நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 7 செப்டம்பர், 2013

தாக்குதல்: ஜி-20 நாடுகளிடையே கருத்து முரண்பாடு

 
 
சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கான அமெரிக்காவின் திட்டம் குறித்து ஜி-20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள சர்வதேசத் தலைவர்களுக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் வியாழக்கிழமை இரவு விருந்தளித்தார்.

இந்த விருந்தின்போது, அவரும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும் சிரியா விவகாரம் குறித்துப் பேசினர்.
அவர்கள், சிரியா மீது அமெரிக்கா தன்னிச்சையான முறையில் தாக்குதல் நடத்தக் கூடாது என்று ஒபாமாவை வலியுறுத்தினர்.
சிரியா மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அது, உலகப் பொருளாதாரத்தை பாதிப்பதோடு, எண்ணெய் விலைகளையும் உயர்த்திவிடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்பதை, விருந்தில் பங்கேற்ற இத்தாலி நாட்டின் பிரதமர் என்ரிகோ ரெட்டா உறுதிப்படுத்தியுள்ளார். அவர், டுவிட்டர் இணையதளத்தில் இத்தகவலை வெளியிட்டிருந்தார்.

ரஷிய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
"சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது சர்வதேச சட்டத்துக்கான சவப்பெட்டியின் மீது அடிக்கப்பட்ட மற்றொரு ஆணியாக இருக்கும். இந்த விவகாரத்தில் ஜி20 நாடுகளின் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைப் பொறுத்தவரை, சிரியா மீதான நடவடிக்கையை ஆதரிக்கும் நாடுகளை விட, எதிர்க்கும் நாடுகளே அதிகம்'' என்றார்.

அமெரிக்கா தாக்குதல் நடத்துவதற்கு ரஷிய அதிபர் புதின் ஏற்கெனவே கடந்த வாரம் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சீனா, ஐரோப்பிய யூனியன், வாடிகன் உள்ளிட்டவை சிரியா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பதில் உறுதியுடன் உள்ளன. ஐ.நா. ஒப்புதலின்றி சிரியா மீது எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று ரஷியாவும், சீனாவும் வலியுறுத்திக் கூறியுள்ளன.
ஜி20 உச்சிமாநாட்டில், அமெரிக்காவும், பிரான்ஸூம் மட்டுமே சிரியா மீதான நடவடிக்கையை ஆதரிப்பது குறுப்பிடத்தக்கது. சிரியா மீது ராணுவ

 நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசக் கூட்டணி ஒன்றை உருவாக்க இந்த உச்சிமாநாட்டில் முயற்சியெடுக்க ஒபாமா முனைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மற்ற நாடுகளிடையே இந்த விவகாரத்தில் கருத்து வேற்றுமை

நிலவியதால் அவரது முயற்சிக்குப் பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவின் ஆதரவை நாடும் முயற்சியைக் கைவிட்டு விட்டதாக அமெரிக்கா கூறியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக