நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 27 ஜூன், 2016

இங்கிலாந்துக்கு ஐரோப்பிய பாராளுமன்றம் வேண்டுகோள்!!

வெளியேறும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இங்கிலாந்தை ஐரோப்பிய பாராளுமன்றம் வலியுறுத்தி உள்ளது.
வெளியேற முடிவு
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பாக இங்கிலாந்தில் நடந்த கருத்தறியும் பொதுவாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள், வெளியேற ஆதரவு தெரிவித்தனர். இதன்காரணமாக, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது 
முடிவாகி விட்டது.
உலக அளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய இந்த முடிவை உடனடியாக செயல்படுத்தி விட முடியாது. இதற்கான நடவடிக்கைகள் முடிய 2 ஆண்டுகள் ஆகும். பொது வாக்கெடுப்பு முடிவால் அதிர்ச்சியில் உறைந்துபோன 
பிரதமர் டேவிட் கேமரூன்
, அக்டோபர் மாதம் பதவி விலகுகிறார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதால் ஏற்படுகிற பிரச்சினைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேசுவதை புதிய பிரதமரிடம் விட்டுச்செல்வதாக அவர் அறிவித்துள்ளார். எனவே புதிய பிரதமர் பதவி ஏற்றபின்னர்தான் இது தொடர்பான நடவடிக்கைகள் சூடு பிடிக்கும்.
‘இந்த வாரம் தொடங்குக’
ஆனால் ஐரோப்பிய யூனியனுக்கு அதுவரை காத்திருக்க பொறுமை இல்லை. 
இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் மார்ட்டின் சூல்ட்ஸ், ஜெர்மன் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் 
கூறியதாவது:–
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவது தொடர்பான நடவடிக்கைகளை பிரதமர் டேவிட் கேமரூன் இந்த வாரம் தொடங்கி விட வேண்டும். வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்து விட்ட நிலையில், அதற்கான நடவடிக்கையை எடுக்காமல் தொங்கலில் விடுவது இன்னும் அதிகளவில் பாதுகாப்பற்ற சூழலையும், வேலை வாய்ப்புகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி விடும். 
கன்சர்வேடிவ் கட்சியின் தந்திர உபாயங்களை செயல்படுத்துவதற்கு தயங்கினால், அது எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தும். ஆகவேதான், அந்த முடிவை உடனே இங்கிலாந்து அரசு செயல்படுத்த வேண்டும் என்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐரோப்பிய யூனியன் கூடுகிறது
ஏற்கனவே ஐரோப்பிய யூனியனின் 6 நிறுவன நாடுகளின் (பெல்ஜியம், பிரான்ஸ் உள்ளிட்டவை) வெளியுறவு மந்திரிகள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பெர்லின் நகரில் கூடி விவாதித்தபோது, ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறும் நடவடிக்கையை இங்கிலாந்து துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியது
 நினைவுகூரத்தக்கது.
இதற்கிடையே இங்கிலாந்து வெளியேறும் விவகாரம் குறித்து ஐரோப்பிய யூனியன் நாளையும், நாளை மறுதினமும் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை) விவாதிக்க உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக