நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களின் !


 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.

எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மூலம் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தாது, எதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனையும் அறியாது புகலிடக் கோரி;க்கையாளர்கள் துன்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதானது அவர்களின் சிவில் மற்றும் அடிப்படை உரிமை மீறலாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மெல்பர்ன் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தடுத்து

 வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிந்த ஒருவரே இவவ்hறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மெய்யான புகலிடக் கோரிக்கையாளர் என அடையாளம் காணப்பட்ட போதிலும், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 50க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மெல்பர்ன் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

சனி, 26 அக்டோபர், 2013

ஜப்பானை தாக்கிய பூகம்பம்-ரிக்டர் அளவு 7.3


நில அதிர்வுகளுக்கு பெயர் பொன ஜப்பானை வெள்ளியன்று ஒரு நில நடுக்கம் தாக்கியது.இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆயினும் இதுவரை சேதம் எதுவும் ஆனதாக தகவல்கள் இல்லை.
ஏற்கனவே 2011-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் ஜப்பான் நிர்மூலமானது குறிப்பிடத்தக்கது

புதன், 23 அக்டோபர், 2013

திருமணப் பந்தத்தில் இணைந்த இரு இளம் பெண்கள்


பீகார் மாநிலத்தில் இரண்டு இளம்பெண்கள் அவர்களின் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிப்பருவம் முதலே நெருங்கிய தோழிகளாக இருந்த இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது.
இவர்களின் இந்த நெருக்கத்தை கண்டித்த பெற்றோர்கள், இவர்களை பிரிக்க முயற்சி செய்துள்ளனர். ஆண் - பெண் காதலை போன்று அனைத்து பிரச்சனைகளையும் சந்தித்த இவர்கள் அக்டோபர் மாதம் 4ம் திகதி வீட்டை விட்டு வெளியேறினர்.

இச்சம்பவத்திற்கு பின்னர் இரு பெண்களில், ஒரு பெண்ணின் பெற்றோர் மற்றொரு பெண் வீட்டார் மீது கடத்தல் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து இரண்டு பெண்களையும் தேடிவந்த பொலிசார் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டு, விடுதி ஒன்றில் வசித்துவருவதை தெரிந்துக்கொண்டனர்.

அவர்களது செல்போனை வைத்து இவர்களை கண்டுப்பிடத்த பொலிசார் இருவரையும் பாட்னா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

செவ்வாய், 22 அக்டோபர், 2013

கூடங்குளத்தில் மின் உற்பத்தி ஸ்டார்ட்!


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.

இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பின்னா் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வந்தன.

இதனைத் தொடா்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
 

திங்கள், 21 அக்டோபர், 2013

ஈராக்கில் இரட்டை குண்டுவெடிப்பு: 49 பேர் பலி

 
 பாக்தாத்தில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல்களில் .
ஈராக்கின் பாக்தாத் நகரில் ஷியா இஸ்லாமிய மக்கள் நிறைந்துள்ள அல்-அமில் பகுதியை ஒட்டிய ஒரு சிற்றுண்டி சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது.
அனைவரும் தொலைக்காட்சியில் சாக்கர் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிற்றுண்டி சாலையின் வாசல் பகுதியில் திடீரென புகுந்த வெடிகுண்டுகள் நிரம்பிய சிறுபேருந்து ஒன்று சாலையின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இதில் 37 பேர் உயிரிழந்தனர், 42 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று பாக்தாத்தின் மேற்கு பகுதியில் அமிரியாஹ் எனும் இடத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதல்களுக்கு

பொறுப்பேற்கவில்லை, ஆனால் தங்களுக்கு எதிராக சன்னி இனத்தவர்களே இத்தாக்குதல்களை நடத்தியதாக ஷியா அமைப்பினர் கருதுகின்றனர்.
இந்தாண்டு மட்டும் ஈராக்கில் இதுபோன்ற தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த 2006-07 காலகட்டங்களில் வன்முறை சம்பங்கள் முடிவை எட்டிய நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கழிப்பறை செயல்படாததால் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய


ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 டிரீம்லைனர் விமானம் மாஸ்கோவிலிருந்து டோக்கியோவிற்கு 141 பயணிகளுடன் நேற்று முன்தினம் மாலை புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம் விமானத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என்ற புகார் எழுந்தது. ஊழியர்கள் சோதனையிட்டபோது மின்னணுக் கோளாறினால் இந்தத் தடங்கல் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

தொலைதூரப் பயணத்தில் பயணிகளுக்கு ஒரு கழிப்பறை செயல்படாமல் இருப்பது அசௌகரியத்தை அளிக்கும் என்று கருதிய விமான நிறுவனம், விமானத்தை மீண்டும் மாஸ்கோவிற்கே திருப்புமாறு தகவல் அளித்தது. எனவே, புறப்பட்ட ஐந்து மணி நேரத்தில் மீண்டும் தரையிறங்கிய விமானத்தை தொழில்நுட்ப வல்லுனர்கள் சரி செய்ததாக விமான நிறுவனத்தின் தகவல் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு வர்த்தக உலகில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே ட்ரீம்லைனர் விமானங்கள் தொடர்ந்து ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. பாட்டரியில் ஏற்பட்ட தீயினால் இந்த உயர்ரக வகை விமானங்கள் நடுவில் சிறிது காலம் இயக்கப்படாமல் இருந்தன.

போயிங் நிறுவனத்தின் வர்த்தக எதிரியான ஏர்பஸ் நிறுவனத்துடன் ஜப்பான் ஏர்லைன்ஸ் இந்த வாரம் 9.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனப் பங்குகள் நேற்று காலை வரை 2.1 சதவிகிதம் விற்பனை மதிப்பில் உயர்ந்து காணப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 10 அக்டோபர், 2013

2 சுரங்க தொழிலாளர்கள் உயிருடன் 10 நாள்களுக்குப் பின்பு மீட்பு


 
சீனாவில் சுரங்க விபத்தில் சிக்கிய 2 தொழிலாளர்கள் 10 நாள்களுக்கு பிறகு செவ்வாய்க்கிழமை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் காணாமல் போன 10 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி சீனாவில் உள்ள பென்யாங் நகர நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 12 தொழிலாளர்கள் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், காணாமல் போனவர்களில் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரை மீட்புக்குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிருடன் மீட்டனர்.

அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பதாகவும். உயிருக்கு ஆபத்து உண்டாகும் எந்த பிரச்னையும் இல்லை என்றும் சுரங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ளூர் மருத்துவ மனையில் அவர்கள் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.{புகைப்படங்கள்,}

 

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

விமானம்திடீரென விழுந்து நொறுங்கியது !

                                                            
தீவிரவாதிகளின் சதி காரணமா? கொலம்பியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

அமெரிக்க இராணுவ படைக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு டிஹெச் 8 என்ற சிறிய ரக விமானம் ஒன்று கொலம்பியா வழியாக சென்றது.

இதில் விமானி உட்பட 6  பேர் பயணம் செய்தனர். பனாமா எல்லை பகுதி கொலம்பியா கபூர்கானா நகரம் அருகே அதிகாலை 1 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.

இதில் அமெரிக்கர்கள் 4 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆபத்தான நிலையில் பொகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற கொலப்பிய இராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது மர்மமாக உள்ளது, கொலம்பியா தீவிரவாதிகள் யாராவது விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரான்சில் கடிகார திருடர்கள் கைது


பிரான்சில் ஆடம்பர கடிகாரத்தை திருடியதற்காக மூன்று நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சின் தலைநகரான பாரீசில் உள்ள ஆரம்பரக் கடையில் நேற்று இந்த திருட்டானது நடைபெற்றுள்ளது.

இவர்களை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களில் ஒருவர் ரோமானிய நாட்டையும், மற்றொருவர் மால்டோவா நாட்டையும் சேர்ந்தவர்கள் ஆவார்.

மேலும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் ஆயிரக்கணக்கான யூரோக்கள் மதிப்புள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்

சனி, 5 அக்டோபர், 2013

பிரமிக்க வைத்த கொள்ளை!!! (காணொளி புகைப்படங்கள் )


நேற்று வெள்ளிக்கிழமை இது வரை நிகழ்ந்திராத மாதிரியான பிம்மிப்பை ஊட்டும் கொள்ளை ஒன்று நடந்துள்ளது. கிட்டத்தட்ட 15 கொள்ளைக்காரர்கள் வெள்ளி மதியம் பரிஸ்  2, rue de la Paix  இலிருக்கும் ஆபரணம் மற்றும் அதியுச்சப் பொறுமதியுள்ள ஆடம்பரக் கடிகாரங்களின் விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளை அடித்துள்ளனர். 20ற்கும் மேற்ப்பட்ட ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கில் பெறுமதி உள்ள கடிகாரங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு நடந்தே தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் இருவர் மட்டும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியான கொள்ளை இதுவரை நடந்ததில்லை எனக் கூறியுள்ளனர்.

இத்துணிகரக் கொள்ளை பகல் 11h35 ற்கு நடந்துள்ளது. இதில் கொள்ளையடிக்கப்பட்ட கடிகாரம் ஒன்று மட்டுமே பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியானது எனக் கூறப்படுகின்றது. இக்கொள்ளை நடந்த இடம் பரிசில் உள்ள நீதி அமைச்சகத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது.

2, rue de la Paix  இலுள்ள இந்த வருட ஆரம்பத்திலேயே புதிதாகத் திறக்கப்பட்ட  Vacheron Constantin கடையினுள் 11h35 அளவில் மிகவும் அழகாகவும் கௌரவமாகவும் உடையணிந்த இருவர் கடிகாரம் வாங்குவது போல் நுழைந்துள்ளார்கள். இரு கண்காணிப்பு ஒளிக்கருவிகளால் கண்காணிக்கப்படும் பாதுகாப்புக் கதவு இவர்களுக்காகத் திறக்கப்பட்டதும் இவர்கள் அந்தக் கதவை திறந்தபடியே பிடித்திருக்க மூன்றாவதாக ஆயுதத்துடன் நுழைந்த இவர்களின் கூட்டாளி மேலும் முகம் மூடிய கவசம் அணிந்தபடி கோடரிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் தாங்கிய ஆறுபேரை உள்ளே நுழைய விட்டுள்ளார். இவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளைச் சிதற உடைத்தும் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளை உடைத்தும் அதியுச்சப் பெறுமதி வாய்ந்த 20 கடிகாரங்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

வெளியில் நின்ற முகமூடி அணிந்த மேலும் ஆறுபேர் கொள்ளயைடித்து வந்தவர்கள் தப்பிச் செல்வதற்காகப் புகைக் குண்டுகளை வீசி அவ்விடத்தினை எதுவும் தெரியாதபடி மறைத்தனர். இந்த அணி Boulevard Haussmann நோக்கித் தப்பியோடியதாகச் சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த பெண் விற்பனையாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் வைத்திய சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 கொள்ளையைத் தொடர்ந்து அங்கு வந்த காவற்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர் (Brigade anti-criminalité - BAC) வாகனத்தில் துரத்தியதில் கொள்ளை நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள rue d'Anjou மற்றும் boulevard Haussmann சந்திக்கும் புள்ளியில் இரு கொள்ளையைரைக் கைது செய்துள்ளனர். இவர்களை Brigade de répression du banditisme (BRB) எனப்படும் கொள்ளையர் கூட்டத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெரிய சுத்தியலும் கோடாரி ஒன்றும் அருகிலுள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளை முறை மிகவும் புதிய நடைமுறையாக உள்ளது எனக் காவற்துறை அத்தியட்சர் Vincenti தெரிவித்துள்ளார். 'இது ஒரு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் அணி' என பிரான்ஸ் நகைக் கடைகள், ஆபரணம் செய்யும் இடம், முத்துக்கள், ரத்தினக் கற்கள்  பாதுகாப்பு ஒன்றியத்தின் (l'Union française de la bijouterie, joaillerie, orfèvrerie, des pierres et des perles - UFBJOP) சார்பில்  Jacques Morel தெரிவித்துள்ளார்..


