நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 பிப்ரவரி, 2021

ஆஸ்திரேலிய கொரோனா லாக்-டவுன் வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும்

 

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள  Holiday Inn ஹோட்டலில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது 
விக்டோரியா மாநிலம்.
காதலர்கள் தினம் மற்றும் லூனார் புத்தாண்டு நாள் வந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முழு அடைப்பினால் உணவகங்கள், பூச்செண்டு தயாரிப்பவர்கள், கலைஞர்கள், தங்குமிட வசதிகளை வழங்குபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, Circuit Breaker Support Package என 143 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவித்திட்டத்தை விக்டோரியா மாநிலத்தில் உள்ள சுமார் 50,000 வர்த்தகர்களுக்கு உதவும் விதமாக அம்மாநில அரசாங்கம் 
அறிவித்திருக்கிறது.
இந்த உதவித்திட்டத்திற்குள் சிறு வர்த்தகர்களுக்காக ஒதுக்கப்பட்ட 92 மில்லியன் டாலர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் சுமார் 2000 டாலர்களை அரசின் உதவியாக பெற முடியும் எனக் கூறப்படுகின்றது.  

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 


 

 

 

தொற்றுக் கூடிய இடங்களில் பிரான்சில் உள்ளூர் மட்டத்தில் முடக்கம்

 பிரான்சில் வைரஸ் தொற்று வீதம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் பொது முடக்கங்களை அமுல்ப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. நாடளாவிய தேசிய பொது முடக்கம் ஒன்றைத் தவிர்க்கும் ஓர் உத்தியாகவே பகுதி அளவில் கட்டுப்பாடு களை (reconfinement partiel) நடைமுறைப் படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீஸ் மற்றும் கேன் நகரங்களை உள்ள டக்கிய Alpes-Maritimes கடற்கரைப் பிராந்தியத்தில் ஏற்கனவே இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று Hauts-de-France, Ile-de-France, Grand-Est, Provence-Alpes-Côte d’Azur பிராந்தியங்களில் பத்து மாவட்டங் களில் தொற்று நிலைவரம் மிகக் கவலை யளிக்கும் விதமாக அதிகரித்துவருகின் றது. அங்கெல்லாம் பகுதி அளவில் உள்ளூர் முடக்கங்களை(confinements locaux) அறிவிக்க உத்தேசிக்கப்பட்டிருப் பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் Jean Castex,,25-02-2021,இன்று வியாழக் கிழமை மாலை நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட ரீதியான கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை வெளியிட உள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் சில ஐரோப்பிய நாடுகள் உள் நாட்டுக்குள் பிராந்திய ரீதியான பொது முடக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்ற போதிலும் பிரான்ஸில் அத்தகைய பகுதி அளவிலான முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு தவிர்த்து வந்தது. 
தற்போது வைரஸின் புதிய திரிபுகள் நாடெங்கும் அச்சுறுத்தலை 
ஏற்படுத்தி வருகின்றன.
 இதனால் தேசிய அளவில் நாட்டை மூன்றாவது முறையாக முடக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். நாடளாவிய ரீதியான முடக்கம் ஒன்றை இயன்றவரை தவிர்ப்பது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருகின்ற அரசுத் தலைமை அதற்காக மாற்று வழிகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதற்குத்
 தீர்மானித்திருக்கின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

புதன், 24 பிப்ரவரி, 2021

இங்கிலாந்தில் திருடப்பட்ட நாயை கண்டுபிடிக்க சென்ற இடத்தில் நிகழ்ந்த சம்பவம்

இங்கிலாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் திருட்டுபோன தனது நாயை கண்டுபிடிக்க சென்று திருடப்பட்ட சுமார் 70 நாய்களை கண்டுபிடித்துள்ளார்.
டோனி க்ரோனின் என்ற நபர் தனது 
வீட்டில் வளர்ந்து வந்த
 ஸ்பானியல் வகை குட்டி நாய் உட்பட 5 நாய்கள் சமீபத்தில் காணாமல் போனது.அதனை கண்டுபிடிப்பதற்காக அவர் டிடெக்ட்டிவாகவே மாறி முழு வீச்சில் தனது நாய்களை தேடியுள்ளார்.இதுகுறித்து மெட்ரோ இங்கிலாந்து 
வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டோனி க்ரோனின் தனது நாய்கள் இருக்கும் இடம் மற்றும் திருட்டுக்கு காரணமான குற்றவியல் கும்பல் பற்றிய தகவலைப் பெற்ற பின்னர், அவர் வேல்ஸ் எனும் நகரில் உள்ள கார்மார்டன்ஷையர் 
பகுதிக்குச் சென்றுள்ளார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 22 பிப்ரவரி, 2021

கொரோனாவை காரணம் காட்டி உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் அடிப்படை சுதந்திரத்தை மறுக்கின்றன

உலகநாடுகளின் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை 
எடுத்திருக்கின்றன.
 மேலும் சில அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் பதிவாகியுள்ளன என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
 அத்தோடு அண்மைக்காலமாக ஜனநாயகக்கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக உலகளாவிய ரீதியில் மனித உரிமை மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 ஜெனிவாவில் இன்று ஆரம்பமாகியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தனது உரையை நிறைவு
செய்திருக்கிறார்.
 அவரது உரையில் முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் வருமாறு: 
 மனித உரிமைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் அவை எம்மை பிறருடன் சமஅளவில் இணைக்கின்றது. மனித உரிமைகள் தான் நாம் வாழ்வதற்கான வழியாகும்.
 அதனூடாகவே தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடிவதுடன் நிலைபேறான அமைதியையும் அடைந்துகொள்ள முடியும். மனித உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதுவே அனைவருக்கும் சமத்துவமானதும் கண்ணியமானதுமான உலகத்தைக் கட்டியெழுப்புவதற்கான வழியாகும்.
 உலகளாவிய ரீதியில் காணப்படும் மனித உரிமைகள் தொடர்பான சவால்களை முழு வீச்சில் கையாள்வதற்கான ஒரு கட்டமைப்பாக மனித உரிமைகள் பேரவை விளங்குகின்றது.
 ஒரு வருடத்திற்கு முன்னர், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான செயற்திட்டமொன்றுக்கு நான் அழைப்புவிடுத்தேன்.
 கடந்த வருடம் கூட்டத்தொடருக்கான நாமனைவரும் ஒன்றிணைந்து சில நாட்களிலேயே, சிறிதளவும் ஈவிரக்கமின்றி கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் தாக்கியது.
 எனினும் அந்தத் தொற்றுநோய் குடும்பங்களுக்கு இடையிலான தொடர்பையும் மனித உரிமைகளின் முழுமையான பரிமாணத்தையும் வெளிப்படுத்தியது. அதேவேளை பிரிவினைகள், இயலாமை, சமத்துவமின்மை, மனித உரிமைகளில் தளர்வுகள் உள்ளிட்ட புதிய சவால்களையும் கொவிட் - 19 வைரஸ் பரவல் தோற்றுவித்தது.
 தொழில் இழப்பு, கடன்சுமை, வருமான வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெருமளவான குடும்பங்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தில் அடையப்பட்ட முன்னேற்றம் மீண்டும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
 பல தசாப்தகாலங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக மிகமோசமான வறுமை உலகநாடுகளைப் பாதித்திருக்கின்றது. சிறுவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாமலும், வரையறுக்கப்பட்ட வளங்களினாலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 இவற்றின் தொடர்ச்சியாக அண்மைக்காலத்தில் அவதானிக்கப்பட்ட விடயம் யாதெனின், தடுப்பூசி ஏற்றும் பணிகளில் சமத்துவமின்மையாகும். உலகலாவிய ரீதியில் சுமார் 130 நாடுகளுக்கு இன்னமும் ஒரு தடுப்புமருந்து கூடக் கிடைக்கவில்லை.
 தடுப்பூசி ஏற்றுவதில் சமத்துவம் பேணப்படுவதென்பது மனித உரிமைகளை மேலும் வலுப்படுத்தும். எனினும் தடுப்பூசி வழங்கலில் கடைப்பிடிக்கப்படும் தேசியவாதம் அதனை மறுத்துள்ளது.
 கொவிட் - 19 தடுப்பூசி என்பது உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் பொதுவானதாகவும் அனைவராலும் கொள்வனவு 
செய்யக்கூடிய வகையிலும் இருக்கவேண்டும். இந்த வைரஸ் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதுடன் சிவில் சமூக இடைவெளியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
 சில நாடுகளின் அரசாங்கங்கள் இந்த கொரோனா வைரஸ் பரவலை ஒரு காரணமாக முன்வைத்து, அடிப்படை சுதந்திரத்தை குற்றமாகப் பிரகடனப்படுத்துவதற்கும் சுயாதீன செய்தி அறிக்கையிடலைத் தடைசெய்வதற்கும் அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகளில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை
 எடுத்திருக்கின்றன.
 அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாளும் முறைமை தொடர்பில் விமர்சனங்களை 
முன்வைத்த மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் வைத்திய 
நிபுணர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அவர்கள் தொடர்ந்தும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் 
பதிவாகியுள்ளன.
 அதேபோன்று தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட வரையறைகள் தேர்தல் நடைமுறைகளை மட்டுப்படுத்துவதற்கும் எதிர்த்தரப்புக்களின் குரலைப் பலவீனப்படுத்துவதற்கும் உபயோகிக்ப்பட்டுள்ளன.
 இந்நிலையில் தற்போது அடிப்படைவாதம், அடக்குமுறைக்கு உள்ளாக்கல், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட அனைத்தும் முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும். அதேவேளை நாஸிசவாதம், 
வெள்ளையின மேலாதிக்கம், இன அடிப்படையில் தூண்டப்பட்ட தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகவும் நாம் போராட வேண்டிய 
அவசியம் இருக்கின்றது.
 மேலும் உலகளாவிய ரீதியில் சிறுபான்மையின சமூகங்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் விசேட கவனம் 
செலுத்தவேண்டும்.
 ஒரு சமூகத்தின் பல்வகைமைத்தன்மைக்குக் காரணமாக அமைவது சிறுபான்மை சமூகங்களேயாகும். எனவே அனைத்து சமூகங்களினதும் மத மற்றும் பாரம்பரிய ரீதியான தனித்துவ அடையாளங்களைப் பாதுகாப்பதற்கும் உரிமைகளுக்கு மதிப்பளிப்பதற்கும் ஏற்றவகையிலான கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.
 அண்மைக்காலமாக ஜனநாயகக்கொள்கைகள் புறக்கணிக்கப்படுதல், தன்னிச்சையான கைது நடவடிக்கைகள், சிவில் சமூக இடைவெளி வரையறுக்கப்படுதல், சிவில் சமூக அமைப்புக்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையின சமூகத்தவர் மீதான மீறல்கள் உள்ளடங்கலாக 
உலகளாவிய ரீதியில் மனித உரிமை 
மீறல்கள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. நாமனைவரும் ஒன்றிணைந்து மனித உரிமைகளைப் பாதுகாத்து ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாக இவற்றை மாற்றியமைக்க முடியும் என்று அவர் தனது உரையில் 
குறிப்பிட்டுள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>>>>>




ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

லூசியானாவில் மெட்டைரி யில் துப்பாக்கி விற்பனை கடையில் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் லூசியானாவில் மெட்டைரி என்ற பகுதியில் துப்பாக்கி விற்பனை கடை ஒன்று உள்ளது.  
இது நியூ ஆர்லியன்ஸ் நகரில் இருந்து வடமேற்கே சில மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில், கடையில் இருந்த நபர் ஒருவர் திடீரென 2 பேரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.  
இதில் பெண் உள்பட 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூட்டில் வேறு 2 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக யுனிவர்சிட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.  
அவர்களது நிலைமை சீராக உள்ளது.  துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர்கள் வாடிக்கையாளர்களாகவோ, ஊழியர்களாகவோ அல்லது தனி நபர்களாகவோ இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டில் பெண் உள்பட 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.  கொல்லப்பட்ட 3வது நபர் துப்பாக்கியால் சுட்டவர் என்றும் கூறப்படுகிறது.  இதுபற்றி நியூ ஆர்லியன்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


சனி, 20 பிப்ரவரி, 2021

தடுப்பில் ஆஸ்திரேலியவில் உள்ள அனைத்து அகதிகளும் விடுவிக்கப்பட வேண்டும்

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்று கடல் கடந்த தடுப்பில் உள்ளிட்ட பல தடுப்புகளில் சிறைப்படுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் அகதியான தனுஷ் செல்வராசாவுக்கு சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியுலகத்தைக் காணுவதற்கான சுதந்திரம் 
கிடைத்திருக்கிறது. 
“இந்த சுதந்திரம் அற்புதமாக உள்ளது. ஆனால் எனது வாழ்க்கையின் எட்டு ஆண்டுக் காலத்தை நான் இழந்திருக்கிறேன்,” என செல்வராசா கூறியுள்ளார். 
அதே சமயம், சுமார் 100க்கும் மேற்பட்ட அகதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்து சிறைவைக்கப்பட்டுள்ளனர். 
தனுஷ் செல்வராசாவைப் பொறுத்தமட்டில், மனுஸ்தீவில் செயல்படும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் சுமார் 6 ஆண்டுகளை அவர் கழித்திருக்கிறார். பின்னர், மருத்துவ 
சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் ஹோட்டலில் சுமார் ஒன்றரை ஆண்டுக்காலம் சிறைப்படுத்தப்பட்டிருந்தார். 
“நான் விடுதலையாகி விட்டேன் என எனது தாயிடம் சொல்லியதும் அவர் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்,” 
என்கிறார் செல்வராசா. 
தற்போது 31 வயதாகும் செல்வராசாவுக்கு 6 மாதக் கால தற்காலிக விசா வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வேலையையும் தங்குவதற்கான இடத்தையும் அவர் தேடி வருகிறார். இது ஒருபுறமிருக்க அவரது நினைவுகள் இன்னும் விடுவிக்கப்படாமல் தடுப்பில் உள்ளவர்கள் குறித்து கவலைக் கொண்டுள்ளது. 
“அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்,” என்பதே செல்வராசாவின் எண்ணமாக இருக்கிறது.  அகதிகள் நல வழக்கறிஞர்கள் சொல்லும் கணக்குப்படி, மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகளில் 124 பேர் இன்னும் ஆஸ்திரேலிய தடுப்பில் உள்ளனர். 
“பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் மட்டும் தடுப்பில் இருப்பது எங்களை பெருங்கவலைக் கொள்ள செய்கிறது,” எனத் தெரிவித்துள்ளார் இஸ்மாயில் ஹூசைன் 
எனும் அகதி. 
நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 18 பிப்ரவரி, 2021

அமெரிக்காவில் நாய்க்கு 100 கோடி ரூபா சொத்தை எழுதி வைத்த உரிமையாளர்

தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய்க்கு எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் 
உரிமையாளர் ஒருவர்.
நாய் உரிமையாளர் கடந்த ஆண்டே இறந்துவிட்டாலும், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்பட்டு வருவதால், 100 கோடி ரூபாய்க்கு சொந்தமான நாய் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.அமெரிக்காவின்
 டென்னிசிஸ் பகுதியில்
நாஷ்வில்லே பகுதியைச் சேர்ந்தவர் பில் டோர்ரிஸ் (84). பில் டோர்ரிஸ் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால், தனது தொழிலில் வெற்றிகரமானவராகத் திகழ்ந்தார். சுமார் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புக்கு அளவுக்கு
சொத்துள்ள பில் டோரிஸ் யாரையும் தத்தெடுத்து வளர்க்கவில்லை. அவருக்கு நண்பன், சொந்தம் என்று சொல்லிக்கொள்ள இருந்தது லுலு
 எனும் Border Collie இன
நாய் மட்டுமே.பில் டோர்ரிஸ் எங்கு சென்றாலும், லுலுவுடன் செல்வது தான் வழக்கம். ஒரு நிமிடம் கூட லுலுவை விட்டு அவர் பிரிந்திருக்கமாட்டார். அந்த
அளவுக்கு லுலுவை நேசித்தார் பில் டோர்ரிஸ்.முதுமையால்
 வாடிய பில் டோர்ரிஸ், தனது இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்ததும் தான் நேசித்த லுலு, தன் காலத்துக்கு பிறகு துன்பப் படக்கூடாது என்பதற்காக 5 மில்லியன் மதிப்புள்ள
சொத்துக்கள் (97,13,98,500.00 இலங்கை ரூபா) அனைத்தையும் லுலு மீது உயில் எழுதிவைத்தார். தான் எழுதிவைத்த உயிலில், “இந்த உயில் லுலுவின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கானது.எனது சொத்து அனைத்தையும் லுலு
பெயருக்கே எழுதி வைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.தற்போது, லுலுவைப் பார்த்துக்கொள்ள அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அந்த அறக்கட்டளை லுலுவுக்குத் தேவையானதை பில் டோர்ரிஸின் சொத்துக்கள் மூலம் செய்து
வருகிறது.பில் டோர்ரிஸின் நிலம் மற்றும் பண்ணை வீட்டின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்று அறக்கட்டளை மூலம் மதிப்பிடப்பட்டு வருகிறது. அந்தப் பணி
முடிந்ததும் லுலுவின் பெயரில் உள்ள சொத்து மதிப்பு இன்னும்
 அதிகமாகும் என்றும்
கூறப்படுகிறது. மேலும், பில் டோர்ரிஸ் எங்கெங்கு முதலீடு செய்துள்ளார் என்றும் தேடி வருகின்றனர்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஏமன் நாட்டில் உள்நாட்டு போரால் பசியால் வாடும் சிறார்கள்

ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டு போர் காரணமாக, அங்குள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட உணவுக்கு அல்லாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. சவுதி 
அரேபியா தலைமையிலான அரசு ஏமன் நாட்டு அரசு படைகளுக்கு ஆதரவாக இருந்து வரும் நிலையில், அவர்களுக்கும் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடைபெற்று வருகிறது. 
இந்த போரினால் ஏமன் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்துவிட்ட நிலையில், கொரோனா 
காரணமாக மேலும் கடுமையாக பொருளாதார சீரழிவு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் ஒரு வேலை உணவு கூட சாப்பிட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 13 வயது சிறுமி
 ஒருவர், வெறும் 11 கிலோ எடையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரை காண வரும் நபர்கள் பலரும் நன்கொடைகள் கொடுத்து வரும் நிலையில், அந்த சிறுமியின் தந்தை 
உள்நாட்டுப் போரில் இறந்து போயுள்ளார். இதன்பின்னரே, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வெறும் தண்ணீரைக் குடித்து
 பசியாற்றி வாழ்ந்து வந்துள்ளனர். இதனைப்போன்று ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், 5 இலட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஐ.நா சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

திங்கள், 15 பிப்ரவரி, 2021

இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகிறார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.
  இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து
 திருமணம் செய்தார்.
  ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் 
வசித்து வருகிறார்.
ஹாரிக்கும் அவரது சகோதரர் வில்லியமுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. தற்போது ஹாரி - மேகன் மெர்கல் தம்பதியினர் தனியாக வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
ஹாரி தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2-வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்த செய்தியை ஹாரியின் செய்திதொடர்பாளர் காதலர் தினமான நேற்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். ஒரு மரத்தின் கீழ் புன்னகையுடன் நிற்கிறார்கள். அதில் மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.
இதை உறுதிபடுத்திய செய்தி தொடர்பாளர் ஹாரியின் முதல் மகன் ஆர்க்கி பிறக்கப்போகும் குழந்தைக்கு மூத்த சகோதரனாக இருக்கப் போகிறார். 2-வது குழந்தையை எதிர்பார்ப்பதில் ஹாரி தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மேகன் மெர்கலுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக ஒரு பிரபல பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஹாரி தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தை ஆகப்போவது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து இளவரசர் ஹாரியின் முழு குடும்பமும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது. ‘ஹாரி தம்பதிக்கு வாழ்த்துகள்’ என்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர்
 தெரிவித்தார்.
  இங்கிலாந்து மகாராணி 2-வது எலிசபெத்தின் 2-வது பேரன் ஹாரி, தொலைக்காட்சி நடிகையான மேகன் மெர்கலை காதலித்து 
திருமணம் செய்தார்.
  ஹாரி கடந்த வருடம் மார்ச் மாதம் அரச வாழ்க்கையை விட்டு விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தனது மனைவியுடன் இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறினார். தற்போது இவர் தனது மனைவி மேகன் மெர்கலுடன் கலிபோர்னியாவில் 
வசித்து வருகிறார்.
ஹாரிக்கும் அவரது சகோதரர் வில்லியமுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்றதாக கூறப்பட்டது. தற்போது ஹாரி - மேகன் மெர்கல் தம்பதியினர் தனியாக வணிக நிறுவனம் நடத்தி வருகிறார்கள்.
ஹாரி தம்பதியருக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் 2-வது குழந்தைக்கு தாயாக இருக்கிறார். இந்த செய்தியை ஹாரியின் செய்திதொடர்பாளர் காதலர் தி
னமான 14.02-2021,அன்று  தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹாரி தம்பதியினர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். ஒரு மரத்தின் கீழ் புன்னகையுடன் நிற்கிறார்கள். அதில் மேகன் மெர்கல் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.
இதை உறுதிபடுத்திய செய்தி தொடர்பாளர் ஹாரியின் முதல் மகன் ஆர்க்கி பிறக்கப்போகும் குழந்தைக்கு மூத்த சகோதரனாக இருக்கப் போகிறார். 2-வது குழந்தையை எதிர்பார்ப்பதில் ஹாரி தம்பதியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மேகன் மெர்கலுக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக ஒரு பிரபல பத்திரிகையில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் ஹாரி தற்போது 2-வது குழந்தைக்கு தந்தை ஆகப்போவது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து இளவரசர் ஹாரியின் முழு குடும்பமும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது. ‘ஹாரி தம்பதிக்கு வாழ்த்துகள்’ என்று லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி தொடர்பாளர் 
தெரிவித்தார்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசிகள் 1.5 கோடி பேருக்கு போடப்பட்டு உள்ளன

இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசிகள் 1.5 கோடி பேருக்கு  போடப்பட்டு உள்ளன என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 
கூறியுள்ளார்..
இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்து வந்தது.  இதனால் அடுத்த கட்ட ஊரடங்குக்கு அந்நாடு சென்றுள்ளது.  இதனை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 8ந்தேதி தடுப்பூசி போடும் பணிகள் நடந்தன.
இதன்படி, உலகிலேயே முதல் நபராக மார்கரெட் கீனன் (90), என்ற மூதாட்டிக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டது.  தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டன.
இதுதொடர்பாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இதுவரை 1.5 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.  நாடு முழுவதற்கும் ஆன சாதனையிது. 
 விஞ்ஞானிகள், தொழிற்சாலை பணியாளர்கள், வினியோக பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இந்த சாதனையை அடைய உதவிய அனைவருக்கும் எனது நன்றிகள் 
என தெரிவித்துள்ளார்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


விசா வாங்கித்தருவதாக ஆஸ்திரேலிய கூறி ஏமாற்றிய சீனப்பெண் சிறையில்

  ஆஸ்திரேலியாவில் போலி புலம்பெயர்வு முகவராக அறியப்பட்ட 38 வயது சீன பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்வு தொடர்பான பல்வேறு மோசடியில் ஈடுபட்ட இப்பெண், பல்வேறு நபர்களிடமிருந்து சுமார் 3 லட்சம் டாலர்கள் பெற்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

ஆஸ்திரேலியாவில் பதிவுச் செய்யப்பட்ட புலம்பெயர்வு முகவரைப் போன்ற வெளியில் காட்டிக்கொண்ட இப்பெண், விண்ணப்பிக்கப்படாத விசா விண்ணப்பங்களுக்கு பலரிடம் கட்டணம் பெற்றிருக்கின்றார். இப்பெண் மோசடியான செயல்பாட்டினால் பலர் ஆஸ்திரேலியாவுக்குள்ளேயே நுழைய முடியாத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. 

இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் குறைவான ஆங்கிலத் திறன் மற்றும் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டம் குறித்து போதிய புரிதல் இல்லாதவர்கள் இருந்திருக்கின்றனர் என விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு, 30 வெளிநாட்டவர்களின் கடவுச்சீட்டு இப்பெண்ணின் வசமிருந்து கைப்பற்றப்பட்டது முதல் இவர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். ஏனெனில், ஆஸ்திரேலிய சட்டத்தின் படி மற்றொருவரின் கடவுச்சீட்டைக் கொண்டிருப்பது குற்றமாக கருதப்படுகின்றது. 

அதன் தொடர்ச்சியாக, கடந்த 2014ம் ஆண்டு  போலி புலம்பெயர்வு முகவராக இச்சீனப்பெண் செயல்படுவதாக சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய எல்லைப்படை விசாரணை நடத்தியிருக்கிறது. 

அதைத் தொடர்ந்து அப்பெண்ணின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ஆயிரக்கணக்கிலான ஆவணங்கள், பல தொலைப்பேசிகள், கணினிகள், 30 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பறிமுதல் 
செய்யப்பட்டது. 
போலியான உள்துறை அமைச்சகத்தின் ஆவணங்களைக் கொண்டு குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்களுக்கு விசா வழங்கப்பட்டதாகக் கூறி ஏமாற்றியது தொடர்பான ஆவணங்களும் இதில்
 சிக்கியிருந்தன. 
இது தொடர்பான, வழக்கிலேயே இப்பெண்ணுக்கு ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தமட்டில் அதிகாரப்பூர்வ புலம்பெயர்வுக்கான முகவராக செயல்பட Migration Agents Registration Authority தரப்பிடம் பதிவுச்செய்வது 
கட்டாயமாகும். 

நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 13 பிப்ரவரி, 2021

இணைப்பு விசாக்கள் ஆஸ்திரேலியவில் 12 ஆயிரம் அகதிகள்

ஆஸ்திரேலிய கடந்த ஆண்டு நவம்பர் மாத கணக்குப்படி, ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் சென்ற சுமார் 12,000 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு குறுகிய கால இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 
இந்த இணைப்பு விசா என்பது தற்காலிகமானது என்பதால், குறிப்பிட்ட அகதியின் பாதுகாப்பு விசா பரிசீலிக்கும்படி வரும் வரையில் 6 மாதங்களுக்கு ஒருமுறை இணைப்பு விசா புதுப்பிக்க வேண்டிய சூழல் நிலவுவது அகதிகளை பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகக் 
கூறப்படுகின்றது. 
எத்தோப்பிய அகதியான Betelhem Tebubu ஆஸ்திரேலியாவில் இணைப்பு விசாவுடன் கடந்த நான்கு ஆண்டுகளாக வசித்து வருகிறார். ஆனால் ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் அவரது இணைப்பு விசாவை புதுப்பிக்க
 வேண்டியுள்ளது. 
கொரோனா பெருந்தொற்று சூழலுக்கு முன்பு, விசாவை புதுப்பிக்கச் சென்ற Betelhem Tebubu-வை 8 மணிநேரம் சிறைப்படுத்தியிருக்கின்றார். மீண்டும் விசா ஆவணங்கள் புதுப்பிக்கப்பட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். 
“உங்கள் உணவை, தண்ணீரை, மருந்துகளை கொண்டு 
வாருங்கள். ஏனெனில் நாள் முழுவதும் நீங்கள் தடுத்து 
வைக்கப்படுவீர்கள்,” என ஒவ்வொரு 
முறை விசா புதுப்பிக்கும் போது குடிவரவுத்துறை அதிகாரிகள் தெரிவிப்பதாக Betelhem குறிப்பிட்டிருக்கிறார். 
“குடிவரவு அலுவலகத்தில் 8 மணிநேரம் நாங்கள் பூட்டி வைக்கப்பட்டோம். கழிவறைக்கு செல்ல வேண்டுமென்றால் கூட பாதுகாப்பு அதிகாரிகளுடன் தான் செல்ல வேண்டும்,” என்கிறார் Betelhem.
சொந்த நாடான எத்தோப்பியாவில் நிலவிய அரசியல் நிலையற்றத்தன்மை காரணமாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த அவர், நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் சுமார் ஓராண்டு காலம் இருந்திருக்கிறார். 
கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குள் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், பிரிஸ்பேன் குடிவரவு இடைத்தங்கல் முகாமில் இரண்டு ஆண்டுகள் கழித்திருக்கிறார். பின்னர், இறுதிப் புறப்பாடு இணைப்பு விசா எனும் 6 மாத தற்காலிக விசா வழங்கப்பட்டு அவர் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 
இவ்விசாவின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் வாழவும் பணியாற்றவும் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இது நிரந்தரமான அனுமதியல்ல. 
இந்த விசாவே அண்மையில் ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களிலிருந்து சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட 60 க்கும்  மேற்பட்ட அகதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
“நாங்கள் விடுவிக்கப்பட்டு விட்டோம். ஆனால் இணைப்பு விசா எனும் மிகப்பெரிய தடுப்பில் சிக்கியிருக்கிறோம். நான் சுதந்திரமாக நடக்கலாம், ஆனால் எனது சிந்தனை சுதந்திரமானதாக இல்லை,” என Betelhem கூறியிருப்பது இவ்விசாவின் தன்மையை சுட்டிக்காட்டுகின்றது. 
அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் இவ்வாறான
 தற்காலிக இணைப்பு விசாக்களில் உள்ள அகதிகளின் எதிர்காலம் என்னவாகும் என்பது பெருங்கேள்வியைக் கொண்ட குழப்பமாகவே 
உள்ளது. அதே சமயம், சட்டவிரோதமான படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்குள் 
வருபவர்கள் எவரும் நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற கொள்கையை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து முன்வைத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி திடீரென லண்டன் நோக்கிப் பயணமானார்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி திடீரென்று லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளார்.லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்னர் விமான நிலையத்தில் படம் எடுத்து தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.ஒருவருட கற்கை நெறி
 ஒன்றினைப் பூர்த்தி செய்வதற்காக அவர் லண்டனுக்குச் செல்வதாக கூறியுள்ளார்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வைத்தியர் தங்கமுத்து
 சத்தியமூர்த்தி முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரின்போது, மக்களுக்காக தொடர்ந்தும் குண்டுமழை 
நடுவில் பணியாற்றியிருந்தமை தெரிந்ததே.மேலும், இலங்கையில் ஊழலற்ற அரச அதிகாரி என்ற விருதையும் கடந்த ஆண்டு இவர் பெற்றிருந்தார்.கொரோனா காலத்தில்
 யாழ் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரி சிகிச்சைமையமாக மாற்றப்பட்டதும் அங்கு அனுமதிகப்பட்டிருந்த நோயாளர்களுடன் மிகவும் கரிசனையாக பழகியிருந்தமையும்
 குறிப்பிடத்தக்கதாகும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>