நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 27 ஜூன், 2016

இங்கிலாந்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வேண்டுகோள்!!

வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்தை ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது.
வெளியேற முடிவு
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இதன்காரணமாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 
முடிவாகி விட்டது.
உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த முடிவை உடனடியாக செயல்படுத்தி விட முடியாது. இதற்கான நடவடிக்கைகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும். பொது வாக்கெடுப்பு முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோன 
பிரதமர் டேவிட் கேமரூன்
, அக்டோபர் மாதம் பதவி விலகுகிறார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதால் ஏற்படுகிற பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை புதிய பிரதமரிடம் விட்டுச்செல்வதாக அவர் அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமர் பதவி ஏற்றபின்னர்தான் இது தொடர்பான நடவடிக்கைகள் சூடு பிடிக்கும்.
‘இந்த வாரம் தொடங்குக’
ஆனால் ஐரோப்பிய யூனியனுக்கு அதுவரை காத்திருக்க பொறுமை இல்லை. 
இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் மார்ட்டின் சூல்ட்ஸ், ஜெர்மன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 
கூறியதாவது:–
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் டேவிட் கேமரூன் இந்த வாரம் தொடங்கி விட வேண்டும். வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொங்கலில் விடுவது இன்னும் அதிகளவில் பாதுகாப்பற்ற சூழலையும், வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடும். 
கன்சர்வேடிவ் கட்சியின் தந்திர உபாயங்களை செயல்படுத்துவதற்கு தயங்கினால், அது எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தும். ஆகவேதான், அந்த முடிவை உடனே இங்கிலாந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியன் கூடுகிறது
ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் 6 நிறுவன நாடுகளின் (பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்டவை) வெளியுறவு மந்திரிகள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பெர்லின் நகரில் கூடி விவாதித்தபோது, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை இங்கிலாந்து துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது
 நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே இங்கிலாந்து வெளியேறும் விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் நாளையும், நாளை மறுதினமும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) விவாதிக்க உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 24 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு ஆரம்பம்

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பது தொடர்பான பொதுவாக்கெடுப்பு லண்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இதேவேளை லண்டனில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிக்க கோரும் தலைவர்களும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தலைவர்களும் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றனர்.
அதில் குடியேற்றம், பொருளாதாரம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் இரு தரப்பினருக்கும் இடையே காரசார விவாதம்
 ‌நடைபெற்றது.
தேவைய‌ற்ற அச்சத்தை பரப்புவதாகவும் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் இரு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் முன் 
வைக்கப்பட்டன.
இந்த வாக்களிப்பிற்காக 46,499,537 பேர் தகுதி பெற்றுள்ள நிலையில் இங்கிலாந்து வரலாற்றில் இத்தகைய எண்ணிக்கையான மக்கள் வாக்களிப்பது இதுவே முதன்முறையாகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 13 ஜூன், 2016

தரையிறங்கும்போது விமானம் விழுந்து நொருங்கி இருவர் பலி!

அமெரிக்காவில் டென்னிசி மாகாணத்தில் ஒரு குட்டி விமானம் காலேஜ்டேல் விமான நிலையம் நோக்கி நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி மதியம் 12.50 மணிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மொத்தம் 4 பேர் இருந்தனர்.
அந்த விமானம் தரையிறங்கும்போது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் எர்லாங்கர் மெடிக்கல் சென்டருக்கு எடுத்து செல்லப்பட்டனர்.
இது தொடர்பாக காலேஜ்டேல் விமான நிலைய போலீஸ் செய்தி தொடர்பாளர் டான்யா சட்லர் கூறும்போது, “படுகாயம் அடைந்தவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு 
அறுவை சிகிச்சை 
செய்யப்பட உள்ளது. இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது, வெளிநபர்கள் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை” என்றார்.
விபத்துக்குள்ளான விமானம் ஒற்றை என்ஜின் கொண்டது. அதில் பயணம் செய்தவர்கள் பற்றிய அடையாளம் உடனடியாக 
தெரியவரவில்லை.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான விசா அற்ற போக்குவரத்து உடன்படிக்கை கனடா,?

கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இடையில் எதிர்வரும் ஜுலை மாதத்திற்கு முன்னதாக விசா அற்ற  போக்குவரத்து தொடர்பான உடன்படிக்கைக்கு மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளில் பல்கேரியா, 
ரோமானியா
 இவ்விரு நாடுகளும் கனேடிய விசா பெறவேண்டிய நிலையில் உள்ளன. இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கும் கனேடிய விசா பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனினும் இவ்விரு நாடுகளும் விசா விலக்களிப்பை பெறுவதற்குரிய தகுதிகளைக் கொண்டிருக்கவில்லை என கனடா கூறி வருகின்றது. குறிப்பாக இவ்விரு நாடுகளிலும் இடம்பெறும் ஊழல்கள் காரணமாக கூறப்படுகின்றது.
இது குறித்து தீர்மானம் கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதிக்கு 
முன்னதாக திர்மானம்
 எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதிக்கு முன்னதாக தீர்மானம் எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு தீர்மானம் எடுக்காத பட்சத்தில்; கனேடியர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளிற்குச் செல்வதற்கு விசா பெறவேண்டிய நிலை ஏற்படலாம் என்று கருதப்படுகின்றது.
எனவே எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

சனி, 11 ஜூன், 2016

ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் விலகினால் உடைந்துவிடும்!!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு பிரிட்டன் வாக்களித்தால், ஐரோப்பா ஒன்றியம் உடைய வாய்ப்பாக அமைந்துவிடும் என சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலோசனை
 கூறியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையராக கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மார்கட் வால்ஸ்ட்ராம், பிரிட்டன் வெளியேறினால் இது மற்ற நாடுகளிலும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த தூண்டுதலாக அமையும் என கூறியுள்ளார்.
பிபிசி பேட்டியில் ஒன்றில் பேசிய வால்ஸ்ட்ராம், மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி வந்தாலும் அதன் விளைவுகள் மோசமானதாகவே இருக்கும் என்றார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருப்பதற்கு ஆதரவாக வாக்களித்தால், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற நாடுகள் தங்கள் உறுப்பினர் விதிகளில் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்தும், அதன் நிறுவனங்கள் குறித்தும் அவர் தெரிவித்த கவலைகள் ஐரோப்பாவின் பல தலைநகரங்களில் ஏற்கனவே வெளிவந்த கருத்துக்களை
 எதிரொலிக்கின்றன.
பிரிட்டனில் இந்த வாக்கெடுப்பு நடக்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே இருக்கும் நிலையில், இந்த வாக்கெடுப்பு குறித்த கருத்துக் கணிப்புகள் போட்டி முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருக்கும் என்று கோடிகாட்டுகின்றன.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 5 ஜூன், 2016

உலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனை லண்டனில் ?

உலகிலேயே விலை உயர்ந்த விமான டிக்கெட்டை எதிகாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.53 லட்சத்திற்கும் மேல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது (ரூ.53,52,398). லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்று வர இந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த டிக்கெட்டுக்கு தி ரெஸிடென்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ஏர்பஸ் ஏ380 ரக விமானத்தில் 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது.
125 சதுரஅடி அளவில் சிங்கிள் மற்றும் டபுள் பெட் வசதியுடன் அறைகள் ஒதுக்கப்படுகின்றன.
விமானத்தில் விலை உயர்ந்த உணவுகளை சமைப்பதற்காக சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட சமையல் கலைஞரும் பயணம் முழுவதும் இருப்பார்.
இதுதவிர, இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
அதாவது, அதிநவீன பாத்ரும், 32-இன்ச் பிளாட் எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான டைனிங் டேபிள்கள், தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில்
 இடம்பெறுகின்றன.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



புதன், 1 ஜூன், 2016

அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை!

சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள், பொருதாளதார அங்காடிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
கோடை காலத்தினை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம்.
எனினும், ஐரோப்பிய நாடுகளில் அண்மைய காலங்களில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடவடிக்கையினை
 விரிவுபடுத்தியுள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் உள்ளிட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த எச்சரிக்கையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும் என மேலும் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>