நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 1 அக்டோபர், 2013

7 இலட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பாதிப்பு


அமெரிக்க அரசாங்கத்தின் சேவைகளில் ஒரு பகுதி ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குடியரசு கட்சி தலைமையிலான அந்நாட்டு பிரதிநிதிகள் சபை அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றாமையே அதற்கு காரணமாகும்.
இதற்கமைய அமெரிக்கா அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டுவதற்கு வழங்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்தது.

இந்த நிலையில் 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பபப்டுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டாலும், அவர்களுக்கான சம்பளத்தை மீளச் செலுத்துவது தொடர்பில் எவ்வித உறுதிப்பாடும் இல்லை என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அமெரிக்க குடியரசுக் கட்சி நிபந்தனையொன்றை முன்வைத்துள்ளது.

வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் ஜனாதிபதி ஒபாமா அறிமுகப்படுத்திய சுகாதார மறுசீரமைப்பு திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என அந்த கட்சி நிபந்தனை முன்வைத்துள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக