்று கையினால் எழுதப்பட்டிருந்தது. இதன்மூலம் சிரியா அரசை எதிர்த்து அல்கொய்தா தீவிரவாதிகள் போரிட்டுக் கொண்டிருப்பதை அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

அமெரிக்கா, சிரியா ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான எதிரி தீவிரவாதம்தான் என்றும், சிரியாவின் துருப்புகள் அமெரிக்காவுடன் நட்பு பாராட்டுபவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ், சமூக இணையதளமான டுவிட்டர் மற்றும் பல ஊடக தளங்களையும் முடக்கியதற்கு தாங்கள் பொறுப்பேற்பதாக எஸ்.ஈ.ஏ. தெரிவித்துள்ளதாக சீனப் பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் இணையதளப் பிரிவு இதனால் பாதிக்கப்படவில்லை என்று கடற்படைப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் எரிக் பிளானகன் தெரிவித்துள்ளார்

செவ்வாய், 3 செப்டம்பர், 2013

” முன்னாள் பிரதமருக்கு எதிராகடோனி திரும்பி போ”


தாய்லாந்து சென்றுள்ள இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இங்கிலாந்து- தாய்லாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 2006ம் ஆண்டு முதல் பல விடயங்களில் பிரச்னை நிலவுகிறது.
இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவை ஏற்படுத்துவதற்காக தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சமாதான கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கலந்து கொண்டு இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கலந்து கொண்டு பேசினார்.
இதற்காக தாய்லாந்து அரசிடம் இருந்து 4 லட்சம் அமெரிக்க டொலர் வரை பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்தும், தாய்லாந்தில் நடைபெற்ற கருத்தரங்கை புறக்கணித்தும் மக்கள் ஏராளமானோர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டோனி திரும்பி போ” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பிளேருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
ஆனால் தாய்லாந்து அரசிடம் எந்த பணமும் வாங்கவில்லை என்று பிளேர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தாய்லாந்து அரசு, டோனி பிளேருக்கு போக்குவரத்து, தங்கும் இடம் உள்ளிட்ட செலவு மட்டும்தான் செய்யப்பட்டது, உரை நிகழ்த்த பணம் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.{புகைப்படங்கள்},








 

மாப்பிள்ளையின்றி தவிக்கும் கன்னிப்பெண்கள்!


சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இவர்கள் அனைவருமே காதல் மற்றும் திருமண வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ முறை டேட்டிங் போயும் கூட தங்களுக்கு நல்ல காதலர் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள் இப்பெண்கள்.
ஸூ ஜியாஜிக்கு 31 வயதாகிறது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம். ஆனால் இன்னும் திருமணமாகவில்லை. காரணம் நல்ல மாப்பிள்ளை கிடைக்கவில்லை.

இதனால் வீட்டிலும், அலுவலகத்திலும் நிறைய கேள்விகளை எதிர்கொண்டு தர்மசங்கடத்தில் தவிக்கிறாராம் ஸூ.
இதுகுறித்து ஸூ கூறுகையில், நகர்ப்புற சீன ஆண்கள், தங்களது மனைவி அல்லது காதலி தங்களை விட குறைந்த படிப்பை படித்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சம்பளம் குறைவாகப் பெற வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

கண்ணை மூடிக் கொண்டு திருமணம் செய்ய அவர்கள் தயாராக இல்லை. இதுதான் பெரிய பிரச்சினை என்கிறார்.
மேலும் அவர் கூறுகையில் எங்களை எல்லோரும் ஷெங்னு என்று சொல்லிக் கூப்பிடுகிறார்கள். ஷெங்னு என்றால் கைவிடப்பட்ட பெண்கள் என்று அர்த்தம்.
20 வயதுகளில் திருமணமாகாவிட்டால் அப்படிப் பெயர் வைத்து விடுகிறார்கள்.

சீனாவின் பிரபலமான திருமண தொலைக்காட்சி ஷோவை நடத்தி வரும் நி லின் என்பவர் கூறுகையில், சீன ஆண்கள் பெரும்பாலும் தங்களை விட குறைந்தவர்களைத்தான் திருமணம் செய்ய முயலுகின்றனர்.
ஏ கிரேடு ஆண்கள் பி கிரேடு பெண்களைத் திருமணம் செய்கின்னர். பி கிரேடு ஆண்கள், சி கிரேடு பெண்களையும், சி கிரேடு ஆண்கள் டி கிரேடு பெண்களையும் மணக்கின்றனர்.

இதில் ஏ கிரேடு பெண்களும், டி கிரேடு ஆண்களும்தான் பார்ட்னர் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

பெய்ஜிங் நகரில் 20 மற்றும் 30 வயதைத் தாண்டிய பெண்களில் மூன்றில் ஒரு பங்குப் பேர் திருமணமாகாமல் தவிக்கின்றனர். தலைநகரில் மட்டும் கிட்டத்தட்ட 5 இலட்சம் பெண்கள் நல்ல கணவர் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

ஷாங்காய் நகரில் திருமணமாகமல் இருக்கும் பெண்களின் நலனுக்காக அரசே வரண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தருகிறதாம். இருந்தும் கூட சரியான கணவர்களைப் பெறும் பெண்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறதாம்
 

திங்கள், 2 செப்டம்பர், 2013

சிரியாவில் போர் வேண்டாம்! உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் அழைப்பு


சிரியாவில் போரினை தடுப்பதற்காக வருகிற 7ம் திகதி உண்ணாவிரதம் இருக்க போப்பாண்டவர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று நடந்த பிரார்த்தனைக்குப் பின்னர் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், செப்டம்பர் 7ம் திகதி புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இரவு 7 மணியிலிருந்து நள்ளிரவு வரை உண்ணாவிரதம் நடைபெறும்.
அனைவரும் ஒருங்கிணைவோம், கடவுள் கொடுத்த அமைதி என்ற மாபெரும் பொக்கிஷம் சிதைந்து போகாமலும், சிரிய மக்கள் அன்புடனும், அமைதியுடனும் வாழ வேண்டும் என்று வேண்டியும், உலகம் முழுவதும் மீண்டும் போர் வெடிக்காமலும், வன்முறை ஒழியவும் வேண்டி இந்த உண்ணாவிரதம் மற்றும் அமைதிப் பிரார்த்தனை நடைபெறும்.
இந்த அமைதி வழி உண்ணாவிரதத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல், கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவர்கள் அலலாதவர்களும் பங்கு பெற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களுக்குப் பொருத்தமான முறையில் வழியில் அதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.
மீண்டும் போர் நமக்கு வேண்டாம், நமக்குத் தேவை அமைதியான உலகம்தான் என்று தெரிவித்துள்ளார்
 

முன்னாள் அமைச்சர் வீட்டு நாய்கள் விஷம் வைத்து கொலை


 பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்கின் விலையுயர்ந்த மூன்று நாய்கள் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளன.
இது பற்றி அவரது இளைய சகோதரர் காலித் மாலிக் கூறும்போது,
சமீபத்தில்தான் இந்த நாய்கள் 36 லட்சம் ரூபாய் செலவில்  ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டன.
பஞ்சாப் மாகாணம் சியால்கோட்டிலுள்ள அண்ணனின் வீட்டில் வெள்ளிக்கிழமை அவை இறந்து கிடந்தன. அவற்றுக்கு யாரோ விஷம் கொடுத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
காவல்துறையினர் சிறப்புப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம்! லெபனானுக்கு மக்கள்.


சிரியாவில் ஜனாதிபதி அசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போரில் ஒரு லட்சத்துக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் போராளிகள் பகுதியில் ஜனாதிபதி படையினர் இரசாயன குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் குழந்தைகள், முதியோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இதை ஐ.நா. ஆய்வாளர்கள் உறுதி செய்தனர்.
இந்நிலையில் பொதுமக்களை கொன்றுகுவிக்கும் சிரியாவின் மீது போர் தொடுப்பது உறுதி என்று அமெரிக்கா கூறியுள்ளது. எந்த நேரத்திலும் தாக்க தயாராகவுள்ளதாகவும் அது கூறியுள்ளது.
இதனால் பயந்துபோன சிரியா மக்கள் குழந்தைகளையும் கையில் கிடைத்த பொருட்களையும் எடுத்துக்கொண்டும் பக்கத்து நாடான லெபனானுக்கு தப்பி ஓடுகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஐ.நா. ஆய்வாளர்களை பின் தொடர்ந்து மஸ்னா எல்லை வழியாக லெபனான் நாட்டிற்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர்.
சிரியாவிலிருந்து வரும் அகதிகள் வருவதற்கு அருகிலுள்ள நாடுகள் அனுமதி வழங்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஜேர்மன் பரிசு அமெரிக்க ரகசியங்களை அம்பலப்படுத்தியவருக்கு!


அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடெனுக்கு ஜேர்மனி நாட்டு அமைப்பின் ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சங்கமும், அணு ஆயுதங்களுக்கு எதிரான சர்வதேச வழக்குரைஞர் சங்கத்தின் ஜேர்மனி பிரிவும் சேர்ந்து ஊழலை அம்பலப்படுத்துபவர் பரிசை 1999ஆம் ஆண்டு உருவாக்கின.

இந்த ஆண்டுக்கான இப்பரிசுக்கு அமெரிக்க அரசின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோடென் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெர்லினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் இப்பரிசு வழங்கப்பட்டது.

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ள ஸ்னோடென் சார்பில் அவரது நண்பர் இப்பரிசைப் பெற்றுக் கொண்டார்.
ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக் கொள்ள முடியாத அமெரிக்காவின் கண்காணிப்புப் பணிகளை துணிச்சலாக அம்பலப்படுத்தியதற்காக ஸ்னோடெனுக்கு இப்பரிசு வழங்கப்படுவதாக விழாவில் தெரிவிக்கப்பட்டது.
இவ்விழாவில் பிரபல பத்திரிகையாளர் கிளென் கிரீன்வால்டும் கலந்து கொண்டார்.

ஸ்னோடென் அனுப்பி வைத்த அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகளின் மிகவும் ரகசியமான ஆவணங்களைக் கொண்டு பல்வேறு கட்டுரைகளை "கார்டியன்' பத்திரிகையில் எழுதியுள்ளார்.
அவர், அமெரிக்காவின் உளவு வேலைகளை அம்பலப்படுத்துவதற்கு ஸ்னோடென் துணிச்சலாக எடுத்த முயற்சிகளைப் பாராட்டிப் பேசினார்.