 
 
 

வியாழன், 3 அக்டோபர், 2013

புவி வெப்பமடைவதற்கு மனித செயற்பாடுகளே காரணம்: ஐ.நா!


தற்போது புவி வெப்பமடைந்து வருவதற்கு மனிதச் செயற்பாடுகள் காரணம் என்பது உறுதியாகத் தெரிவதாக ஐ.நா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாறிவரும் உலகப் பருவநிலை தொடர்பான சர்வதேச நிபுணர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், புவி வெப்பமடைந்து வருவதற்கான முக்கியக் காரணம் மனிதச் செயற்பாடுகள்தான் என்பது விஞ்ஞானிகளுக்கு 95% உறுதியாகத் தெரிவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டின் கடைசியில் உலகக் கடல் மட்டம் தற்போது உள்ள அளவிலிருந்து 82 செண்டிமீட்டர்கள் உயரலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சட்டரீதியான உடன்பாடு ஒன்றை எட்டுவதற்கு அரசாங்கங்கள் முயன்றுவரும் நிலையில், விஞ்ஞானிகளின் இந்த அறிக்கை மிகவும் அவசியமானது என ஐ.நா செயலாளர் பான் கீ மூன் இந்த நிபுணர் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

உலகப் பருவநிலை தொடர்பான ஐ.நா உச்சிமாநாடு ஒன்றை அடுத்த வருடத்தில் தான் நடத்தப்போவதாக அவர் கூறியுள்ளார்.
புவியின் சராசரி வெப்பநிலை இரண்டு பாகை செல்ஷியஸுக்கும் கூடுதலாக அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கங்களை சம்மதிக்க வைப்பதென்பது இந்த மாநாட்டின் இலட்சியமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 2 அக்டோபர், 2013

தலிபான்களுக்கு அலுவலகம் பாகிஸ்தானில்


 தலிபான்களுக்கு அலுவலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான்கான் பாகிஸ்தானில் தொலைகாட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி அளித்துள்ளார்.
 
அதில், பாகிஸ்தானில் அமைதி நிலவ வேண்டுமானால் தலிபான்கள் பாகிஸ்தானில் அலுவலகம் அமைத்து செயல்படுவதை அனுமதிக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தையும், ஜனநாயக நடைமுறைகளையும் அவர்கள் பின்பற்றாவிட்டால்தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தான் தலிபான் இயக்கத்தினர் அலுவலகம் தொடங்குவது தொடர்பாக ஊடகங்கள் காட்டி வரும் விமர்சனம் பாரபட்சமானது.

மேலும் அவர்களுடன் நிபந்தனைகள் அற்ற பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ராணுவமும், அரசியல் கட்சிகளும் பாரபட்சமாக நடந்து
கொள்ள கூடாது.

பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 1 அக்டோபர், 2013

7 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு


அமெரிக்க அரசாங்கத்தின் சேவைகளில் ஒரு பகுதி ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குடியரசு கட்சி தலைமையிலான அந்நாட்டு பிரதிநிதிகள் சபை அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றாமையே அதற்கு காரணமாகும்.
இதற்கமைய அமெரிக்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்தது.

இந்த நிலையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பபப்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டாலும், அவர்களுக்கான சம்பளத்தை மீளச் செலுத்துவது தொடர்பில் எவ்வித உறுதிப்பாடும் இல்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க குடியரசுக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்திய சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என அந்த கட்சி நிபந்தனை முன்வைத்துள்ளது