நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 5 அக்டோபர், 2013

பிரமிக்க வைத்த கொள்ளை!!! (காணொளி புகைப்படங்கள் )


நேற்று வெள்ளிக்கிழமை இது வரை நிகழ்ந்திராத மாதிரியான பிம்மிப்பை ஊட்டும் கொள்ளை ஒன்று நடந்துள்ளது. கிட்டத்தட்ட 15 கொள்ளைக்காரர்கள் வெள்ளி மதியம் பரிஸ்  2, rue de la Paix  இலிருக்கும் ஆபரணம் மற்றும் அதியுச்சப் பொறுமதியுள்ள ஆடம்பரக் கடிகாரங்களின் விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளை அடித்துள்ளனர். 20ற்கும் மேற்ப்பட்ட ஒவ்வொன்றும் இலட்சக் கணக்கில் பெறுமதி உள்ள கடிகாரங்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு நடந்தே தப்பிச் சென்றுள்ளனர். இவர்களில் இருவர் மட்டும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்படியான கொள்ளை இதுவரை நடந்ததில்லை எனக் கூறியுள்ளனர்.

இத்துணிகரக் கொள்ளை பகல் 11h35 ற்கு நடந்துள்ளது. இதில் கொள்ளையடிக்கப்பட்ட கடிகாரம் ஒன்று மட்டுமே பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியானது எனக் கூறப்படுகின்றது. இக்கொள்ளை நடந்த இடம் பரிசில் உள்ள நீதி அமைச்சகத்திலிருந்து நூறு மீட்டர் தொலைவிலேயே உள்ளது.

2, rue de la Paix  இலுள்ள இந்த வருட ஆரம்பத்திலேயே புதிதாகத் திறக்கப்பட்ட  Vacheron Constantin கடையினுள் 11h35 அளவில் மிகவும் அழகாகவும் கௌரவமாகவும் உடையணிந்த இருவர் கடிகாரம் வாங்குவது போல் நுழைந்துள்ளார்கள். இரு கண்காணிப்பு ஒளிக்கருவிகளால் கண்காணிக்கப்படும் பாதுகாப்புக் கதவு இவர்களுக்காகத் திறக்கப்பட்டதும் இவர்கள் அந்தக் கதவை திறந்தபடியே பிடித்திருக்க மூன்றாவதாக ஆயுதத்துடன் நுழைந்த இவர்களின் கூட்டாளி மேலும் முகம் மூடிய கவசம் அணிந்தபடி கோடரிகள் மற்றும் பெரிய சுத்தியல்கள் தாங்கிய ஆறுபேரை உள்ளே நுழைய விட்டுள்ளார். இவர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளைச் சிதற உடைத்தும் மேலும் விற்பனைக்கு வைத்திருந்த கடிகாரங்களின் கண்ணாடிகளை உடைத்தும் அதியுச்சப் பெறுமதி வாய்ந்த 20 கடிகாரங்களைக் கொள்ளையடித்துள்ளனர்.

வெளியில் நின்ற முகமூடி அணிந்த மேலும் ஆறுபேர் கொள்ளயைடித்து வந்தவர்கள் தப்பிச் செல்வதற்காகப் புகைக் குண்டுகளை வீசி அவ்விடத்தினை எதுவும் தெரியாதபடி மறைத்தனர். இந்த அணி Boulevard Haussmann நோக்கித் தப்பியோடியதாகச் சாட்சியங்கள் தெரிவித்துள்ளனர். அங்கிருந்த பெண் விற்பனையாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் வைத்திய சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

 கொள்ளையைத் தொடர்ந்து அங்கு வந்த காவற்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர் (Brigade anti-criminalité - BAC) வாகனத்தில் துரத்தியதில் கொள்ளை நடந்த இடத்திலிருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள rue d'Anjou மற்றும் boulevard Haussmann சந்திக்கும் புள்ளியில் இரு கொள்ளையைரைக் கைது செய்துள்ளனர். இவர்களை Brigade de répression du banditisme (BRB) எனப்படும் கொள்ளையர் கூட்டத் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் கிழக்கு ஐரோப்பிய நாட்டினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பெரிய சுத்தியலும் கோடாரி ஒன்றும் அருகிலுள்ள வீதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளை முறை மிகவும் புதிய நடைமுறையாக உள்ளது எனக் காவற்துறை அத்தியட்சர் Vincenti தெரிவித்துள்ளார். 'இது ஒரு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட கொமாண்டோத் தாக்குதல் அணி' என பிரான்ஸ் நகைக் கடைகள், ஆபரணம் செய்யும் இடம், முத்துக்கள், ரத்தினக் கற்கள்  பாதுகாப்பு ஒன்றியத்தின் (l'Union française de la bijouterie, joaillerie, orfèvrerie, des pierres et des perles - UFBJOP) சார்பில்  Jacques Morel தெரிவித்துள்ளார்..






 
 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக