நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 28 செப்டம்பர், 2013

கடவை விபத்து! தொடருந்துக்


தொடருந்துக் கடவை ஒன்றில் வாகனம் பழுதாகிய நிலையில் வாகனத்திலிருந்து இறங்க முடியாது பெண்ணொருவர் விபத்திற்குள்ளாகி உள்ளார். நேற்று 19 மணியளவில் Saint-Emilion (Gironde)  உள்ள கிராமத்தில்  Sarlat மற்றும் Bordeaux இற்குமிடையில்  போக்குவரத்தை மேற்கொள்ளும் பிராந்தியக் கடுகதித் தொடருந்துடன் (TER), Saint-Emilion தொடருந்து

நியைத்திற்குச் சிறிது முன்னதாக Libourne இற்கும் Saint-Emilion ற்கும் இடையிலுள்ள RUSTE தொடருந்துக் கடவையிலேயே இந்தப் பெண் விபத்திற்கு உள்ளாகி உள்ளளார். இந்தத் தொடருந்து மோதியதில் இப்பெண் படுகாயங்களிற்கு உள்ளாகி உயிராபத்தான நிலையில் உள்ளார்.
  
இவரது வாகனம் பழுதுபட்டுச் சரியாகக் கடவையில் நின்று விட்டது. பல தடவைகள் வாகனத்தை இயக்க முயன்றபோதும் முடியவில்லை. அதற்குள் தொடருந்து வாகனத்துடன் மோதியது. விபத்திற்குள்ளாகி வாகனத்திற்குள் சிக்கி இருந்த இவரை முதலுதவிப்படையினர் வாகனத்தினை வெட்டியே

வெளியே கொண்டு வந்துள்ளனர். 30 வயதுடைய இந்தப் பெண் உடனடியாக உலங்குவானூர்தியில் Bordeaux வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவரது உயிர் மிகவும் ஆபத்தான நிலையிலேயே உள்ளது.
 
விபத்திற்குள்ளாகிய தொடருந்தில் 131 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பாடசாலை மாணவர்கள். பயணிகள் அனைவரும் எந்தக் காயங்களுமின்றித் தப்பி உள்ளனர். விபத்தின் பின்னர் பயணிகள் பேருந்தில் பயணத்தைத் தொடர்ந்தனர். இந்நப் பாதையின்

தொடருந்துப் போக்குவரத்து மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் நிலமட்டத் தொடருந்துக் கடவைகளின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் எனத் தெரிவித்து இரண்டு நாட்களில் இந்த விபத்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக