நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 13 மார்ச், 2020

பிரித்தானியா கொரோனாவில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசின் திட்டம்

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள 
நிலையில், பிரித்தானியா அரசாங்கம் இது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் உயிரிழப்புக்கள் நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவில் பல பகுதிகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
பாடசாலைகளை மூடுவது மற்றும் பெரிய அளவில் மக்கள் கூடுவதைத் தடை செய்வது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்யப் பணிப்பது போன்றவை இன்று அறிவிக்கலாம் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குளிருடன் இணைந்த
 அதிகரித்த வெப்பநிலை உடலில் இருந்தால் மக்களை வீட்டிலேயே இருக்கவேண்டும் என்று பரிந்துரைக்கலாம் என ஸ்கொட்லாந்துக்கான அமைச்சர் அலிஸ்ரர் ஜாக் (Alister Jack) தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவில் இப்போது 460 பேருக்கு கொரோனா வைரஸ்
 உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 இங்கிலாந்தில் 387, ஸ்கொட்லாந்தில் 36, வடக்கு அயர்லாந்தில் 18 மற்றும் வேல்ஸில் 19 என்ற எண்ணிக்கையில் நோயாளர்கள் உள்ளனர்.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 460 பேர் 
பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக