ஈராக்கின் பாக்தாத் நகரில் ஷியா இஸ்லாமிய மக்கள் நிறைந்துள்ள அல்-அமில் பகுதியை ஒட்டிய ஒரு சிற்றுண்டி சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அலைமோதியது.
அனைவரும் தொலைக்காட்சியில் சாக்கர் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சிற்றுண்டி சாலையின் வாசல் பகுதியில் திடீரென புகுந்த வெடிகுண்டுகள் நிரம்பிய சிறுபேருந்து ஒன்று சாலையின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இதில் 37 பேர் உயிரிழந்தனர், 42 பேர் படுகாயமடைந்தனர். இத்தகவலை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று பாக்தாத்தின் மேற்கு பகுதியில் அமிரியாஹ் எனும் இடத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 2 பேர் பலியாகினர், 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை எந்தவொரு அமைப்பும் இந்த தாக்குதல்களுக்கு
பொறுப்பேற்கவில்லை, ஆனால் தங்களுக்கு எதிராக சன்னி இனத்தவர்களே இத்தாக்குதல்களை நடத்தியதாக ஷியா அமைப்பினர் கருதுகின்றனர்.
இந்தாண்டு மட்டும் ஈராக்கில் இதுபோன்ற தாக்குதல்களில் 7000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2006-07 காலகட்டங்களில் வன்முறை சம்பங்கள் முடிவை எட்டிய நிலையில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக