நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 29 அக்டோபர், 2013

அவுஸ்திரேலியா புகலிடக் கோரிக்கையாளர்களின் !


 அவுஸ்திரேலிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிப்பதில்லை என அந்நாட்டு புகலிடச் செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் ட்ரவர் க்ரான்ட் தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை மதிக்க வேண்டுமேன அண்மையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.

எனினும், பிரதமர் டோனி அப்போட் தலைமையிலான புதிய அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களின் அடிப்படை உரிமைகளை உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் கால வரையறையின்றி தடுத்து வைக்கப்படுவதன் மூலம் உள மற்றும் உடல் ரீதியான பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளை அரசாங்கம் உதாசீனம் செய்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் சுமத்தாது, எதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதனையும் அறியாது புகலிடக் கோரி;க்கையாளர்கள் துன்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
கால வரையறையின்றி புகலிடக் கோரிக்கையாளர்களை தடுத்து வைப்பதானது அவர்களின் சிவில் மற்றும் அடிப்படை உரிமை மீறலாகும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கால வரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மெல்பர்ன் புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் தடுத்து

 வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிந்த ஒருவரே இவவ்hறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

மெய்யான புகலிடக் கோரிக்கையாளர் என அடையாளம் காணப்பட்ட போதிலும், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 50க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலனவர்கள் இலங்கைத் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னரும் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் மெல்பர்ன் முகாமில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக