கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட்டில் இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட இரண்டு அணு உலைகளை அமைத்துள்ளது.
இந்த அணு மின் நிலைய கட்டுமான பணி முடிந்து, மின் உற்பத்தி துவங்கும் நேரத்தில் இதற்கு எதிராக அந்த ஏரியா மக்கள் நடத்திய போராட்டத்தால் மின் உற்பத்தி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பின்னா் ஒரு வழியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கியதை அடுத்து மின் உற்பத்திக்கான பணிகள் நடைபெற்று வந்தன.
இதனைத் தொடா்ந்து இன்று அதிகாலை 2.45 மணிக்கு மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.முதல்கட்டமாக 75 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக