நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒரே நாளில் கொரோனாவினால் இத்தாலியில் மடிந்த 919 பேர் பெரும் சோகம்

கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தாக்கத்தினால் 28.03.20.ஒரே நாளில் இத்தாலியில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவினால் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது 
பதிவாகியுள்ளது. கொரோனா தாக்கம் தலைவிரித்தாடும் இன்னொரு நாடான ஸ்பெயினில் நேற்றும் 700 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின.
உலகளவில் இதுவரை கொரொனா 
பாதிப்பினால் 27,250 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 594,377 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் உளவளவில் 3,177 பேர் உயிரிழந்தனர்.இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 9,134 ஆக உயர்ந்துள்ளதுள்ளது. 86,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 28.03.20. 769 புதிய உயிரிழப்புகள் பதிவாகின. நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,138 ஆக 
உயர்ந்துள்ளது.
ஜோர்டான்:கொரோனாவினால் முதல் உயிரிழப்பை ஜோர்டான் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 235ஆக உள்ளது.மார்ச் 21ஆம் திகதி தனது வான், கடல் எல்லைகளை ஜோர்டான் மூடியது. இதன் பின்னர், மறுஅறிவித்தல் வரை நாட்டை முடக்கியுள்ளது. இதன்பின்னர் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 80 வயதான பெண் மணியொருவர் உயிரிழந்துள்ளார். இவர் மருத்துவ தேவைகளை கொண்ட ஒருவர் என்றும் ஜோர்டான் 
தெரிவித்துள்ளது.
அமெரிக்கா:அடுத்த 100 நாட்களில் 100,000 வென்டிலேட்டர்களை உருவாக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தமது நாட்டு தேவைக்கும் அதிகமாக இது இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நாடுகளிற்கு இவற்றை 
வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்க போதிய வெண்டிலெட்டர்கள் இல்லையென மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியதையடுத்து, ட்ரம்பின் இந்த 
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் கொரோனாவினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா அமைந்துள்ளது. அங்கு, 102,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அங்கு 312 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,607 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸை 
எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவிற்கு இவ்வளவு வென்டிலேட்டர்கள் தேவையில்லை, பின்னர் பிற நாடுகளுக்கு உதவ ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கூறினார்.
பிரான்சில் நேற்று 299 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1995 ஆக உயர்ந்தது. ஈரானில் நேற்று 144 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,378 ஆக உயர்ந்தது. இங்கிலாந்தில் நேற்று 181 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 759 ஆக உயர்ந்தது. நெதர்லாந்தில் நேற்று 112 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 546 ஆக உயர்ந்தது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



சர்வதேச கொரோனா வைரஸ்: பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்தை தாண்டியுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்தை கடந்துள்ளது.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா வைரஸ் தகவல் மையம் வெளியிட்டுள்ள
 தரவுகளின்படி, இந்திய நேரப்படி சனிக்கிழமை 03.00 மணி வரை உலகம் முழுவதும் 6,02,262 பேருக்கு கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானது உறுதியாகியுள்ளது.அவர்களில் 27,889 பேர் உயிரிழந்துள்ளனர்; 1,32,688 பேர்
 குணமடைந்துள்ளனர்.
ஸ்பெயினில் கொரோனா வைரஸால் ஒரே இரவில் 832 பேர் இறந்துள்ளனர்.தற்போது அந்த நாடு முழுவதும் இறந்தவர்கள் எண்ணிக்கை 5,690. இத்தாலிக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் இறந்தவர்கள் அதிகம் உள்ள நாடு ஸ்பெயின்.84,498 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்ட இத்தாலியில் 9,134 பேர் இறந்துள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழத்தில் தரவுகள் 
தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


சனி, 28 மார்ச், 2020

பிரபல மருத்துவ நிபுணர் லண்டனில் கொரோனாவால் மரணம்.

கடின உழைப்பாளி மற்றும் அர்ப்பணிப்புள்ளவர் என புகழப்படும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா வைரஸால் இறந்துவிட்டார் என்று பிரித்தானியா உறுப்பு மாற்று சிகிச்சை சங்கம் தெரிவித்துள்ளது.
63 வயதான டாக்டர் ஆதில் எல் தயார் சவுதி 
அரேபியா, சூடான் மற்றும் தெற்கு 
லண்டன் உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் பணியாற்றியவர்.டாக்டர் எல் தயார் மார்ச் மாதத்தில் கொரோனா அறிகுறிகளை காட்டிய பின்னர் சுயமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தார், மார்ச் 20 அன்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மார்ச் 25 அன்று மேற்கு லண்டனின் இஸ்லேவொர்த்தில் உள்ள வெஸ்ட் மிடில்செக்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் ஆதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.அவருக்கு
 அஞ்சலி செலுத்தியவர்களில் சூடானுக்கான பிரிட்டிஷ் தூதரும் ஒருவர்.கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதியான பின்னர் ஆதில் எல் தயார் தனது இறுதி நாட்களை 
தீவிர சிகிச்சையில் கழித்தார் என்று அவரது உறவினர் டாக்டர் ஹிஷாம் எல் கிதிர் கூறினார்.இந்த நோய் பயங்கரமானது, மேலும் எதிர்வரும் வாரங்களில் பல குடும்பங்களுக்கு இழப்பை ஏற்படுத்தப் போகிறது,அதில் எங்கள் குடும்பத்தின் முக்கிய நபராக இருந்தவர், 
அவர் பலரால் மதிக்கப்படுபவர்.
அவர் இறந்ததிலிருந்து அவரது சகாக்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான இரங்கல் குறுஞ்செய்திகள் எனக்கு வந்துள்ளன என ஹிஷாம் எல் கிதிர் கூறினார்.டாக்டர் எல் தயார் 1982 இல் கார்ட்டூம் பல்கலைக்கழகத்தில் பட்டம் 
பெற்றார், 1996 இல் இங்கிலாந்து சென்றார், பின்னர் அவர் மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்தார்.2007 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்குச் செல்வதற்கு முன்பு, டூட்டிங்கின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார், சவுதியில் அவர் ஜெட்டாவில் உள்ள கிங் ஃபஹத் பொது மருத்துவமனையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வியாழன், 26 மார்ச், 2020

இங்கிலாந்தில் கொரோனாவினால் பரிதாபமாகப் பலியான 21 வயது இளம் யுவதி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 21 வயது பெண் ஒருவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷையரின் ஹை வைகோம்பைச் சேர்ந்த சோலி மிடில்டன் (21) என்ற யுவதி கடந்த வாரம் இறந்தார்.அவரது அத்தை எமிலி மிஸ்திரி வெளியிட்ட பேஸ்புக் பதிவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த உங்களால் இயன்றதை செய்யும்படி மற்றவர்களையும் கேட்டுக் கொள்ளும்படி அவர் மக்களிடம்
 கோரிக்கை விடுத்தார்.
கொரொனா வைரஸ் முதியவர்களையே தாக்குமென நம்பும் பல இளையவர்கள் அவதானமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், அனைவரும் எச்சரிக்கையை கடைப்பிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
வைரஸ் தொற்று நிலவரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ளும்படியும் தெரிவித்துள்ளார்.
ஒரு தனிப்பட்ட அனுபவத்திலிருந்து பேசுகிறேன். இந்த வைரஸ் எனது 21 வயது மருமகளின் உயிரைப் பறித்தது. அவளுக்கு சுகாதார பிரச்சனைகள் எதுவும் இல்லை. இந்த வைரஸின் உண்மை நம் கண்களுக்கு முன்புதான் வெளிப்படுகிறது. தயவுசெய்து, அரசாங்க
 வழிகாட்டுதல்களை பின்பற்றவும். உங்களை திடப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களைப் பாதுகாக்கவும். வைரஸ் பரவவில்லை, மக்கள் வைரஸை பரப்புகிறார்கள் எனவும் அவர் 
குற்றம் சாட்டியுள்ளார்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


உலகமே வியக்கும் வன்னம் கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்-

பிரித்தானியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காணப்படும் இன் நிலையில், பல ஆயிரம் தமிழ் மருத்துவர்கள் களத்தில் நின்று சேவை புரிந்து வருகிறார்கள். அதிலும் பொதுவாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பல தமிழ் மருத்துவர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட நோயாளி
களுக்கு சேவை புரிந்து வருவது பாராட்ட தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவை பொறுத்தவரை தமிழர்கள் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இது அன் நாட்டு சனத்தொகையில் 1% சதவிகிதத்தை கூட எட்டாது. ஆனால் பிரிட்டனில் பல நூறு 
தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக 2ம் தலை முறை, இளைய மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே களத்தில் முன்னணியில் நின்று செயப்பட்டு வருவது. தமிழர்களுக்கு 
மெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. இன்றைய நிலையில், மருத்துவர்களையும் சுகாதார 
சேவைப் பிரிவினரையுமே மக்கள் பெரும் ஹீரோக்களாக பார்கிறார்கள். போர் காலங்களில் எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் 
ராணுவ வீரர்கள் போல.
இன்றைய வீரர்களாக மருத்துவர்களே உள்ளார்கள்..

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பாரிய நிலநடுக்கம் குரில் தீவுகளில் சனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வாபஸ்

பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குரில் தீவுகளில் இன்று காலை 7.5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.ரஷ்யாவுக்கு
 சொந்தமான இந்த குரில் தீவுகளில் கடலின் அடியில் 35 கிலோமீற்றர் ஆழத்தில் குறித்த நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.இதனை அடுத்து, உடனடியாக 
குரில் தீவுகள் மற்றும் பசுபிக் பெருங்கடலில்
 அமைந்துள்ள ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் தொடர்ந்து நிலநடுக்கம் பதிவாகாத நிலையில் சுனாமி எச்சரிக்கை மீள பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 24 மார்ச், 2020

நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன்

நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்து உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

கொரோனா வைரஸ் நீரிழிவு நோயாளிகளை அதிகம் தாக்குவது ஏன்?

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து அவன் சந்தித்துவரும் முக்கியமான சவால்களில் ஒன்று வைரஸ்கள் மூலம் பரவும் உயிர்கொல்லி நோய்கள்.

தற்போது மக்களை மிரட்டும் கொரோனா வைரஸ் நம்மைத் தாக்கிவிடாமல் தடுக்க ஒரு நாளில் பலமுறை கை கழுவுவதுதான் மிகச்சிறந்த வழி என்கிறது மருத்துவ உலகம்.

இருப்பினும் நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள், ரத்தக்கொதிப்பு, இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த நோய்கள் கொண்டவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ள முதியவர்கள் போன்றவர்களை இந்த வைரஸ் அதிகம் தாக்கும் ஆபத்துஉள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவர்களில் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் உள்ள நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பு மிகவும் அதிகம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் அதற்கு என்ன காரணம் என்பது குறித்த தெளிவான புரிதல் இதுவரை இல்லாமல் இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இறந்துபோன மற்றும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீதான ஒரு சமீபத்திய ஒரு ஆய்வில் நீரிழிவு நோய் உள்ளவர்களை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குவது ஏன் என்பதற்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளதாக லெய் பாங் தலைமையிலான சுவிட்சர்லாந்து நாட்டு ஆய்வாளர்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த நோயாளிகளில் பலருக்கு நீரிழிவு மற்றும் பெருமூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் (Cerebrovascular diseases) இருந்தது கண்டறியப்பட்டது.

சீனாவில் நடந்த மற்றொரு ஆய்வில், கொரோனா வைரஸ் தாக்கிய 173 பேர்களில் சுமார் 41 நோயாளிகளுக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், சுமார் 28 நோயாளிகளுக்கு நீரழிவு நோய் இருந்தது என்றும், 10 நோயாளி களுக்கு இதய நோய் இருந்தது என்றும், 4 நோயாளிகளுக்கு பெரு மூளை ரத்தக்குழாய் சார்ந்த நோய்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இறுதியாக, மூன்றாவது ஆய்வில், இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுமார் 140 நோயாளிகளில், 42 பேருக்கு ரத்தக்கொதிப்பு இருந்ததும், 17 பேருக்கு நீரிழிவு நோய் இருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்த மூன்று ஆய்வுகளிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் ஒரு வகை மருந்துகளை (angiotensin-converting enzyme (ACE) inhibitors) எடுத்துக்கொண்டார்கள் என்பது கண்டறியப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக, மனிதர்களைத் தாக்கும் கொரோனா வைரஸ்கள் ஒருவகையான என்சைம் (angiotensin-converting enzyme 2 (ACE2) மூலமாகவே மனித உயிரணுக்களைத் தாக்கி அவற்றினுள்ளே நுழைகின்றன என்றும், இந்த என்சைமை நுரையீரல், குடல், சிறுநீரகம் மற்றும் ரத்த நாளங்கள் ஆகிய அனைத்து உடல் பாகங்களும் உற்பத்தி செய்கின்றன என்றும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

முக்கியமாக, இந்த என்சைம் செயல்பாட்டை தடை செய்யும் மருந்தை உட்கொள்ளும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகளின் உடலில் இந்த என்சைம் உற்பத்தியானது மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதுபோல ரத்தக் கொதிப்பு நோயாளிகள் உட்கொள்ளும் சில மருந்துகள் கொரோனா வைரஸ் மனித உயிரணுக்களுக்கு உள்ளே நுழைய உதவும் என்சைம் உற்பத்தியை அதிகரிக்கும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக மொத்தத்தில், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் அதிகம் தாக்குகின்றன என்கிறது இந்த ஆய்வு. இது தவிர, நீரிழிவு நோயாளிகளின் உடலில் உள்ள (ACE2) மரபணுவும் மாற்றங்களுக்கு உள்ளாகி என்சைம் (ACE2) உற்பத்தி அதிகமாகலாம் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

அதனால், நீரிழிவு நோயாளிகளை கொரோனா வைரஸ் தாக்குவதை தடுக்க வேண்டுமானால், நீரிழிவு நோயாளிகள் தாங்கள் வழக்கமாக எடுக்கும் மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து வேறு மருந்துகளை எடுத்துக்கொள்ளலாமா என்று மருத்துவர்களை ஆலோசித்து முடிவு செய்தால் கொரோனா வைரஸ் தாக்குதலை அவர்களால் தவிர்க்க முடியும் என்று இந்த ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.


சனி, 21 மார்ச், 2020

சீனாவை அடுத்து மனிதர்களை கொத்துக் கொத்தாக இழக்கும் இத்தாலி.

கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சீனாவை அடுத்து தற்போது அதிக உயிர்பலி வாங்கியிருப்பது இத்தாலியில் தான்.நேற்றைய தினத்தில் தாய் ஒருவர் வேண்டுகோள் விடுத்த காட்சி
 அனைவரையும் நெகிழ வைத்தது
 நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள் என்று கூறி விழிப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தார்.இந்நிலையில், கொரோனா 
வைரஸ் எப்படி எளிமையாக ஒருவரிடமிருந்து 
மற்றொருவருக்கு பரவுகிறது 

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 20 மார்ச், 2020

கொரோனாவுக்கான தடுப்பூசி அமெரிக்கப் பெண்ணிற்கு சோதனை முயற்சி

அமெரிக்காவில் தன்னார்வலப் பெண் ஒருவருக்கு முதன் முறையாக கொரோனா தடுப்பூசி சோதனை செய்யப்பட்டுள்ளது. 
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 192 நாடுகளில் தடம் பதித்துள்ளது. தற்போது சீனாவில் 
கட்டுபாட்டில் உள்ள இந்த வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவமாடி வருகிறது.
கொரோனா வைரஸ்க்கு இதுவரை எந்த
 மருந்து மற்றும் தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கவில்லை. வல்லரசு நாடுகள் அனைத்தும் கொரோனவைத் தடுக்கும் 
ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் கைசர் பெர்மனெட் வாஷிங்டன் ஆராய்ச்சி நிறுவனம் முதல்கட்டமாக பெண் தன்னார்வலருக்கு கையில் தடுப்பூசி ஒன்றை சோதனை முயற்சியாக போட்டுள்ளது.  இந்த சோதனையின் முடிவுக்காக 
ஆராய்ச்சியாளர்கள் காத்து உள்ளனர்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தற்காலிக உதவி திட்டத்தை அறிவித்தது

கியூபெக் மாகாண அரசாங்கம் COVID-19 தாக்கம் காரணமாக வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களுக்கு மற்றும் வேலை இல்லாதவர்களுக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வாரத்திற்கு 573 டாலர் வரை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த திட்டம் யார் யாருக்கு பொருந்தும் என்று பார்ப் போமானால் கொரோனா வைரஸ் 
தாக்கம் உள்ளவர்கள், வைரஸின் அறிகுறி உள்ளவர்கள்,கொரோனா வைரஸ் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டவர்கள், வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு இந்த திட்டம் மூலம் உதவித் தொகை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தொழிலாளர்களுக்கான தற்காலிக உதவி திட்டம் (PATT or Programme d’aide temporaire aux travailleurs) என்று அழைக்கப்படும். இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த 150 மில்லின் நிதி ஒதுக்குடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


வெள்ளி, 13 மார்ச், 2020

பிரித்தானியா கொரோனாவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசின் திட்டம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள 
நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடை செய்வது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்யப் பணிப்பது போன்றவை இன்று அறிவிக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குளிருடன் இணைந்த
 அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ்
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 460 பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


திங்கள், 9 மார்ச், 2020

தமிழ் குடும்பத்திற்கு பிரித்தானியாவில் கொரோனாஅவர்களது வீட்டிற்கு சீல்

பிரித்தானியாவின் சவுத்ஹாலில் தமிழ் குடும்பமொன்று கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களது வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது.நேற்று இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.ரக்ஸி ஓட்டுனர் ஒருவரின் குடும்பமே கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளது. ரக்ஸி ஓட்டுனர் தொற்றி்கு இலக்காகி, குடும்பமும் பாதிக்கப்பட்டுள்ளது.அந்த குடும்பத்தின் பிள்ளையொன்று 
பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்றிற்கு இலக்காகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடும்பத்தின் உறுப்பினர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், தொற்றிற்கு இலக்காகியிருந்தது 
தெரிய வந்தது.
தற்போது அந்த வீடு சீல் வைக்கப்பட்டு, அந்த குடும்பம் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.லண்டன் நகரத்தில் மட்டும் நேற்று 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டது
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 4 மார்ச், 2020

தமிழரின் பிரபல நிறுவன வலையமைப்பை 76 பில்லியன் ரூபாவிற்கு விற்பனை

இலங்கைத் தமிழரிற்கு சொந்தமான லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக
 அறிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, 
இலங்கை ரூபாய் 76 பில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்துள்ளது.2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தொலைத்தொடர்பு சேவையை லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) ஆரம்பித்தது.இதன்மூலம் 1.5 மில்லியன் பாவனையாளர்களைத் தன்னகத்தே கொண்ட பிரமாண்டமான MVNO சேவையைக் கொண்ட நிறுவனமாக லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile) உருவெடுத்தது.
இதுவே ஸ்பெயினின் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைக்கா நிறுவனத்தின் ஸ்பெயின் வலையமைப்பைக் கொள்வனவு செய்வதற்கு ஏதுவாக அமைந்தது.இந்தப் பரிவர்த்தனை 
குறித்து லைகா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா 
சுபாஸ்கரன் தெரிவிக்கையில், “நாங்கள் ஸ்பெயினுக்குள் நுழைந்தபோது, நாட்டின் மிகப் பெரிய MVNO ஐ அதிஉயர் தரமான 
சேவையாகவும் குறைந்த 
கட்டணத்திலான தொலைத்தொடர்புச் சேவையாகவும் கட்டியெழுப்ப வேண்டும் என்றே கனவு கண்டோம். அந்தக் கனவு
 நனவாகி இப்போது அந்த பணியில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறினார்.இதன் மூலம் ஸ்பெயினில் லைக்கா தொலைத்தொடர்புச் சேவையை 
மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம் கொள்வனவு செய்வதென்பது, லைக்காவின் உலகளாவிய வெற்றியை 
உறுதிப்படுதிப்படுத்தி உள்ளது.அத்துடன் மாஸ்மோவில் (Masmovil) நிறுவனம், லைகா மொபைல் இலட்சினையை (Brand) நீண்ட காலத்துக்குத் தக்கவைத்துக் கொள்ள இணங்கியிருப்பது, லைக்காவின் நிறுவனத்தின் பெருமிதமாகவும் கொள்ளப்படுகின்றது” என்றும் 
அவர் கூறினார்.
லைக்கா நிறுவனம் தொடர்ந்தும் உலக அளவில் 23 நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தைகளில் பிரமாண்ட செயற்பாட்டை தக்கவைத்துள்ளதுடன், புதிய நாடுகளில் தனது சேவையை விரிவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.ஸ்பெயின் நிறுவனத்தை விற்பனை செய்த அதேநேரம், உகண்டாவிலும் தனது 
புதிய வலையமைப்பை லைக்கா ஆரம்பித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும், பின்னரும் அவர்களிற்கு நிதியுதவியளித்த விமர்சனம் லைக்கா மீது வைக்கப்பட்டு வருவதும் 
குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



செவ்வாய், 3 மார்ச், 2020

இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இலங்கைப் பெண் குமுறல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான முதல் இலங்கையர் இத்தாலியில் வைத்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன்னர் அவர் இலங்கை அதிகாரி ஒருவருடன் உரையாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அந்தவகையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட
 இலங்கை பெண், குறித்த காணொளியில் கண்ணீருடன் தெரிவித்துள்ளதாவது, “எனக்கு தலைவலியும் காய்ச்சலும் காணப்பட்டது. சாதாரண தலைவலி, காய்ச்சல் என நினைத்துக்கொண்டிருந்தேன். வேதனை அதிகரித்த பட்சத்திலே நான் வைத்தியசாலை
 சென்று சிகிச்சைப்பெற முயற்சித்தேன்.இதன்போதுதான், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருந்ததை 
வைத்தியர்கள் அறிவித்தனர்.இத்தாலி நாட்டிற்கு வந்து சுமார் 10 வருடங்கள் கடந்துவிட்டன. நான் பணிபுரியும் வீட்டில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 
அறிவித்தார்கள்.அவர்களிடமிருந்து எனக்கும் தொற்றியதாக அறியக் கிடைத்தது.கொரோனா வைரஸ் தொற்றுக்கு
 உள்ளான அந்த பெண் பிரிதொரு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். என்னை பார்வையிடுவதற்கு 
எவரையும் வைத்தியசாலை நிர்வாகம் அனுமதியளிக்கவில்லை. எனது கணவரை கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என இலங்கை அதிகாரியிடம் அப்பெண் 
குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இலங்கையின் ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் ஏனைய தரப்பினர் உங்கள் (இலங்கை பெண்) தொடர்பாக 
அக்கறையுடன் செயற்படுவதாகவும் இலங்கை 
மக்கள் அனைவரும் நீங்கள் நலம்பெற வேண்டுமென்பதில் அக்கறையுடன் அவதானித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஆகையினால், அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் இலங்கையிலிருந்து உரையாற்றிய அதிகாரி 
இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>